Published:Updated:

ஆசைப்பட்டு ஆர்க்கிடெக்சர் இஷ்டப்பட்டு இசை!

பி.என். அர்ச்சனாபடங்கள் : ஸ்டீவ்ஸ்

ஆசைப்பட்டு ஆர்க்கிடெக்சர் இஷ்டப்பட்டு இசை!

பி.என். அர்ச்சனாபடங்கள் : ஸ்டீவ்ஸ்

Published:Updated:
##~##

ணிரத்னம் இயக்கும் 'கடல்’ படத்தின் முதல் சென்சேஷன்... 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்...’ பாடல்.

 ஏ.ஆர்.ரஹ்மானின் சர்வதேசச் சாயல் இசையில் கிராமத்துத் தெம்மாங்காக வசீகரிக்கும் பாடலைப் பாடியிருக்கும் சக்தி ஸ்ரீகோபாலன்... மிஸ் டேலன்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நான்’ பட ஹிட் நம்பரான 'மக்காயேலா’ பாடல் மூலம் சக்தியின் குரல் முன்னரே பரிச்சயம்தான் என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க, எம் டி.வி. ஷோவில் 'நெஞ்சுக்குள்ளே’ பாடலைப் பாடியதன் மூலம் புகழ் வெளிச்சத்தில் நனைகிறார் சக்தி. ஆர்க்கிடெக்சர் மாணவி.

''நான் 13 வருஷமா க்ளாஸிக்கல் இசை கத்துட்டு இருக்கேன். அண்ணா பல்கலைக்கழகத்துல ஆர்க்கிடெக்சர் முடிச்சிட்டு ஃப்ரீலான்ஸரா வேலை பார்த்துட்டு இருக்கேன். தமிழ்க் குடும்பம்தான். ஆனா அப்பா, அம்மா எல்லாம் கேரளாவில் இருக்காங்க. என் முதல் மேடை அனுபவம்னு பார்த்தா, 'சாரங்’ விழாவில் மேடை ஏறினதுதான். சும்மா என் நண்பர்களைப் பார்க்கப்போன இடத்தில் என்னை மேடை ஏறிப் பாடச் சொல்லிட்டாங்க. நான் பாடி முடிச்சதும் பயங்கர அப்ளாஸ். 'இவ்ளோ நல்லாப் பாடின உங்களுக்கு ஒரு கிடார்கூட ஏற்பாடு பண்ண முடியலையே’னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அந்தத் தன்னம்பிக்கைதான் இப்ப ஏ.ஆர்.ரஹ்மான் சாரை எனக்காக வாசிக்கவைக்கிற அளவுக்குக் கொண்டுவந்திருக்கு!''

ஆசைப்பட்டு ஆர்க்கிடெக்சர் இஷ்டப்பட்டு இசை!

''சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?''

''ஒரு மியூஸிக் ஹன்ட் போட்டியில் ஜெயிச்சேன். அப்போ கிடைச்ச அறிமுகம் மூலமா விஜய் ஆண்டனி சார் என்னை சினிமாவில் பாடவெச்சார். அப்புறம் ஒரு ஃப்ரெண்ட் ஆல்பத்தில் பாடுறதுக்காக ஒரு ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். அப்போ காபி மெஷின்கிட்ட நின்னு நான் பாட வேண்டிய லிரிக்கை சும்மா ஹம் பண்ணிட்டு இருந்தேன். அப்போ அந்தப் பக்கமா ரஹ்மான் சார் போயிருக்கார் போல. எனக்குத் தெரியாது. என் குரல் நல்லா இருக்குனு சொல்லி, என் நம்பரை வாங்கிவெச்சுக்கச் சொல்லி இருக்கார். அப்புறம் திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு ஒரு டிராக் பாடச் சொன்னார். அப்பப்போ சின்னச் சின்ன டிராக் மட்டும் பாடிட்டு வருவேன். 'நெஞ்சுக்குள்ள...’ பாட்டை நான்தான் பாடுவேன்னு ரெக்கார்டிங்குக்கு முந்தின நிமிஷம் வரை எனக்குத் தெரியாது. அந்தப் பாட்டுக்கான டிஸ்கஷன் ரஹ்மான் சார் ஸ்டுடியோல நடக்கும்போது, திடீர்னு என்னைக் கூப்பிட்ட ரஹ்மான் சார், 'ஒரு பாட்டு பாடித் தர்றீங்களா?’னு கேட்டார். சொல்லப்போனா, அப்போ எனக்குக் குரல் அந்த அளவுக்குத் தெளிவா இல்லை. ரெண்டு, மூணு நாளாப் பயிற்சியும் எடுக்கலை. ஆனா, அதெல்லாம் சொல்ல முடியாதே... உடனே ஓ.கே. சொல்லிப் பாடினேன். அது இந்த அளவு ரீச் ஆனது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

ஆசைப்பட்டு ஆர்க்கிடெக்சர் இஷ்டப்பட்டு இசை!

''கொஞ்சிக் கொஞ்சி மழலைத் தமிழ் பேசுறீங்க... ஆனா, 'நெஞ்சுக் குள்ள...’ பாட்டு முழுக்கவே கிராமத்து டோன்ல இருக்கு... எப்படிச் சமாளிச்சீங்க?''

''அந்தப் பாட்டோட பின்னணி, அது படத்துல எங்கே வருதுன்னு எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணோட காதல் வலியை வெளிப்படுத்தணும்னு மட்டும் ரஹ்மான் சார் சொன்னார். ஒரு சில வார்த்தைகள் எனக்குப் புரியலை. அதுக்குல்லாம் அர்த்தம் கேட்டுப் புரிஞ்சுட்டு, எமோஷன் சேர்த்துப் பாடினேன். 'இப்படி எல்லாம் பாடு’ன்னுரஹ்மான் சார் சொல்லவே இல்லை. நான் பாடினதுல இருந்த பெஸ்ட் போர்ஷனை மட்டும் எடுத் துக்கிட்டார்!''

'' 'மக்காயேலா’ன்னா என்ன அர்த்தம்?''

''அர்த்தம்னு எதுவும் சொல்ல முடியாது. ஹீப்ரு மொழியில் இருந்து எடுத்த வார்த்தைனு சொன்னாங்க.''

''வாய்ப்பு கிடைச்சா நடிப்பீங்களா?''

''நடிக்க வாய்ப்பு கிடைக்கிற அளவுக்கு நான் அழகாவா இருக்கேன்! பார்க்கலாம்... நல்ல வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் யோசிப்பேன். ரெண்டு பாட்டுக்கு மியூஸிக் பண்ணிவெச்சிருக்கேன். ஒரு ஸ்டுடியோ பிடிச்சு அதை ரெக்கார்ட் பண்ணணும்னு ஆசை. அதுதான் இப்போ என்னோட உடனடிக் கனவு.

ஒரு தடவை ஜெர்மன் ஆர்க்கிடெக்சர் ஒருத்தர் என் புரொஃபைல் பார்த்துட்டு, 'எப்பவாவது இசை, ஆர்க்கிடெக்சர்... ரெண்டுல ஏதாச்சும் ஒண்ணுதான் தேர்ந்தெடுக்கணும்னு ஒரு நிலைமை வந்தா என்ன செய்வே?’னு கேட்டார்.

'இசைதான்’னு சொன்னேன். ஆசைப்பட்டுதான் ஆர்க்கிடெக்சர் படிச்சேன். ஆனா, இசைதான் இப்போ என் சாய்ஸ்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism