Published:Updated:

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

க.ராஜீவ்காந்தி

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

க.ராஜீவ்காந்தி

Published:Updated:
##~##

''என்னமோ... ஆயிரம் கோடி செலவு பண்ணி 'அவதார்’ ரிலீஸ் பண்ணுன மாதிரி'' - இது சந்தானத்தின் காமெடி பஞ்ச். ஆனால், கிட்டத்தட்ட அப்படித்தான் பில்டப் தருகிறார், தான் தயாரித்து நடிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்துக்கு. ரொம்...ப நாளாக 'லட்டு’களைக் கண்ணில் காட்டாமல் டபாய்த்துக்கொண்டு இருந்த சந்தானத்தை 'பவர்’ ஸ்டாருடன் ஒருசேரப் பிடித்தேன்...

 ''சொந்தத் தயாரிப்புல ஹீரோவா நடிக்கிற துணிச்சல் எப்படி வந்தது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பாஸ்... அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. இந்தப் படத்துல நான் ஹீரோ கிடையாது. வழக்கமா மத்த படங்கள்ல பார்க்கிற சந்தானம்தான் இதுலயும் இருப்பான். ஆல் பீப்பிள் ஆஃப் தமிழ்நாடு என்கிட்ட என்ன எதிர்பார்க்குறாங்கனு எனக்கு நல்லாத் தெரியும். அதைவிட எனக்கு என்ன வரும்னும் எனக்குத் தெரியும். அதுக்கு மேல ஒரு ஸ்டெப்கூட எடுத்துவெச்சு ரிவர்ஸ்ல போக விரும்பலை.  ராமநாராயணன் சாருக்கு என்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. சரின்னு நான், இயக்குநர் மணிகண்டன், அப்புறம் சில உதவி இயக்குநர்கள்னு பல்வேறு காலகட்டங்கள்ல ரூம் போட்டு டிஸ்கஷன் நடத்தினோம். வந்த அசிஸ்டென்ட் டைரக்டர்ஸே, 'இவனுக படம் பண்ற மாதிரி தெரியலை. சும்மா எப்பப் பார்த்தாலும் ஒண்ணு கூடி டீ, காபி, மசால் வடை தின்னுட்டு  கலைஞ்சுடுறானுங்க’னு கடுப்புல ஒவ்வொருத்தரா கழண்டுக்கிட்டாங்க. அப்பதான் ட்ரிபிள் ஹீரோ, சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட் சிக்கிச்சு. அது ராமநாராயணன் சாருக்கும் பிடிச்சுப்போக, ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்னு பிடிக்க ஆரம்பிச்சதுதான் இந்த லட்டு!''

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

''படத்துல எதுக்கு பவர் ஸ்டார்?''

''பொதுவா, என் கேரக்டர் ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு லுக்ல வரணும்னு பார்த்துக்குவேன். இந்தப் படத்துல கேரக்டர்களே புதுசா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்படித் தேடினப்ப எங்களுக்குக் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷம்தான் பவர் ஸ்டார். அதுக்கு முன்னாடி, அவரை 150 நாள்... 250 நாள்... 400 நாள்னு போஸ்டர்கள்ல மட்டும்தான் பார்த்திருப்போம். இவரை ஏன் நாம முழுசாவே யூஸ் பண்ணக் கூடாதுனு நாங்களே அவரைத் தேடிப் போனோம். நடிக்கச் சொல்லிக் கேட்டோம். சாருக்கு ரொம்ப சந்தோஷம். நானோ, பவரோ எவ்வளவு காமெடி பண்ணாலும் ரசிப்பீங்க. ஆனா, ஹீரோனு ஒருத்தர் வேணுமே. அப்போ வகையா வந்து சிக்கினவன்தான் சேது. இவனும் பவர் மாதிரி ஒரு டாக்டர்தான். ஆங்... ஆனா, ஒரிஜினல் டாக்டர். 'லொள்ளு சபா’ காலத்துல இருந்தே எனக்கு செம தோஸ்த். அப்போலாம் எனக்கு நிறைய உதவி பண்ணியிருக்கான். 'இதுக்கெல்லாம் பதிலுக்கு உனக்கு நான் என்ன பண்ணப்போறேன்’னு ஃபீல் பண்ணப்ப, 'நீ பெரிய ஆளாகிட்டா என்னைவெச்சு ஒரு படம் பண்ணுடா’னு சொன்னான். நாம எப்பப் படம் பண்ற அளவுக்குப் பெரிய ஆளா ஆகப்போறோம்கிற 'நம்பிக்கை’ல ஓ.கே. சொன்னேன். கடைசில, அந்த லூஸ் டாக் பலிச்சேபோச்சு!''

''லட்டுல என்ன மெசேஜ் புதைச்சு வெச்சிருக்கீங்க?''

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

''ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி மெசேஜ்தான். படத்துல ஸாங், டான்ஸ், ஃபைட் எல்லாத்துலயுமே ஹ்யூமர் இருக்கும். அதையும் தாண்டி படத்துல மெசேஜ்னு கேட்டீங்கன்னா... இருக்கு... அதுவும் இருக்கு. 'உண்மையா லவ் பண்றவனுக்குத்தான் அந்த லவ் ஜெயிக்கும்’. இப்படி ஒரு உலக மகா தத்துவத்தை தமிழ் சினிமாவுலயே முதல்முறையா சொல்றோம். 'கமான் பவர்... காதலை விட்டுக்கொடுக்காதீங்க நெவர்’னு அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி அவர் முதுகுத் தோல் உரியிற வரை காதலுக்காக ரத்தம் சிந்த வெச்சிருக்கோம்!''

''சும்மா போஸ்டர் அடிச்சு அலப்பறை அட்ராசிட்டி கொடுத்துட்டு இருந்தவருக்கு ரொம்பத்தான் பில்டப் கொடுக்குறீங்களே... நியாயமா?''

''என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? இதுவரை தமிழ் சினிமால பிரபலமா இருக்குற எல்லா பஞ்ச்களுக்கும் அவரை வெச்சுதான் கவுன்ட்டர் கொடுக் குறோம். 'சில பசங்களைப் பார்க்கப் பார்க்கத்தான் புடிக் கும். சில பசங்களைப் பார்த்த உடனே புடிக்கும். ஆனா, இந்த பவரைப் பார்க்காமலேயே புடிக்கும்’! எப்பிடி? ஆனா, இவரை நடிக்கவைக்கிறதுக்கு நாங்க பட்ட பாடு இருக்கே... ஐயையைய்யோ... ஒரு சீன்ல சிங்கம் மாதிரி கர்ஜிக்கச் சொன்னோம். ஊ...ஊ...ஊ...னு ஒரு சத்தம். பார்த்தா நரி மாதிரி ஊளையிட்டுட்டு இருக்காரு. கஷ்டப்பட்டு ஊளையை நிறுத்தினோம். மருந்துக் கடை யில யாராவது 'ஆக்‌ஷன் 500’னு சொல்லிட்டாக்கூட மொத்த உடம்பையும் வளைச்சு நெளிச்சு பாம்பு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுறார். கேட்டா பாடி லாங்குவேஜாம். ஃபீல்டுல வேகமா வளர்ற பையன், பிரகாசமான எதிர்காலம் இருக்கேனு படத்துல அவருக்கு நாங்க நிறைய ஸ்பேஸ் கொடுத்திருக்கோம்!'' என்று சந்தானம் ஓட்டிக்கொண்டு இருந்தபோதே...

''ஆங்... இது போங்கு. என்னைக் கலாய்க்கிறதுதான் சார் இவங்களுக்கு வேலையே!'' என்று பேச ஆரம்பிக்கிறார் பவர் ஸ்டார். ''ஆனா, ரொம்ப நல்லவங்க சார். சரியா நடிக்காம நான் சொதப்பினாக்கூடத் திட்ட மாட்டாங்க. 'என்னண்ணே இப்படிப் பண்றீங்க... 'லத்திகா’ல அதிரடிச்ச உங்க பெர்ஃபார்மன்ஸ் என்ன ஆச்சு’னு சிம்பிளா கேப்பாரு. ஒரு கோயில் சீன்ல எனக்கு ரொம்ப நீளமா ஒரு டயலாக். 'நட்புன்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? நட்புக்காகத்தாண்டா 'நட்புக்காக’ படத்துல சரத்குமார் உயிரை விட்டாரு... நட்புக்காகத்தாண்டா 'பாட்ஷா’ படத்துல கொலை பண்ணிட்டு, தாடிலாம் வெச்சிட்டு ரௌடியா மாறுவாரு சூப்பர் ஸ்டார்’னு  நீளமா போகும் அந்த டயலாக். அது நிச்சயம் என் கேரியர்ல ஹை லைட்டா இருக்கும்!'' என்று ஃபீலிங்ஸோடு பவர் ஸ்டார் சொல்ல...

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

''ஆமா... இவரு சைக்கிள் கேரியர்ல பெட்ரோமாக்ஸ் லைட்டா இருக்கும்!'' என்று மீண்டும் லைனுக்கு வருகிறார் சந்தானம்.

''பவர் செமத்தியா ஒரு டான்ஸ் ஆடியிருக்காருங்க படத்துல. 'ஐ லவ் யூ’னு எழுதியிருக்கிறதை பரதம் ஆடியே அழிச்சுட்டு, திரும்ப எழுதிக்காட்டணும். அந்த சீன்ல 'விஸ்வரூபம்’ கமலையே தூக்கிச் சாப்பிட்டாரு. பவருக்கு பவர்ஃபுல் எதிர்காலம் இருக்கு!''

ஐயையைய்யோ டெரர் பண்றார் பவர்!

''எப்படி படத்துல சிம்பு, கௌதம் மேனன்... ரெண்டு பேரையும் கேமியோ ரோல்ல நடிக்க வெச்சீங்க?''

''படம் ஆரம்பிக்கும்போதே சிம்புகிட்ட 'கெஸ்ட் ரோல்’ பண்ணணும்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டார். 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல வொர்க் பண்ணப்போ, ஸ்பாட்ல கௌதம் சார் ரியாக்ஷன்களைப் பார்த் துட்டு அவரையும் நடிக்கக் கேட்டேன். அவரும் ஆர்வமா சம்மதிச்சுட்டார். கௌதம், சிம்பு, பவர் மூணு பேரும் சேர்ந்து மிரட்டும் க்ளைமாக்ஸ்தான் டாக் ஆஃப் தமிழ் சினிமாவா இருக் கும்!''

இப்பவே கிர்ரடிக்குதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism