Published:Updated:

"விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

நா.கதிர்வேலன்

"விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

சுள்ளென்று இருக்கிறார் சூர்யா. 'மாற்றான்’ திருப்தியாக வந்த சந்தோஷத்தில், முறுக்கிய போலீஸ் மீசையில் 'சிங்கம் 2’-க்குத் தயாராகும் ஆர்வம் கண்களில் தெரிகிறது.

 ''இரட்டையர் படம்னு ஈஸியா சொல்றீங்க. ஆனா, அது அத்தனை ஈஸி இல்லைங்க. ஒட்டிப் பிறந்தவங்களைப் போய் பார்த்தேன். ஒண்ணு மலர்ந்து சிரிச்சா, இன்னொண்ணு முகம் சிவக்குது. ஒண்ணு தூங்கும்போது, அடுத்தது சத்தம் போட்டு அழுது அடம்பிடிக்குது. முதல்ல... இது பரீட்சைனு தோணுச்சு. அப்புறம் பார்த்தா, ஜாலி, கேலி, சந்தோஷம், வேதனை, ஆட்டம் பாட்டம்னு ஒரு எம்.ஜி.ஆர். பட பேக்கேஜ் வந்துடுச்சு. ஒரு வசனம் பேசுறதைக்கூட கே.வி.ஆனந்த் சார் சாதாரணமா எடுத்துக்க மாட்டார். நக்கலா, அலட்சியமா, கோபமா... தேவைப்படுற டோன்ல சொல்லவெச்சு, சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டுபோய்டுவார். 'மாற்றான்’ படத்தின் முதல் ரசிகன் நான்தான்.''

''சம்பளம், படங்களின் வியாபாரம், நல்ல அபிமானம்... ரஜினி, கமலுக்கு அடுத்த பட்டியலில்

"விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

வந்துட்டோம்னு தோணுதா?''

''நாம மரியாதை வெச்சிருக்கிறவங்களே, நம்மிடம் நீங்க நல்ல இடத்தில் இருக்கீங்கன்னு சொல்றப்போ, 'ஒழுங்கா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்’கிற திருப்தி வருது. ஆனா, அதுக்கு மேல தலையில எதையாவது ஏத்திக்கிட்டா, அது கஷ்டம். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லாப் படங்களும் ஹிட் ஆகணும். அதில் என் படங்களும் இருக்கணும். ஒரு ரசிகனா இதுதான் என் எதிர்பார்ப்பு. எனக்கு விஜய், அஜித் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கு. அவங்கவங்க பாதையில் அவங்கவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க. என்கிட்ட சோம்பேறித்தனம் கிடையாது. தந்திரம் இல்லை. கொஞ்சம் கோபப்படுவேன். அதை மட்டும் குறைச்சுக்கணும். இப்போ எல்லாத்தையும் காது கொடுத்துக் கேட்கிறேன். என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கேன். என் வெற்றி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்.''

''சிம்பு, தனுஷ், 'ஜெயம்’ ரவி, ஆர்யானு உங்களுக்கு அடுத்த வரிசையும் ஆரோக்கியமா இருக்கு. அவங்க படங்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?''

''அதெல்லாம் மதிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி வந்துட்டதா நான் நினைக்கலைங்க. '3’ படத்தில் தனுஷின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவ்வளவு எனர்ஜியோட இருந் தார் ஒவ்வொரு சீன்லயும். ஜாலியா நடிக்கி றதுன்னா அசால்ட்டா பின்றார் ஆர்யா. அவ ரால சீரியஸாவும் நடிக்க முடியும். அதை அவர் ட்ரை பண்ணிப் பார்க்கலாம். 'சுந்தரபாண்டி யன்’ல சசிகுமார் ரொம்ப யதார்த்தமா, லைவ்லியா நடிச்சிருக்கார். இதெல்லாம் போக... சமீபத்தில் பார்த்ததில் 'பர்ஃபி’ படம் ரொம்பப் பிடிச்சது. இவ்வளவு சின்ன வயசில் ரன்பீர் கபூர் அப்படி அசத்தியிருக்கிறதைப் பார்த்தா, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலையேனு தோணுது. இன்னும் நிறைய தூரம் போகணும்.''

''ஹீரோன்னா ஹீரோக்கள்பத்தி மட்டும்தான் பேசுவீங்களா... ஹீரோயின்கள்பத்தியும் பேசலாமே?''

"விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

''காஜல் ரொம்ப இன்டெலிஜென்ட். ரஷ்ய மொழியில் பேச வேண்டிய சூழலில் ரொம்ப சுலபமாக் கத்துக்கிட்டுப் பேசினாங்க.  'மாற்றான்’ல இரண்டு ஆண்கள். அவங்கள்ல ஒருத்தனோட பழகுற பொண்ணுனு கொஞ்சம் சிக்கலான கேரக்டர். அதை அவங்க சமாளிச்சு நடிச்ச விதம்... செம ஸ்மார்ட்!

அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. யாரும் அவங்ககிட்ட பழகலாம். எல்லார்கிட்டேயும் சமமாப் பழகுவாங்க. யோகா டீச்சர்ங்கிறதால ஹெல்த் டிப்ஸ் நிறையக் கொடுப்பாங்க. ஸ்ருதிகிட்ட இன்னும் நிறையத் திறமைகள் இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலா தனக்கான அடை யாளம் தேடிக்கிறது ஸ்ருதி ஸ்டைல். ஒரு சமயம் பாடினாங்க. அதில் நல்லா ட்யூன் பண்ணிட்டு மியூஸிக் ஆல்பம் வரைக்கும் வந்தாங்க. இப்போ பாருங்க... சினிமாவில் க்ளீன் க்ரீன் ஹீரோயினா வந்து நிக்கிறாங்க. சூப்பர்ல?!''