Published:Updated:

"இது காதலின் பொன்வசந்தம்!"

கி.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'' 'நீதானே என் பொன்வசந்தம்’ ஷூட்டிங் முடிஞ் சிருச்சு... 'கதை கேட்டப்போ இவ்ளோ ஃபீல் பண்ணலை பிரதர். இப்போ யோசிச்சா என் வாழ்க்கையின் காதல் எபிசோடுல மறுபடியும் வாழ்ந்துட்டு வந்த ஃபீலிங்’னு சொன்னார் ஜீவா. எடிட்டிங் டேபிள்ல ஆண்டனி பார்த்துட்டு, 'ஜி... பழசுலாம் ஞாபகம் வருது... நாளைக்கு எடிட் வெச்சுக்கலாமா?’னு மெல்ட் ஆகிட்டார். எடிட்டிங்ல பார்க்கும்போது எனக்கும் சட்டுனு பிளாங்க் ஆகிடுது. லவ் இஸ் ஃப்யூட்டிஃபுல்!' - காதலும் காதல் நிமித்தமுமாகப் பேசத் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கோடம்பாக்கத்தின் 'லவ் ஸ்பெஷல்’ இயக்குநர். 'அலைபாயுதே’, இளையராஜா, கமல், அகிரா குரோ சோவா, அஜித், சசிகுமார், ஆர்யா, சமந்தா என்றெல் லாம் நீண்ட உரையாடலில் தனது வாழ்வின் ரியல் காதல்பற்றிப் பேச்சு வந்தபோது ஒரு சஸ்பென்ஸ் வைத்தார் கௌதம். அது இறுதியில்...

 ''முதல் பார்வையிலேயே காதல், பிரிந்த காதலியைத் தேடிச் செல்லும் காதலன், தனக்குத்தானே குழம்பும் காதலி... இதெல்லாம் 'ழிணிறி’-யிலும் (நீதானே என் பொன்வசந்தம்) இருக்கும் தானே?'

"இது காதலின் பொன்வசந்தம்!"

''சந்தேகமே வேண்டாம். என் காதல் படங்களின் ஸ்ட்ரக்சர்ல பெருசா எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, மொமன்ட்ஸ்தான் விஷயம். சின்னச் சின்ன தருணங் களில்தான் காதல் ஒளிஞ்சிருக்கும். அந்தத் தருணங்களில்தான் நான் லைஃப் சேர்க்கிறேன். 'விடிவி’-ல த்ரிஷா ரொம்பக் குழம்புவாங்க. ஆனா, இதுல சமந்தா கேரக்டர் அப்படி இல்லை. ரொம்ப போல்டு. ரொம்ப க்ளியர். சும்மா லவ்வர் பின்னாடி வால் பிடிச்சுட்டே போறவ இல்லை. 'சிந்து பைரவி’ சுஹாசினி, 'புதுமைப் பெண்’ ரேவதியோட ஒப்பிடாதீங்க. ஆனா, காதலிகளில் சமந்தா கேரக்டர், ஒரு புதுமைப் பெண். சாய்ந்து சாய்ந்து சமந்தா பார்க்கிறதே தனி அழகு... ஜீவா கண்ல எப்பவும் காதல் நதி ஓடிட்டே இருக்கும். க்ளைமாக்ஸ்ல சமந்தா கேரக்டர் எடுக்கும் முடிவு, அத்தனை வருஷப் பிரிவுக்கு அப்புறம் ஜீவாவும் சமந்தாவும் பேசிக்கிற விஷயங்கள்... சும்மா காலி ஆயிடுவீங்க!''

''உங்களுக்குப் பிடிச்ச உலக லவ் கிளாஸிக் படங்கள் என்னென்ன?''

"இது காதலின் பொன்வசந்தம்!"

''இதுக்கு நேரடியா 'எந்தெந்தப் படத்துல இருந்து சீன் பிடிக்கிறீங்க?’னு கேட்ர லாமே. உலக சினிமாக்களாப் பார்த்து கதை, சீன்லாம் உருவிப் படம் எடுக்கிறேன்னு என்னைப்பத்தி வெளியே ஒரு பேச்சு இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா, நல்லாக் கவனிச்சீங்கன்னா புரியும், 'அலைபாயுதே’ படத்துல வரும் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டுதான் என் காதல் படங்களின் இன்ஸ்பி ரேஷன். ரெண்டு பேருக்குள் காதல், சின்ன மோதல், பிரிவு, தேடிப் போறான் லவ்வர். ஹேப்பி அல்லது சோகமான எண்ட். காதல்ல அவ்ளோதான் என் டிராவல் இருக்கும். மணி சார் படங்களைவிடவா நமக்கு வேற காதல்படங்கள் வேணும்? 'மௌன ராகம்’ படத்தின் கார்த்திக் போர்ஷன், 'இதயத்தைத் திருடாதே’, 'அலைபாயுதே’, ராஜ்கபூர் நடிச்ச 'ஆவாரா’... இதெல்லாம்தான் எனக்குப் பிடிச்ச லவ் கிளாஸிக்ஸ். மத்தபடி உலக சினிமாக்கள் பார்க்கிற பழக்கமே எனக்கு இல்லை. அகிரா குரோசோவாவின் ட்ரீட்மென்ட்பத்தி தெரியும். ஆனா, அவரோட 'ரோஷமான்’ உட்பட ஒரு படத்தைக்கூடப் பார்த்தது இல்லை. நான் உணர்ந்ததை, அனுபவிச்சதை வெவ்வேறு சம்பவங்கள் மூலமா சினிமா பண்றேன். 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டு எனக்குள் உண்டாக்கின எமோஷனுக்கு இன்னும் தாராளமா பதினஞ்சு படங்கள் எடுப்பேன்!''  

''உங்க இயக்கத்தில் நடிக்காத ஹீரோக்கள் பத்தி கமென்ட்ஸ் சொல்லுங்க?''

''அஜித்... அவருக்கு இருக்கிற மாஸ்... சான்ஸே இல்லை. அவருக்குக் கிடைக்கிற ஓப்பனிங் என்னைப் பிரமிப்படையவைக்கும். இத்தனைக்கும் அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஒரு படம்கூட அவருக்குக் கிடைக்கலை. 'உதயம்’ல நாகார்ஜுனா சைக்கிள் செயினைப் பிச்சு இழுக்கிற மாதிரியோ, 'பாட்ஷா’ல தங்கச்சி மேல கைவெச்சதும் ரஜினி தண்ணி பம்ப்பை உடைச்சு அடிக்கிற மாதிரியோ ஒரு பவர்ஃபுல் சீன்கூட அஜித்துக்கு இன்னும் சிக்கலை. விஜய்னா டான்ஸ்தான். ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒரு ஸ்டெப்ல இழுத்துப் பிடிச்சுடுறார். அவரைவெச்சு முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் ஃபிலிமே பண்ணலாம். 'பாஸ்’ படத்துல ஆர்யா காமெடி பண்ணியிருந்தது ரொம்பப் பிடிச் சிருந்தது. ஹீரோயின்கள்ல அஞ்சலி அசரடிக்கிறாங்க!''

"இது காதலின் பொன்வசந்தம்!"

''அஜித், விஜய் பத்தி இவ்ளோ நல்ல ஒப்பீனியன் சொல்றீங்க... ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ல அஜித், 'யோஹன்’ல விஜய்... உங்ககூட சேர்ந்து பண்ண வேண்டிய புராஜெக்ட்ல இருந்து ரெண்டு பேரும் விலகிட்டாங்களே... ஏன்?''

'' 'துப்பறியும் ஆனந்த்’ 1920-கள்ல நடக்கும் கதை. அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கே கிட்டத்தட்ட ஒரு வருஷம் தேவைப்படும். இப்போ அதுக்கான நேரம் இல்லை. அதனால அஜித்துடன் படம் பண்ண முடியலை. சூர்யாவை வெச்சுப் பண்ணலாம்னு 2013 மார்ச்ல இருந்து அவர்கிட்ட டேட்ஸ் வாங்கி அட்வான்ஸும் கொடுத்துட்டேன். ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ ஸ்க்ரிப்ட் இல்லை. ஆக்ஷனும் காதலும் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் அவருக்காகப் பண்ணிட்டு இருக் கேன். 'யோஹன்’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப இங்கிலீஷ் டைப் படமா இருக்கு. இன்னும் நம்ம ஸ்டைல் சேர்த்து கொஞ்சம் தமிழாப் பண்ணலாம்’னு சொன்னார் விஜய். அதனால அந்தப் படம் பண்ண முடியலை. இப்போ அதே ஸ்க்ரிப்ட்ல மகேஷ்பாபுவை வெச்சு தெலுங்கு, தமிழ், இந்தினு மூணு மொழி யிலும் 'யோஹன்’ பண்றேன். இதைத் தவிர அஜித், விஜய்கூட படம் பண்ணாததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை!''

''நீங்கள் இயக்க விரும்பும் ஹீரோ?''

''எனி டே, கமல்ஹாசன். மறுபடியும் மறுபடியும் எத்தனை தடவை வேணும்னாலும் அவர்கூடப் படம் பண்ணுவேன். அப்புறம் ரஜினி சார். அவரோட ஸ்டைல், என்னோட மேக்கிங்ல ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார்னு சீனியர் இயக்குநர்களை விட்டு அடுத்த செட் இயக்குநர்களுக்குப் படம் பண்ணலாம்னு அவர் வந்தா, முதல் சாய்ஸ் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!''

"இது காதலின் பொன்வசந்தம்!"

''உங்களுக்கு அப்புறம் வந்த இயக்குநர்களில் யார்லாம் உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க?''

''வெற்றி மாறன். ஆனா, எனக்கு 'ஆடுகளம்’ படத்தைவிட 'பொல்லாதவன்’தான் ரொம்பப் பிடிச்சது. வட சென்னை, பைக்னு படத்துல இருக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பிரமாதமா பிரசென்ட் பண்ணியிருந்தார். 'சுப்ரமணியபுரம்’ சசிகுமார் ரொம்பப் பிடிச்சது. எந்த இயக்குநரும் முதல் படத்திலேயே அவ்வளவு ஷாக் கொடுக்கலை. ஆனா, இப்போ சசிகுமார் நடிக்கப்போயிட்டாரேனு வருத்தமா இருக்கு. ரொம்ப அழகா, ரசனையாக் கவர்ந்தார் 'எங்கே யும் எப்போதும்’ சரவணன். அவ்வளவு சீன், அவ்வளவு டீடெய்ல்ஸ் இருந்தும் தெளிவான படமா இருந்தது. ரொம்ப ராவா இருந்த 'ஆரண்ய காண்டம்’ நல்ல க்ரிப்பா இருந்தது. ஆனா, தியாகராஜன் குமாரராஜா அடுத்து படம் எதுவும் பண்ணலையா?''

'

"இது காதலின் பொன்வசந்தம்!"

'அஜித் நடிச்ச 'மங்காத்தா’வும் ஹிட். மாஸ் ஹீரோ இல்லாத 'எங்கேயும் எப்போதும்’ படமும் ஹிட். சினிமா, ஹீரோக்கள் கையிலா... இயக்குநர்கள் கையிலா?''

''எந்தப் படமா இருந்தாலும் 'கன்டென்ட்’தான் கிங். 'மங்காத்தா’ல அஜித்தான் ராஜா. 'எங்கேயும் எப்போதும்’ல திரைக்கதைதான் ராஜா. கன்டென்ட் இல்லாம என்ன ஷோ பண்ணாலும், வேலைக்கு ஆகாது!''

''ஒவ்வொரு படத்திலும் உங்கள் ரியல் காதலைத்தான் வேறவேற வெர்ஷன்ல சொல்றீங்க... அந்தக் காதலைப் பத்திக் கொஞ்சம் பேசலாமே?''

''ம்ம்ம்... இப்போ பேசினா பிரச்னை ஆகிருமே! 'விடிவி’ க்ளைமாக்ஸ்ல 'என் நம்பர் எப்படிக் கிடைச்சது?’னு த்ரிஷா கேட்கிறப்போ, 'என் அடுத்த படத்தில் சொல்றேன்’னு சிம்பு சொல்வார். அப்படி இந்தக் கேள்விக்கான பதிலையும் அடுத்த பேட்டியில சொல்லட்டுமா?''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு