ஸ்பெஷல் -1
Published:Updated:

வாலியிடம் கால்ஷீட்!

ஜாலி மணிரத்னம்க.ராஜீவ்காந்திபடம் : ஜெ.வேங்கடராஜ்

##~##

விஞர் நெல்லை ஜெயந்தாவால் தொகுக்கப்பட்டு, பொதிகை தொலைக்காட்சியில் 82 வாரங்கள் ஒளிபரப்பாகிய 'வாலிப வாலி’யைப் புத்தகமாக்கி வெளியிட்ட விழா அது. இயக்குநர்கள் மணிரத்னம், பாக்யராஜ், இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், தேவா, நடிகர்கள் கார்த்தி, சார்லி, பாண்டியராஜன், தயாரிப்பாளர் ராம்குமார் எனப் பிரபலங்களால் நிறைந்திருந்த விழாவில் இருந்து சில துளிகள்...

 ஒட்டுமொத்த அரங்கத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கவைத்தார் மணிரத்னம். ''வாலி சார், அவருக்குப் பிடிக்காத விஷயமா இருந்தாக்கூட அதையும் சந்தோஷமா செய்யக் கூடியவர். அவர் கிட்ட நான் அடிக்கடி நினைச்சு ஆச்சர்யப்படக் கூடிய விஷயம் இது. அவருக்குள்ள அற்புத மான நடிகர் இருக்கார். 'ஹே ராம்’ பார்த்தப்போ  அசந்துபோனேன். வாலி சார், சீக்கிரமாவே உங்ககிட்ட கால்ஷீட் கேட்டு வருவேன். டைம் கொடுங்க'' என்று கலகலக்க வைத்தார் மணி ரத்னம்.

வாலியிடம் கால்ஷீட்!

'சமாச்சார’மாகப் பேசி விழாவைக் கலகலப்பாக்கினார் பாக்யராஜ். ''வாலி சார்னாலே வெத்தலை டப்பாதான். ஒரு தடவை அவர்கிட்ட  இருந்து வெத்தலை எடுத்துப் போட்டேன். அதைப் பார்த்துட்டு, 'என்ன ரசிகன்யா நீ? வெத்தலையையே வயசுப்புள்ளையத் தடவுற மாதிரியே தடவுறி யே?’ன்னாரு. இந்தப் புத்தகத்துல ஒரு இடத்துல வாலி சொல்றாரு... 'எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிற வரைக்கும் சோறு இல்லை. சந்தித்த பின்பு சோறு திங்க நேரம் இல்லை’னு. அந்த நன்றி உணர்வுதான் வாலி சாரோட நீடிச்ச புகழுக்குக் காரணம்'' என்றார்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய வாலி ''நானும் கண்ணதாசனும் எதிரிகள்னு நிறையப் பேரு நெனைச்சுட்டு இருக்காங்க. அது தப்பு. நானும் கண்ணதாசனும் எலியும் பூனையும் அல்ல, எதுகையும் மோனையும் போல'' என்று பழைய நாட்களில் நடந்தார்.

பாபநாசம் சிவன் முதல் கண்ணதாசன் வரை மூத்த கவிஞர்களின் வாரிசுகள் 10 பேர் வாலிக்குச் சிறப்பு செய்து வாழ்த்தினர். அங்கே வாழ்த் தப்பட்டது வாலி மட்டும் அல்ல; தமிழும்தான்!