Published:Updated:

மதுரையைக் கண்டுபிடிக்கலாம் வாங்க!

(100% கற்பனையே..!)

மதுரையைக் கண்டுபிடிக்கலாம் வாங்க!

(100% கற்பனையே..!)

Published:Updated:

துரை ஆதீனம் சொன்னபடி, 2012-ல் உலகின் பெரும் பகுதி அழிந்துவிடுகிறது. கனடா, அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டும் தப்புகின்றன. கி.பி. 4052-ல் கனடாவில் வாழும் தமிழ் வம்சாவழியினர், (இவர்களுக்கு ஓரளவு தமிழ் பேசத் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது.) தங்கள் தாயகம் இந்து மகா சமுத்திரத்தில் மணல் மேடாகக் கிடக்கும் பகுதிதான் என்று கண்டுபிடிக்கிறார்கள். பல்லாயிரம் கோடி செலவழித்து அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள். அப்போது மணலுக்கு அடியில் புதையுண்ட மதுரை மாநகரின் தடயங்கள் சில சிக்கு கின்றன. அதை வைத்து மதுரையில் வாழ்ந்த மக்கள் எத்தகைய 'நாகரிகம்' படைத்தவர்கள் என்று கண்டுபிடிக் கிறார்கள்.

இந்த ஆய்வுக் குழுவின் தலைவரான அறிஞர் டோம்னிக் அருணகிரி (பெயரைக் கவனித்தீர்களா? இதுதான் வண்ணத்துப்பூச்சி விளைவு என்பது.) ஒருவருக்கு மட்டும் ஓரளவுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். அதனால் அவர் பண்டைய மதுரை மக்களின் பழக்கவழக்கங்களை ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார். அவர் விகடன் குழுமத்தின் 37,945-வது பத்திரிகையான தொல் விகடனுக்கு அளித்த பேட்டி வருமாறு:

மதுரையைக் கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆற்றங்கரைதானே நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள். ஆதலால், அங்கெல்லாம் கவனமாகத் தோண்டிப் பார்த்தோம். பாய் போல் மிக நீளமான ஒரு பொருள் (ஃப்ளெக்ஸ் போர்டு) சிக்கியது. இத்தனை ஆண்டு காலம் அது மக்காமல் இருப்பதைக் கண்டு வியந்தோம். அதில் பெரும்பாலான எழுத்துகள் அழிந்துபோய்விட்டாலும் நான்கு வார்த்தைகளை மட்டும் ஓரளவுக்குப் படிக்க முடிந்தது. முதல் வரியில், 'அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்றும், அடுத்த வரியில் 'மன்னன்’ என்றும் இருந்தது. ஆக, அஞ்சா நெஞ்சன் என்பவர்தான் மதுரையின் கடைசி மன்னராக இருந்திருக்கிறார். அழகிரி என்பது அவர் படித்து வாங்கிய பட்டமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். மற்றொரு பிளாஸ்டிக் பாயில், சற்று பூரிப்பான பெண்ணின் படமும், அதன் கீழே 'அம்மா உன்னை வணங்குகிறோம்’ என்கிற வாசகங்களும் தென்பட்டன. ஆக, இந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

பிளாஸ்டிக் காலம்: கண்ணாடியால் ஆன பாட்டில்களும், அதன் அருகிலேயே பிளாஸ்டிக் கப்புகளும்  உருக்குலையாமல் கிடைத்தன. ஆக இந்த மக்கள் ஏதோ ஒரு உற்சாக பானத்தை விரும்பி அருந்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. நகரில் எங்கு தோண்டினாலும் பிளாஸ் டிக் பொருட்கள் அதிக அளவில் கிடைத்தன. எனவே இரும்புக் காலம், செம்புக் காலம் போல இவர்கள் வாழ்ந்த காலத்தை பிளாஸ்டிக் காலம் என்று வகைப்படுத்தியிருக்கிறோம்.

மதுரையைக் கண்டுபிடிக்கலாம் வாங்க!

மக்களின் தொழில்: ஒரு இடத்தில் ஒருவர் சலூன் கடை வைத்தால், பக்கத்திலேயே பத்துப் பதினைந்து சலூன்களைத் திறக்கும் பழக்கம் இந்த மக்களுக்கு இருந்திருக்கிறது.

இந்த நகரின் அழிவுக் குச் சரியான காரணம் கிடைக்கவில்லை. ஒரு மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த துறவி ஒருவர் தகுதிக் குறைவான நபரைத் தனது வாரிசாக நியமித்ததுதான் காரணம் என்று பிளாஸ்டிக் பாய் (ஃப்ளெக்ஸ்) ஒன்று தெரிவிக்கிறது. உலகம் அழிந்து கொண்டு இருந்த கடைசி நிமிடத் திலும் பிளாஸ்டிக் பாயில் இந்த விவரத்தைப் பதிவு செய்திருப்பதன் மூலம், இந்த மக்கள் 'வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே’ என்று வாழ்ந்திருப்பதைப் புரிந்துகொள்ள லாம்.

கற்பனை: கே.கே.மகேஷ்