அஞ்சு வருஷக் காதலாம். பிரியாவை சிவா கரம் பிடித்த அந்தத் திருமண நிகழ்வில், சிவாவுக்குக் கிடைத்த இன்னொரு புது சொந்தம்... 'மச்சான்’ அஜித்!
ஷாலினி அஜித்தின் பேட்மிட்டன் பார்ட்னர் பிரியா. அந்த நெருக்கத்திலும் உரிமையிலும் கணவர், குழந்தையுடன் வந்தி ருந்தார் ஷாலினி. பிரியாவுக்கு அண்ணனாக இருந்து சிவாவுக்குச் செய்ய வேண்டிய திருமணச் சடங்குகளை அஜித் செய்ததாலேயே, அவருக்கு மச்சான் ஆகிவிட்டார். பதிலுக்கு சிவாவும் அஜித்துக்கு மோதிரம் அணிவித்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பலர் நினைப்பதுபோல கொடைக்கானல், ஊட்டி கான்வென்ட்களில் தனது பள்ளிப் படிப்பைத் துவக்கவில்லை அஜித். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் உள்ள கோமதி பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி-யையும் பிறகு அதே பகுதியில் இருந்த புனித மேரி பள்ளியில் நான்காவது வரையும் படித்தாராம். இப்போதும் மனம் சஞ்சலமாக இருந்தால், காரில் கிளம்பிவந்து சாமிநாயக்கன் தெருவில் காரை நிறுத்திவிட்டு, ஜன்னலைத் திறக்காமல் அமர்ந்து பால்ய நினைவுகளை அசைபோடு வாராம். தனது திருமணம் முடிந்தவுடன் ஷாலினியை முதன்முதலில் அஜித் அழைத்துவந்தது சாமிநாயக்கன் தெருவுக்குத்தானாம். இதை எல்லாம் சொல்லி, 'எங்களைப் போல நீங்களும் எப்போதும் சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டும்!’ என்று 'மச்சானை’ வாழ்த்தியிருக்கிறார் அஜித்!
ஆல் த பெஸ்ட் மச்சான்ஸ்!
