Published:Updated:

எமி சுமக்கும் சிலுவை!

க.நாகப்பன்படம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

ர்யா, விக்ரமுடன் டூயட்... ஷங்கருடன் 'ஆக்ஷன், கட்’... மிகப் பரபரப்பாக இருக்கிறார் எமி ஜாக்சன்!

''விஜய், கௌதம் மேனன், ஷங்கர்... ஒவ்வொருத்தர் படத்திலும் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?''

''விஜய் ரொம்ப ஃப்ரெண்ட்லி. அவர் படத்தில் நடிக்கும்போது சின்ன பதற்றம், பயம்கூட இருக்காது. கௌதம் மேனன் ஒரு சின்ன சிரிப்புகூட பெர்ஃபெக்டா வர்ற வரை  விடமாட்டார். ஷங்கர் சார்... சான்ஸே இல்லை. சின்னதா ஒரு ரியாக்ஷனுக்குக்கூட நாள் முழுக்கக் காத்திருக்கார்!''

எமி சுமக்கும் சிலுவை!

''எமி எப்படிப்பட்ட பொண்ணு?''

''ரொம்ப சென்ட்டிமென்ட் பார்ப்பேன். என் பாட்டி கொடுத்த சிலுவை இப்பவும் என்கிட்ட இருக்கு. அது என்கிட்டயே இருந்தா எல்லாமே நல்லதுதான் நடக்கும். என் ப்ளஸ் தன்னம்பிக்கை. மைனஸ் எல்லாரையும் உடனே நம்பிடுவேன்!''

''இந்தியன் டீன் ஏஜ் கேர்ள்ஸ்பத்தி என்ன நினைக் கிறீங்க?''

''ரொம்ப திறமைசாலியா இருக்காங்க. எதையும் கஷ்டம்னு நினைக்கிறதில்லை. எல்லாத்தையும் ஒரு கை பார்க்கிறாங்க. இந்தத் துணிச்சல் நான் பார்த்த வேறு எந்த நாட்டுப் பெண்களிடமும் இல்லை. தன்னோட சுதந்திரத்தை அதன் எல்லை வரைக்கும் மட்டுமே அனுபவிக்கிறாங்க. ஐ லைக் இட்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு