ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜீவாவைப் பழிவாங்கும் விக்ரம்!

இது புது சினிமாக.ராஜீவ்காந்தி

##~##

பீஜாய் நம்பியார், மணிரத்னம் கல்லூரியில் இருந்து வந்திருக்கும் புதுவரவு. இப்போது விக்ரம் - ஜீவா காம்பினேஷனில் தமிழ், இந்தி என இரு மொழிகளில் 'டேவிட்’ படத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

 ''மணி சார் டீம்லேர்ந்து வந்திருக்கீங்க... அந்த அனுபவங்களைப் பத்திச் சொல்லுங்க?''

''இன்னைக்கு நினைச்சாலும் மணி சார்கிட்ட ஜாயின் பண்ணினது கனவு மாதிரிதான் இருக்கு. நான் மும்பைப் பையன். நான் பார்த்த முதல் படமே 'நாயகன்’தான். எம்.பி.ஏ., முடிச்ச துக்கு அப்புறம் சினிமா ஆர்வம் வந்துச்சு. ஒரு குறும்படம் பண்ணினேன். என் அப்ளிகேஷனோட அந்த சி.டி-யைச் சேர்த்து அனுப்பி இருந் தேன். இன்டர்வியூக்குக் கூப்பிட்டார். செலெக்ட் ஆனதும் 'என்கிட்டயே வாழ்க்கை முழுக்க வேலை பார்க்கணும்னு நினைக்காதே... ஒரே படத்துல கத்துக்கிட்டு படம் பண்ணு’னு அட்வைஸ் பண்ணினார். 'குரு’, 'ராவணன்’னு ரெண்டு படங்கள் அவர்கிட்ட இருந்தேன். 'அடுத்தது தனியாப் படம் பண்ணிடு’னு சொன்னார். உடனே, வெளியே வந்துட்டேன். அசோக் அமிர்தராஜ் தயாரிப்புல ஒரு ஹாலிவுட் படம் ஸ்டார்ட் பண்ணேன். சில காரணங்களால அது ட்ராப் ஆயிடுச்சு. அதே கதையைத்தான் அனுராக் காஷ்யப் தயாரிப்புல 'ஷேத்தான்’னு எடுத்தேன். இதோ இப்ப 'டேவிட்’ மூலமா தமிழ் சினிமாவுக்கு வந்தாச்சு!''

ஜீவாவைப் பழிவாங்கும் விக்ரம்!

'' 'கடல்’, 'மரியான்’, 'நீர்ப்பறவை’ வரிசையில் இதுவும் ஒரு மீனவப் படமா?''

(சிரிக்கிறார்...) ''யெஸ்... மீனவன் சம்பந்தப்பட்ட பிரச்னைதான். ஆனா, வேற கலர். அரசியல்வாதிகள் மைனாரிட்டி மீனவர்களை எப்படிப் பயன்படுத்திக்கிறாங்கனு சொல்லியிருக்கேன். விக்ரம்தான் அந்த மீனவ டேவிட். கோவா பீச்சுல மீனைப் பிடிச்சோமா, வித்தோமா, தண்ணி அடிச்சோமா, படுத்தோமானு லைஃப்ல எந்தப் பிடிப்பும் இல்லாம ஹாய்யா வாழ்ற கேரக்டர். இன்னொரு டேவிட் ஜீவா. கிடாரிஸ்ட்டா வர்றார். மேற்கத்திய வாழ்க்கை வாழ ஆசைப்படற சராசரி மும்பை இளைஞன். ரெண்டு பேரோட ஸ்டோரியுமே தனித் தனிப் பாதைகள்ல பயணிக்கும். ரெண்டு டேவிட்களும் சேர்ற இடத்துலதான் படத்தோட உயிர்நாடியே இருக்கு. அதனால, அந்த சீன் எடுத்தப்ப யூனிட்ல உள்ள ஆளுங்களையே ஸ்பாட்ல இருக்கவிடலை!''

''விக்ரம், ஜீவா ரெண்டு பேருக்குமே கடைசியா நடிச்ச படங்கள் சரியாப் போகலைல?''

''அதுல விட்டதை இதுல ரெண்டு பேருமே பிடிச்சிருவாங்க. அப்படி ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ணியிருக்காங்க. முதல் நாள் ஷூட்டிங்குக்கு மங்களூர் வந்தப்போ விக்ரம் ரொம்ப டல்லா இருந்தாரு. நான் போய் பேசினப்ப, சரியா முகம் கொடுத்துப் பேசலை. ஏதோ பிராப்ளம்னு நினைச்சு நாங்களும் 'மூடு அவுட்’ ஆகிட்டோம். சாயங்காலம் ஷூட்டிங் முடிச்சதும், 'படத்துல என் கேரக்டர் மூடு அவுட்டாதானே இருக்கும்?’னு சிரிச்சார். நாங்க அசந் துட்டோம். ஜீவா வேற மாதிரி. ஸ்பாட்ல கலகலனு இருப்பார். ஆக்ஷன் சொன்ன உடனேயே கேரக்டரா மாறிடுவார். ரொமான்டிக் ஜீவா, விக்ரமோட ரிவெஞ்ச்சால எப்படிப் பாதிக்கப்படுறார்ங்கிறதுதான் ஒன் லைன்!''

''அது என்ன... இந்தியில் மட்டும் மூணு டேவிட்ஸ், தமிழ்ல ரெண்டுதான்?''

''அந்த மூணாவது டேவிட்டுக்கு தமிழ்ல வேலை இருக்காது. அந்த கேரக்டர் இந்திக்கு மட்டுமே மேட்ச் ஆகும். தமிழ்ல அதைச் சேர்க்கணும்னா, ஸ்க்ரிப்ட்டையே ரீரைட் பண்ண வேண்டியிருக்கும். அந்த கேரக்டரை மட்டுமே தனிப் படமா பண்ணலாம்!''

''ரெண்டு ஹீரோஸ், நாலு ஹீரோயின்ஸ், ரெண்டு கேமராமேன், ஏழெட்டு இசையமைப்பாளர்கள்னு பெரிய செட்டப்பா இருக்கே?''

''படத்துல வர்ற ரெண்டு டேவிட்டுமே ஒரு விஷயத்துல ஒற்றுமையா இருப்பாங்க. யார் எது சொன்னாலும் சரி, தன் மனசுக்கு எது சரியோ அதைச் செய்வாங்க. நானும் அதே மாதிரிதான். என் ஸ்க்ரிப்ட்டுக்கு இந்த செட்டப் தேவைப்பட்டுச்சு. அதான் யூஸ் பண்றேன். தமிழ்ல வர்ற அதே கேரக்டரை இந்தியிலேயும் விக்ரம் பண்றார். இந்தியில் ஜீவாவுக்குப் பதிலா வினய் விர்மானி. இஷா ஷெர்வானி, தபு, லாரா தத்தா, ஷீத்தல் மேனன்னு ஹீரோயின்கள் இருக்காங்க. ஆனா, படத்தில் ஜீவாவுக்கு ஜோடியே கிடையாது. ஏன் இத்தனை மியூஸிக் டைரக்டர்ஸ்னு கேட்டீங்கன்னா, மொத்தம் 10 பாடல் கள் இருக்கு. ஷாக் ஆகிடாதீங்க.. எல்லாமே கட் சாங்ஸ்தான். படத்துல 10 நிமிஷம் போரடிச்சாக்கூட, நான் பதில் சொல்லத் தயாரா இருக்கேன்!''