சினிமா
Published:Updated:

"கதைதாங்கணா ஹீரோ!"

எம்.குணா

##~##

''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுக் கிறது பெரிய விஷயம் இல்லை. இப்போ நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் முதல் படத்துக்கான உழைப்பைக் கொட்ட ணும். கடைசி நிமிஷம் வரை உயிரைக் கொடுக்க ணும்... த்ரில்லிங்கா இருக்குங்ணா... கொஞ்சம் பயமா வும் இருக்குங்ணா!'' - முதல் பட ரிலீஸுக்குக் காத்திருக் கும் ஹீரோ போல ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். தீபாவளிக்கு வெடிக்கிறது விஜயின் 'துப்பாக்கி’!

 ''பொதுவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமர்ஷியல் படங்களை கமிட் பண்ணிக்க மாட்டார். 'துப்பாக்கி’யில் வேலை செய்ய எப்படி ஒப்புக்கொண் டார்?''

''படத்துக்கு அவர்தான் கேமராமேன்னு சொன்னப்போ, நான் நம்பலை. 'என் படத்துக்கு எப்படி சார் ஒப்புக்கிட்டீங்க’னு நேர்லயே கேட்டுட்டேன். 'பெரிய ஆர்வம் இல்லாமத்தான் 'துப்பாக்கி’ கதை கேட்டேன். ஆனா,

"கதைதாங்கணா ஹீரோ!"

க்ளை மாக்ஸ்ல முருகதாஸ் வெச்சிருக்கிற மெசேஜ் கேட்டு ஆடிப்போயிட்டேன்’னு சொன்னார். காலை 9 மணிக்கு மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவுல என்னையும் நடக்க, ஓடவிட்டாங்க. கேமரா எங்கே இருக்குன்னே தெரியாம நடிச்சது புது அனுபவம்!''  

''சினிமாவில் இப்போ ஹீரோக்கள் ரொம்ப ஃப்ரெண்ட் லியா இருக்காங்க. ஆனா, நீங்க மட்டும் யாருடனும் க்ளோஸ் ஆக மாட்டேங்குறீங்களே?''

''இது அபாண்ட வதந்திங்ணா. எல்லாரோடவும் பெர்சனல் டச்லதான் இருக்கேன். வெளியே ஷேர் பண்ணிக்கிறதில்லை... அவ்வளவுதான். மூணு வருஷமா விடாம கமல் சாரோட பிறந்த நாளுக்கு மறக்காம என்னை அழைப்பார். போயிட்டு சந்தோஷமா ஆடிப் பாடிட்டு வருவேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைக்காம, என் லெவலுக்குப் பழகுவார். இதோ தீபாவளிக்கு முன்னாடியே 7-ம் தேதி வர்ற அவரோட பிறந்த நாள் எனக்கு மினி தீபாவளி!''

''டான்ஸ்ல உங்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''

''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல பின்றாங்களே. சிம்பு, தனுஷ், பரத், சாந்தனு வரைக்கும் எல்லார் டான்ஸும் எனக்குப் பிடிக்கும்!''

''ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கிற மெகா பட்ஜெட் படங்கள் ஃப்ளாப் ஆகுது... புது முகங்கள் நடிக்கிற 'அட்டகத்தி’, 'பீட்சா’ படங்கள் ஜெயிக்குது... ஏன்?''

''அப்பவும் இப்பவும் எப்பவும் தமிழ் சினிமாவில் கதைதான் ஹீரோ... நடிகர்கள் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டா எல்லா படங்களும் ஜெயிக்கும்!''

''பையன் சஞ்சய் என்ன பண்றார்?''

''ஏழாவது படிக்கிறார். கிரிக்கெட்ல பயங்கர ஆர்வமா இருக்கார். எந்த மேட்ச் நடந்தாலும் சாப்பாடுகூட இல்லாம டி.வி. முன்னாடி உட்கார்ந்துடுறார். புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கார். பார்ப்போம்... சேப்பாக்கமா... கோடம்பாக்கமானு!''- அழகாகச் சிரிக்கிறார் அப்பா விஜய்!