Published:Updated:

"பிரியமானவர்களுக்கு பிரியம் கொடுங்கள்!"

க.நாகப்பன்

"பிரியமானவர்களுக்கு பிரியம் கொடுங்கள்!"

க.நாகப்பன்

Published:Updated:
##~##

பாந்தம் சாந்தம் நிரம்பிய அம்மாவாகத் தமிழ்த் திரையில் வலம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன்... இப்போது ஒரு படத்தின் இயக்குநர். கமர்ஷியல் சினிமா சாயல் தொனிக்காமல் இரு பெண்கள், இயக்குநராகவும் கதை நாயகியாகவும் இணைந்து உருவாக்கும் 'ஆரோகணம்’ படத்துக்கு கோடம்பாக்க வட்டாரத்தில் கண்ணியமான எதிர்பார்ப்பு. லட்சுமியைச் சந்தித்தேன்.  

 ''வாழ்த்துகள்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நன்றி! இசையில் 'சரிகமபதநி’னு சொல்லும்போது ஸ்வரங்கள் மேலே சஞ்சரிச்சா, அது ஆரோகணம். கீழே இறங்கினா, அவரோகணம். ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் பாசிட்டிவ் நோட் இருக்கணும்னு 'ஆரோகணத்தை’யே தலைப்பா வெச்சிட்டோம். நான் இயக்குநர் ஆகியே தீர ணும்னு படம் பண்ணலை. என் வலியை யாரும் அனுபவிக்கக் கூடாதுன்னுதான் இந்த முயற்சி யில் இறங்கி இருக்கேன். அவங்க பேர்  வேண் டாம். என்கிட்ட ரொம்ப அன்பா, பாசமாப் பழகினாங்க. நல்லாக் கவிதை எழுதுவாங்க. அபாரமான க்ரியேட்டிவிட்டி அவங்களுக்குள்ளே இருந்துச்சு. ஆனா, அதை நான் புரிஞ்சுக்கலை. அவங்களிடம் போதிய

"பிரியமானவர்களுக்கு பிரியம் கொடுங்கள்!"

கவனமும் செலுத்தலை. ஒரு விபத்தில் அவங்க இறந்த பிறகுதான், அவங் களை நான் மிஸ் பண்ணேன். உயிரோடு இருந்த வரை நான் அவங்களைச் சரியாக் கவனிக்கலைனு குற்ற உணர்வு என்னை வாட்டுச்சு. முன்னாடியே அவங்க கவிதையை நான் சின்னதாப் பாராட்டிஇருந்தா, அந்த உற்சாகம் அவங்களை உயரத்துக்குக் கொண்டுபோய் இருக்கும். அவங்க வாழ்க்கையும் வேற மாதிரி இருந்திருக்கும். பிரமிப்போட பார்க்க வேண்டியவங்களை இப்படிக் கண்டுக்காம விட்டுட்டோமேனு மனசு கிடந்து தவிச்சது. அந்தத் தவிப்பை அப்படியே பதிவு பண்ணத்தான் இந்தப் படம். உங்களுக்குப் பிரியமானவங்களை முதல்முறை சந்திக்கும்போதோ, கடைசியாப் பிரியும்போதோ எப்படி அவங்களோட நேரம் செலவழிப்பீங்களோ, அப்படியே எல்லா மனிதர்களையும் நேசிங்க. இதைத்தான் இந்தப் படம் மூலமா சொல்லவர்றேன்.''  

''படத்தோட கதை என்ன?''

''தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் அம்மா, தன் குழந்தைகளை வளர்க்கப் போராடுறதுதான் கதை. படம் பார்க் கிற ஒவ்வொருத்தருக்கும் கதையோட ஏதோ ஒரு விதத் தில் தொடர்பு இருக்கும். நம்மைச் சார்ந்தவங்க,  நம்மையே உலகமா நினைச்சுட்டு இருக்கிறவங்க தன்னம்பிக்கையோட இருக்கணும்னு தோணவைக்கும். பெண்களின் படைப்பாக இருந்தாலும் படத்தின் 70 சதவிகிதம் ஆண்களைப் பாதிக்கும். சென்னைக் குப்பத்து மக்களின் வாழ்க்கையை ரொம்ப நெருக்கத்தில் இருந்து படமாக்கி இருக்கோம்.''

''ஒரு சினிமா இயக்குநராக உங்களை எப்படித் தகுதிப்படுத்திக்கிட்டீங்க?''

''நிறையக் குறும்படங்கள் எடுத்தேன். நான் கடைசியா எடுத்த குறும்படம் 'ரேடியோ’. அந்தப் படம் பல விருது களைக் குவிச்சது. நியூயார்க் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டது. அந்தப் படத்தை ரசிச்ச பலர், 'நீங்க இயக்கும் திரைப்படத்தை ஆவலோட எதிர்பார்க்கிறோம்’னு சொன்னாங்க. ஸ்க்ரிப்ட் எழுதி சீனியர் படைப்பாளிகள்கிட்ட காட்டி, திருத்தங்கள் செஞ்சு மெருகேத்தினேன். படங்களில் நடிக்கும்போது கண், காது எல்லாம் திறந்துவெச்சுப் பாடம் படிச்சுட்டே இருப்பேன். அந்த நாலு வருஷ அனுபவமும் பாடமும் தான் எனக்கான தகுதியும் நம்பிக்கையும்!''

''உதவி இயக்குநர் பயிற்சிகூட இல்லை. எந்தத் தைரியத் துல இறங்கினீங்க?''

'

"பிரியமானவர்களுக்கு பிரியம் கொடுங்கள்!"

'திடீர்னு ஒரு நெனைப்பு. நாம இதைப் பண்ணணும்னு இறங்கிட்டேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட் போனதும் ரொம்பப் பயந்துட்டேன். மிஷ்கின் சார்தான் தைரியம் கொடுத்தார். 'இவர் மாதிரி எடுக்கணும்... அவர் மாதிரி ஃப்ரேம் வைக்கணும்’னு எதையும் ஃபிக்ஸ் பண்ணிக் காதே. நீ எடுக்கிறதுதான் படம். நீ வைக்கிறதுதான் ஷாட். அப்போதான் படம் ஃப்ரெஷா இருக்கும்’னு சொன்னார். அந்தத் தைரியத்தில் படத்தை முடிச்சிட் டேன். 'நிறையப் பேர் குப்பத்துல ஆயுசுக்கும் வாழுறாங்க. நான் கொஞ்ச நாள் நடிக்கிறதுல என்ன கஷ்டம்’னு விஜி சொன்னாங்க. அதான் விஜி!

படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த இயக்குநர்கள் சொன்னதுதான் எனக்கான உற்சாகம். பாலசந்தர்சார், 'எனக்கு இன்னும் படம் பண்ண ஆசை வந்தி ருக்கு’னு சொன்னார். 'ஈரம்’ அறிவழகன் 'ரொம்பப்  பெருமையா இருக்கு’னுபாராட் டினார். வஸந்த் படத்தோட ப்ளஸ்எல்லாத் தையும் குறிப்பிட்டு ரொம்ப நேரம் மனசு விட்டுப் பேசினார். 'ஜெயம்’ ராஜா 'எனக்கு பத்து சந்தோஷ் சுப்பிரமணியம் பார்த்த மாதிரி இருக்கு’ன்னார். வானத்துல பறந்துட்டு இருக்கேன்!''