Published:Updated:

மரணம் இல்லாதவனின் ஆடுகளம்!

க.நாகப்பன்

மரணம் இல்லாதவனின் ஆடுகளம்!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

.ஆர்.ரஹ்மானை வைத்து, 'தாய் மண்ணே வணக்கம்’ என்று 'வந்தே மாதரம்’ ஆல்பம் அடித்து இந்தியாவையே உணர்ச்சிவசப்படவைத்த பரத் பாலா இப்போது என்ன செய்கிறார்? இடையில் இந்தியில் 'ஹரி ஓம்’ என்ற படம் மூலம் உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித் தவர், இப்போது தனுஷ§டன் கமர்ஷியல் கட்டு மரத்தில் ஏறி இருக்கிறார். தனுஷின் 'மரியான்’ படத்துக்கு சார்தான் இயக்குநர்.

 ''என்ன திடீர்னு தமிழ் சினிமா மேல ஆர்வம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சும்மா... அப்படித் தோணுச்சு. தனுஷ் நடிச்ச படங்களைப் பார்த்தப்பலாம் ரொம்பப் பிடிச்சது. அப்படியே மனசு அலைபாய்ஞ்சுட்டு இருந்தப்ப இந்தக் கதை மனசுல வந்து தங்குச்சு. 'மரியான்’ என்றால் மரணம் இல்லாதவன்னு அர்த்தம். மீனவர்கள் வாழ்க்கைதான் கதை. கன்னியாகுமரி, ஆப்பிரிக்கானு ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத இடங்களில் பயணிக்கும் கதை. ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் என்ன முடிச்சு? இதுதான் திரைக்கதை ட்ரீட்மென்ட். பேரலல், நான்-லீனியர், அது... இதுனு குழப்பிக்காம தெளிவா, சிம்பிளா ஒரு கமர்ஷியல் கதை. அவ்வளவுதான் படம். கதை நிச்சயம் புதுசா இருக்கும். அட்லஸ்லகூட நீங்க பார்க் காத இடங்களுக்கு ஜாலி டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கும் 'மரியான்’.''

மரணம் இல்லாதவனின் ஆடுகளம்!

''அப்போ அட்வென்ச்சர் படம்னு வெச்சுக்கலாமா?''  

''ம்ம்ம்... அப்படி இல்லை. தண்ணீரை எந்தப் பாத்திரத்துல ஊத்தினாலும் அந்தப் பாத்திரத்தின் வடிவம் எடுத்துக்குற மாதிரி... ஆக்ஷன்னு பார்த்தா ஆக்ஷன் படமா இருக்கும். காதல்னு பார்த்தா ரொமான்டிக் மூவியா இருக்கும். எப்பவும் தமிழ் சினிமாக்களில் காதலர்கள் சேர்ந்துதான் இருப்பாங்க. ஆனா, இந்தப் படத்தில் காதலர்கள் எப்பவும் பிரிஞ்சே இருப்பாங்க. இது உண்மைக் கதை. படத்தோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் இப்பவும் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களோட வாழ்க்கையில் சினிமா மெட்டீரியல்களைச் சேர்க்க, ஒன்பது மாசம் ஹோம் வொர்க் பண்ணி ஸ்கிரிப்ட் எழுதினேன். தமிழ் தெரியாதவங்களும்கூட படத்தோட உணர்வுபூர்வமா பயணிக்கிற அளவுக்கு இருக்கும் மேக்கிங்! 'ஆழி சூழ் உலகு’, 'கொற்கை’ நாவல்களை எழுதின ஜோடிகுரூஸ்தான் வசனம் எழுதுறார். அவரும் ஒரு மீனவர். வெறுமனே வார்த்தைகளா மட்டும் இல்லாம வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர் வும் உருக்கமும் சேர்த்திருக்கார். என் இயக்கத்துக்குப் பக்கபலமா குட்டி ரேவதி இருக்காங்க. நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நம்ம மீனவ மக்களும் நடிச்சிருக் காங்க.''

''தனுஷ் - 'பூ’ பார்வதி... எப்படிப் பிடிச்சீங்க இந்த காம்பினேஷனை?''

''தனுஷ§க்காகவே அமைஞ்ச கதைனுதான் என் மனசுல அப்பவும் இப்பவும் தோணுது. நிச்சயம் தனுஷ் கேரியரில் ஹைலைட்டா இருக்கும் இந்தப் படம். மீனவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து பிரமாதமா நடிச்சிருக்கார் மனுஷன். தனுஷ§க்கு இன்னொரு 'ஆடுகளம்’ இந்தக் கடல் சினிமா.

கொஞ்சம்கூட சினிமா கிளாமர் இல்லாத ஹீரோயினைத் தேடிட்டு இருந்தப்போதான் 'பூ’ பார்வதியைப் பார்த்தேன். இன்னும் ஒரு படத்தில்கூட நடிக்காத பொண்ணு மாதிரி ஒரு ஃப்ரெஷ்னஸ், ஒரு அழகு இருந்துச்சு அவங்ககிட்ட. நல்ல படங்கள் மட்டுமே பண்ணணும்னு ஆர்வத்துல இருக்குற பொண்ணு. என் பனிமலர் கேரக்டருக்கு பார்வதி பக்கா ஃபிட்.''

மரணம் இல்லாதவனின் ஆடுகளம்!

''ஆஸ்கருக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறது ரொம்ப அபூர்வமாகிடுச்சு. ஆனா, உங்க படத்துக்கு மியூஸிக் போட்டு பாட்டும் பாடி இருக்காரே... எப்படி?''  

''என் முதல் தமிழ்ப் படத்துக்கு என் மிக நெருங்கிய நண்பனை துணைக்கு அழைச்சிருக்கேன். அவ்வளவுதான். வழக்கமா படத்தில் சிச்சுவேஷன் சொல்லி இப்படி ஒரு டியூன் வேணும்னுதான் கேட்பாங்க. ஆனா, நான் முழுக் கதையையும் ரஹ்மான்கிட்ட சொல்லி, எந்த இடத் துல பாட்டு வந்தா நல்லா இருக்குமோ நீங்களே ஃபில் பண்ணிக்கங்கனு சொல்லிட்டேன். வாலி, கபிலன், குட்டி ரேவதியின் வரிகளுக்குப் பாடல்கள் தந்திருக்கார். எல்லாமே க்ளாஸிக்கா வந்திருக்கு. பாடல்களைக் கேட்டாலே மொத்தக் கதையையும் நீங்க யூகிச் சிடலாம். அந்த அளவுக்குப் பாடல்கள் திரைக்கதையோட சம்பந்தப்பட்டு இருக்கு.''

  ''ரஹ்மானோட எப்படி இந்த அளவுக்கு நெருக்கமான நட்பு சாத்தியமாச்சு?''

''எங்களுக்கு உலகத்தில் இந்த அடையாளம் கிடைக்கிறதுக்கு முன்னாடி இருந்தே நாங்க ரெண்டு பேரும் நெருக்கமான நண்பர்கள். எந்த விஷயத்தை யோசிச்சாலும் ஒரே மாதிரிதான் யோசிப்போம். நட்பைக் கொண்டாடுவதில் ரஹ்மானின் அக்கறை யாருக்கும் வராது. உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் எனக்குப் பிடிச்ச விஷயங்களைத் தேடித் தேடி வாங்கிட்டு வந்திருவார். கேமரா, மொபைல், புகைப்படம் சம்பந்தமான புத்தகங்கள் தொடங்கி சாப்பாடு வரைக்கும் இப்படி நிறையப் பொருட்களைப் பட்டியல் போடலாம். உலகத் துக்குத்தான் அவர் இசைப் புயல். எனக்கு அவர் நண்பன் மட்டுமே.''

மரணம் இல்லாதவனின் ஆடுகளம்!

''கமல், அசின் நடிப்பில் 'நைன்டீன்த் ஸ்டெப்ஸ்’னு நீங்கள் ஒரு படம் இயக்குவதாகச் செய்தி வந்தது. அப்புறம் என்ன ஆச்சு?''

''எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுன கதை அது. அதுக்கு நான் திரைக்கதை வடிவம் கொடுத்தேன். ஜப்பான் கலாசாரத்துக்கும் தமிழ்க் கலாசாரத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் பத்தின படம். பலப்பல காரணங்களால அந்தப் பட வேலை ஆரம்பிக்கவே இல்லை. இப்பவும் அந்த ஸ்கிரிப்ட் ஃப்ரெஷ்ஷா இருக்கு. அனேகமா என் அடுத்த ஸ்டெப்... 'நைன்டீன்த் ஸ்டெப்’ஸா இருக்கலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism