சினிமா
Published:Updated:

"தமிழ்ப் பசங்களா... ரெடியா?"

செம 'தம்' நீத்துக.நாகப்பன்

##~##

''ஃபி ஃப்டீன் மினிட்ஸ் ஓ.கே-ல!'' என்று இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு நீத்து சந்திரா கேட்டபோது, அவரது கைவிரல் இடுக்குகளில் இருந்த சிகரெட் புகையை நழுவவிட்டபடி இருந்தது.

   ''டோன்ட் மிஸ்டேக்... 'ஆதிபகவன்’ படத்துல நான் சிகரெட் பிடிக்கிற பொண்ணு. ஆனா, எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது. அமீர் சார் கண்டிப்பா தம் அடிச்சே ஆகணும்னு சொல்லிட்டார். ரொம்ப இயல்பா இருக்கணும்னு 28 சிகரெட் பிடிச்சுப் பழகிட்டு ஷாட்டுக்குப் போனேன். இன்னும் சிகரெட் ஷாட்ஸ் இருக்கு... அதனால இது ஹோம்வொர்க்!''- கலகல வெனச் சிரிக்கிறார் நீத்து.

''தமிழ் கத்துக்கிட்டீங்களா?''

''கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன். சென்னைத் தமிழ் ரொம்ப ஈஸி. ஆனா, மதுரைத் தமிழ்தான்... கஷ்டப்படுத்துறாய்ங்கய்யா!''

'' 'கன்னித் தீவு பொண்ணா...’ மாதிரி குத்துப் பாட்டுக்கு மட்டும் இனிமே ஆடுவீங்களா?''

''கண்டிப்பா. அது என்னவோ எனக்கு தமிழ் ஃபோக் சாங்ஸ் ரொம்பப் பிடிக்குது. அதுக்காகவே ஆடுவேன். அந்தப் பாட்டுக்கு ஆடும்போதுதான் அமீர் சார் பழக்கமானாரு. அதனாலதான் எனக்கு 'ஆதிபகவன்’ படத்துல ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது. அதனால குத்துப் பாட்டுக்கு எப்பவும் என்கிட்ட க்ரீன் சிக்னல்தான்!''

"தமிழ்ப் பசங்களா... ரெடியா?"

''அமீர்னா டெரர்னு உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க. அவரைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?''

''ரொம்ப பயங்கரமாக் கோபப்படுவார். தேவையில்லாம பேச்சுகூடக் கொடுக்காதீங்கனு சொன்னாங்க. அதனால பயந்துட்டு நானும் ஆரம்பத்துல பேசலை. அதைக் கவனிச்சுட்டார்போல. அவரே என்னைக் கூப்பிட்டு, 'என்னைப் பார்த்துப் பயந்துட்டியா?’னு கேட்டார். எதுவும் சொல்லாமச் சிரிச்சேன். அப்புறம் பழகிப் பார்த்தா, செம ஸ்வீட்டா இருக்கார். இப்போ அவர் எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்!''

''ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பாராட்டுக்களைக் குவிக்கிற அளவுக்கு ஒரு படம் தயாரிச்சு இருக்கீங்க... என்ன விஷயம்?''

''என் அண்ணன் நித்தின் சந்திராவும் தம்பி அபிஷேக் சந்திராவும் சினிமாலதான் இருக்காங்க. அண்ணன் டைரக்ட் பண்ண படத்தை நானே தயாரிச்சேன். இந்தி, போஜ்புரினு ரெண்டு மொழிகள்ல வெளியான 'தேஸ்வா’ படம் நல்ல ஹிட். பீகார்ல வேலை இல்லாத இளைஞர்கள் எப்படி க்ரைம்ல ஈடுபடறாங்க... இதுதான் படம். சவுத் ஏசியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாக்களில் படத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு. மொத்தக் குடும்பமும் சந்தோஷத்துல இருக்கோம்!''

''அடுத்தடுத்து தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பீங்கனு பார்த்தா, ஏதோ க்ரீக் படத்துல நடிக்கிறீங்கனு நியூஸ் வருது... அது என்ன விஷயம்?''

''ஆமா... 'ஹோம் ஸ்வீட் ஹோம்’னு ஒரு க்ரீக் மொழிப் படம். பஞ்சாபிப் பொண்ணு கேரக்டர் எனக்கு. நெத்தில பெரிய பொட்டு, மூக்குத்தி, தலையை மறைச்சு சேலைனு ரொம்ப ரகளையா இருக்கு என் கேரக்டர். படத்தில் மூணு பேர் என்னைத் துரத்தித் துரத்திக் காதலிப்பாங்க. ஆனா, யார்கிட்டயும் சிக்க மாட்டேன். ஜாலியா இருக்கு ஹோம்லியா நடிக்க!''

''ஏதோ டேக்வான்டோ போட்டியில் பிளாக் பெல்ட் ஜெயிச்சீங்கனு ஒரு நியூஸ்...''

''ஆமா... கராத்தே மாதிரியான தற்காப்புக் கலை டேக்வான்டோ. இப்போ உலக டேக்வான்டோ சாம்பியன்ஷிப்ல இந்தியா சார்பில் கலந்துக்கிட்டு டான் பிளாக் பெல்ட் ஜெயிச்சேன். இந்தியாவில் அந்தப் பட்டம் ஜெயிச்ச முதல் பொண்ணு நான்தான்னு சொல்றாங்க. என் ரோல் மாடல் கிராண்ட்மாஸ்டர் ஜிம்மி கையாலயே அந்தப் பட்டம் வாங்கினது ரொம்பப் பெருமையா இருந்தது. எனக்கு ஒவ்வொரு நாளும் புதுசா ஏதாவது ஒரு விஷயம் கத்துக்கிட்டே இருக்கணும். அந்த டேக்வான்டோ பயிற்சிதான் 'ஆதிபகவன்’ படத்துல என்னை ஆக்ஷன் ரோல் பண்ணவெச்சது. படம் ரிலீஸான பிறகு நல்ல ரீச் இருந்தா, தமிழ்நாட்டுல டேக்வான்டோ பயிற்சி அகாடமி ஆரம்பிக்கக்கூட நான் ரெடி!''

என்ன பாய்ஸ்... நீங்க ரெடியா?