ஸ்பெஷல் -1
Published:Updated:

ஐஸ்வர்யா... த/பெ. அர்ஜுன்!

எம்.குணா

டிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்க வருகிறார் - இது ஒரு வரிச் செய்தி. இதற்குப் பின்னால் பதுங்கி இருக்கிறது 10 வருட ஃப்ளாஷ்பேக்!  

 அர்ஜுன் தன் 'வேதம்’ படத்துக்காக 10 வருடங்களுக்கு முன் கேமராவில் ஆங்கிள் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த விஷால் கேமராவின் குறுக்கே வர... ''டேய், உன்னோட முகம் கேமராவுல பார்க்கும்போது நல்லா இருக்குடா. நீ பேசாம டைரக்ஷன் ஆசையை விட்டுட்டு நடிகனாகிடேன்'' என்றார். அர்ஜுன் சொன்னதுபோலவே நடிகர் ஆனார் விஷால்.

ஐஸ்வர்யா... த/பெ. அர்ஜுன்!

சில மாதங்களுக்கு முன்பு பூபதி பாண்டியன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு நாயகியைத் தேடிக்கொண்டு இருந்தார் விஷால். லண்டனில் ஃபேஷன் மேனேஜ்மென்ட் படித்து முடித்து வந்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவைத் தற்செயலாகச் சந்தித்த விஷால், தனது படத்தில் நாயகியாக நடிக்கக் கேட்க, அதுவரை 'நோ’ சொல்லிவந்த ஐஸ், 'இந்த ஒரு படம் மட்டும்தான்... ஓ.கே-வா?’ என்கிற நிபந்தனையுடன் நடிகையாகி இருக்கிறார். ஐஸ்வர்யாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

''ஸ்டெல்லா மேரீஸ்ல டிகிரி படிக்கும்போதே நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு சினிமாவே வேணாம்னு, ஃபேஷன் மேனேஜ்மென்ட் படிக்க லண்டன்போயிட் டேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஹைதராபாத்ல நடந்த ஃபேஷன் ஷோவுல நானும் அப்பாவும் ரேம்ப் வாக் போனோம். அப்பாவுக்கு ஆந்திராவுல பெரிய ரசிகர் வட்டம் உண்டு. 'அர்ஜுனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா?’னு ஆச்சர்யப்பட்டாங்க. அப்பவே தெலுங்குப் படங்களில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்பவும் முடியா துனு சொல்லிட்டேன். விஷாலைச் சந்திச் சப்போ, 'எனக்கு ஹீரோயின் சரியா செட் ஆகலை. என் படத்துல ஹீரோயின் ரோலுக்கு முக்கியத்துவம் உண்டு. நீ நடிக்கிறியா?’னு கேட்டார். சரி, ஒரு படம்தானே... நடிச்சுப் பார்ப்போம்னு தோணுச்சு... ஓ.கே. சொல்லிட்டேன்'' என்று சிரிக்கிறார்.

ஐஸ்வர்யா... த/பெ. அர்ஜுன்!

மகள் பேசுவதை தந்தையின் பூரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த அர்ஜுனிடம் பேசினோம். ''நீ டாக்டர் ஆகணும். இன்ஜினீயர் ஆகணும்னு ஐஸ்வர்யாவுக்கு நாங்க எந்த நிர்பந்தமும் கொடுக்கலை. லண்டனுக்குப் படிக்கப் போறேன்னு சொன்னப்ப, ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். இப்போ நடிக்கப்போறேன்னு சொல்றாங்க. வாழ்த்துக்கள் சொல்லிட்டேன். 'சினிமா...  பணம், பேர், புகழ் எல்லாமே அள்ளி அள்ளிக் கொடுக்கும். அதுக்குப் பதிலா, நாம நிறைய உழைக்கணும்... சின்சியரா இருக்கணும்’னு ஒரு சீனியரா சின்ன அட்வைஸ் மட்டும் சொல்லியிருக்கேன். அவ்வளவுதான்!'' என்று மகளின் கூந்தல் கலைத்துச் சிரிக்கிறார் அப்பா அர்ஜுன்.

நைஸ் ஐஸ்!