Published:Updated:

"சந்தானம் பி கேர்ஃபுல்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : ஜெ.தான்யராஜு

"சந்தானம் பி கேர்ஃபுல்!"

க.ராஜீவ்காந்திபடங்கள் : ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

'ண்ணா... ஒண்ணு, ரெண்டு இல்லீங்ணா... பல வருஷப் போராட்டங்ணா.... வேர்ல வெந்நி ஊத்திராதீங்க!'' ஜாலி பேட்டி என்று சென்று நின்றதும் பம்மிப் பதுங்கினார் சத்யன். இடம் - 'ஒன்பதுல குரு’ ஷூட்டிங் ஸ்பாட்.

 ''திடீர்னு உங்க மொபைல்ல ஜனாதிபதியே லைனுக்கு வந்து 'இந்த வருஷம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உங்களுக்குத்தான்’னு சொன்னா எப்பிடி இருக்கும்?''

''சந்தோஷத்துல கேஸ் ரொம்ப லீக் ஆக ஆரம்பிச்சுடும். இருக்கற கேஸ்லாம் லீக் ஆகி ஙொய்...யினு ஆயிடுவேன். ஏங்க... காமெடின்னாலும் அதுக்கும் ஒரு லாஜிக் பார்க்க மாட்டீங்களா?''

'' 'நண்பன்’ல ஞானசுண்டி சூரணம் சாப்பிட்டீங்க... நிஜத்துல என்ன லேகியம் சாப்பிட்டிருக்கீங்க?''

''ஓ... ஒரு முடிவோடதான் கிளம்பி வந்துருக்கீங்களா? அப்போ நானும் உங்க ரூட்டுக்கே வர்றேன். ஒரு தடவை சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டிருக்கேன். சும்மா அரேபியக் குதிரை கணக்காத் திமிறுவோம்னு காத்துட்டு இருந்தா, டாய்லெட்ல தண்ணி தீர்ந்ததுதான் மிச்சம். சிட்டுக் குருவி கணக்காவே மெலிஞ்சு கரைஞ்சு போயிட்டேன்!''

"சந்தானம் பி கேர்ஃபுல்!"

''உங்க சித்தப்பா சத்யராஜ் மாதிரி யாருக்காவது அல்வா கொடுத்திருக்கீங்களா?''

''நிறையங்ணா... ஆனா, சித்தப்பு மாதிரி கஸ்தூரி மாதிரியான ஃபிகர்களுக்கு இல்லை. 60 வயசைத் தாண்டுன பாசக்கார பாட்டிகளுக்கு மட்டும்தான். அதுவும் ஏன்னா, அவங்களால கடுக்குமுடுக்குனு காராச்சேவு, மிக்சர்லாம் கடிச்சுச் சாப்பிட முடியாது. அதனால லபக்குனு வழுக்கிட்டுப் போற மாதிரி அல்வா வாங்கிக் கொடுத்துருவேன். அதுல ஷ§கர் எகிறி பாஸ்போர்ட் வாங்குன அப்பத்தாக்களும் இருக்காங்க!''

''அது என்ன ராசி... எல்லாப் படங்கள்லேயும் டுபாக்கூர் போலீஸ்னா உங்களைக் கூப்பிடுறாங்க?''  

''நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு வால்டர் வெற்றிவேல் தூங்குறான். ஆனா, எவ்வளவு மெனக்கெட்டாலும் முழிப்பேனாங்கறான்... நல்லாக் கவுந்தடிச்சு படுத்துர்றான்... அவனை முழிப்பாட்ட ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்களேன்!''

''எக்ஸாம்ல ரெண்டாவது ரேங்க் வாங்கினதுக்கே, 'நண்பன்’ல அவ்வளவு அழுது சீன் போட்டு நடிச்சிருந்தீங்க. உண்மை சொல்லுங்க... காலேஜ் படிக்கும்போது நீங்க எந்த பெஞ்ச்?''

''காலேஜுக்கு வெளில இருக்கற டீக்கடை பெஞ்ச். கிளாஸுக்குள்ள போனாத்தானே? உலகத்துலயே காலேஜுக்குள்ள தொலைஞ்சுபோன ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன். நமக்கு எப்பவாவதுதான் காலேஜுக்குப் போய்ப் பழக்கம். ஒரு தடவை ரொம்ப நாள் கழிச்சு காலேஜுக்குள்ள போயிட்டேன். வெளிய வர வழி தெரியலை. அப்புறம் தொலைஞ்சுபோன என்னை ஆள் வெச்சுக் கண்டுபுடிச்சுக் கூட்டிட்டுப் போனாங்க!''

''சோலோ காமெடியனா கலக்க ஆரம்பிச்சுட்டீங்களே... அப்போ சந்தானம் மார்க்கெட் காலியா?''

''ஏங்க... இதை யாரும் உங்ககிட்ட சொல்லலையா? 'நண்பனுக்கு’ அப்புறம் நம்ம கிராஃப் எங்கேயோ எகிறிடுச்சு. ஹலோ சந்தானம்... பி கேர்ஃபுல். என்கிட்ட மோதாதே!''

''அப்போ தமிழ் சினிமால உங்களுக்கு யார் போட்டி?''

''கமல் சார்தான். அவருக்கு செம டஃப் கொடுக்கத்தான், இந்தப் படத்துல சாமியார், சிங், போலீஸ்னு மொத்தம் 10 கெட்டப் இருக்கு. அதாவது, இது ஒரு 'மினி தசாவதாரம்’. அட, 'விஸ்வரூபம்’ படத்துக்குப் போட்டியா இந்தப் படம் பட்டையைக் கிளப்பும் பாருங்க!''

''நீங்க ஹீரோவா நடிச்சா யார் காமெடியன்?''

''ம்ஹூம். அதெல்லாம் முடியாது. நானேதான் காமெடி பண்ணுவேன். டபுள் ரோல். ஓ.கே-வா?''

"சந்தானம் பி கேர்ஃபுல்!"

''சத்யராஜும் நீங்களும் சேர்ந்து ஒரு படம் முழுக்க நடிச்சா... அதுக்கு என்ன பேரு வைக்கலாம்?''  

''லொள்ளாதி லொள்ளன்! அதுக்கு ஒன் லைன்கூட ரெடி. அவர் ஒரு டான்... நான் டெபுட்டி டான். படம் முழுக்க ஒரே கற்பழிப்புதான். சித்தப்பா யார் யாருன்னு டிக் அடிச்சுட்டுப் போயிடுவார். நான் அவங்களை ஒண்ணா வெச்சு சின்சியரா கற்பழிக்கணும்... ஐயோ... 'நண்பன்’ ஹேங்க் ஓவர் இன்னும் போகலைங்ணா... அது கற்பழிப்பு இல்லை... கற்பிப்பு!''

''எதிர்காலத் திட்டம் என்ன?''

''நாலு ஆஸ்கர். கைல ரெண்டு, அக்குள்ல ரெண்டு. அதுக்கு மேல கொடுத்தாங்கன்னா, நம்ம கோயம்புத்தூர் அட்ரஸ் சொல்லி அதுக்கு பார்சல் போடுங்கனு சொல்லிருவேன். அதுக்காக பவர் ஸ்டார்கிட்ட ஸ்பெஷல் கோச்சிங் எடுத்துக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு. போதுமா?''