சினிமா
Published:Updated:

ஆராத்யாவுக்கு ஒரு வயசு!

சார்லஸ்

##~##

ந்தியாவின் 'சுட்டி ஸ்டார்’ பட்டியலில், பிறப்பதற்கு முன்பாகவே இடம்பிடித்துவிட்ட அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுக்கு இப்போது வயது ஒன்று!

• ''ஆராத்யா என்றால் வணங்கக்கூடியவள் என்று அர்த்தம். குழந்தை பிறந்த பிறகு நாட்கள் போனதே தெரியவில்லை. என்னைக் குழந்தையுடன் படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் மீடியாக்களின் வேலை. ஆனால், குழந்தை மீது கேமரா ஃப்ளாஷ் லைட்டுகள் படாமல் பாதுகாப்பது பொறுப்பான அம்மாவின் வேலை. அதைத்தான் நான் செய்கிறேன். மற்றபடி மகளின் முகத்தை மறைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் இல்லை!'' என்கிறார் அம்மா ஐஸ்.

• ''ஆராத்யாவுக்கு என்னை யார் என்று தெரியாது. ஆனால், என் தாடியைப் பிடித்து இழுப்பாள். இந்தத் தாடிக்காரன் ஏதோ ஸ்பெஷல் என்று மட்டும் அவளுக்குத் தெரியும்'' என்கிறார் தாத்தா அமிதாப் பச்சன்.

ஆராத்யாவுக்கு ஒரு வயசு!

• துபாயில் சொகுசு அபார்மென்ட் ஒன்றை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கியிருக்கிறார் அபிஷேக் பச்சன். ''இந்த அபார்ட்மென்ட்டில் மொத்தம் 99 வீடுகள். ஆராத்யா வளரும்போது விளையாட நல்ல நண்பர்கள் வேண்டும். தனி வீட்டில் இருந்தால் அது சாத்தியம் இல்லை!'' என்கிறார் அப்பா அபிஷேக்.

அடேங்கப்பா!