Published:Updated:

"குஷ்புக்கு அப்புறம் நான்தான் சி.எம்!"

க.ராஜீவ்காந்தி

"குஷ்புக்கு அப்புறம் நான்தான் சி.எம்!"

க.ராஜீவ்காந்தி

Published:Updated:
##~##

''கங்கிராட்ஸ்... தமிழ் ஹீரோக்களின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’ நீங்கதான்னு சொல்றாங்க. சத்தமே இல்லாம நம்பர் ஒன் இடத்தைப் பிடிச்சிட்டீங்களே...'' என்று ஹன்சிகாவிடம் சொன்னால், அதற்கும் வழக்கமான 'பப்ளி பப்பாளி’ சிரிப்பைச் சிதறடிக்கிறார்.

 ''எனக்கே கனவு மாதிரிதான் இருக்கு. தமிழும் தெலுங்கும் கலந்து 2014 வரை என் டைரி ஃபுல். என் கடின உழைப்பும்(?) கடவுள் ஆசியும்தான் காரணம். அப்புறம்... என்னமோ சொல்லணுமே... ஆங்... ரசிகர் களுக்கு தேங்க்ஸ். நாங்க பேட்டிக்கும் ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சுட் டோம்ல!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்களுக்கு தமிழ்நாட்டுல கோயில் கட்டுறாங் கனு சொல்றாங்களே... உங்க அனுமதியோடதான் நடக்குதா?''

''அச்சச்சோ... காட் பிராமிஸா இல்லைங்க. மதுரைப் பக்கம் எங்கேயோ கட்டிட்டு இருக்கிறதா சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாது. ப்ளீஸ்... அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுங்க.''

"குஷ்புக்கு அப்புறம் நான்தான் சி.எம்!"

''ஜெனிலியா, அஞ்சலி, அனுஷ்கானு அடுத் தடுத்து டபுள் ஹீரோயின் படங்களா நடிக்கிறீங் களா?''

''எத்தனை ஹீரோயின்கூட நடிக்கிறோம்னு நான் பார்க்க மாட்டேன். என் கேரக்டருக்குப் படத்துல எவ்வளவு ஸ்கோப்னு மட்டும்தான் பார்ப்பேன். 'வேலாயுதம்’ பார்த்திருப்பீங் களே... அதுல நான்தானே ஹீரோயின். இப்போ 'சேட்டை’, 'சிங்கம்’ ரெண்டுலயும் அப்படித்தான்!''

''அனுஷ்கா, ஜெனிலியா, அஞ்சலி பத்தி சொல் லுங்க... உங்ககூட ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங் களா?''

''என்னை யாருக்குங்க பிடிக்காது? நேத்துதான் முதல் தடவை அனுஷ்காகூட ஒரு ஷாட்ல நடிச்சேன். அவங்க எனக்கு இப்ப அனுஷ்கா இல்ல... அக்கா! அவ்ளோ கேர் எடுத்துக்கிட்டாங்க என் மேல. அஞ்சலி கூட சேர்ந்து நடிக்கிற காம்பினேஷன் இன்னும் வரலை. ஜெனிலியா ரொம்ப புரொஃபஷனல். அவங்க உண்டு... அவங்க வேலை உண்டு!''

''கடைசியா வாங்கின பாராட்டு?''

''இதோ... இன்னைக்குக் காலைல... ஒரே டேக்ல சூப்பரா நடிச்சேன்னு சூர்யா, ஹரி சார் ரெண்டு பேருமே பாராட்டினாங்க. சூப்பர்ல!''

''கடைசியா வாங்கின திட்டு?''

''நான் ரொம்ப குட் கேர்ள்ப்பா! சின்ன வயசுல வாங்கின திட்டுதான். இப்போலாம் யாருமே என்னைத் திட்ட மாட்டேங் குறாங்க.''

''முதல் காதல்பத்திச் சொல்லுங்க?''

''வந்த பிறகு சொல்றேன். இப்ப 21 வயசு தானே ஆகுது. 25-க்கு அப்புறம் பார்க்க லாம்!''

''என்ன படிச்சிருக்கீங்க?''

''பொலிட்டிக்கல் சயின்ஸ்!''

'

"குஷ்புக்கு அப்புறம் நான்தான் சி.எம்!"

'அட, அப்போ எதிர்காலத்துல அரசியலுக்கு வருவீங்களா?''

''இப்ப அப்படி எதுவும் எனக்கு ஐடியா இல்லை. பட், எதிர்காலத்துல எதுவும் நடக்க லாம்ல. குஷ்புவுக்கு அடுத்து நானும் தமிழ்நாடு சி.எம். ஆக வாய்ப்பு இருக்குதானே! எப்பிடி..? இந்தப் பதிலை நீங்க எதிர்பார்க்கலைல்ல... தேங்க்ஸ் டு குஷ்பு மேடம்!''

''அப்போ, தி.மு.க. ஆட்சி... அ.தி.மு.க. ஆட்சி ரெண்டையும்  ஒப்பிடுங்க?''

''ஆங்... இப்ப நான் ஒரு நடிகை. என்னை ஒரு நடிகையா மட்டும் பாருங்க. பை... டாடா... ஸீயா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism