Published:Updated:

விமர்சனம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

விகடன் விமர்சனக் குழு

விமர்சனம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

"என்ன ஆச்சு?

 படத்துக்குப் போனோம்... ஒரு டூயட் கூட இல்லை... ஹீரோயின் கிட்டத்தட்ட இல்லை... ஹீரோதான் வில்லன். நாலு பிட் வசனத்தைத்தான் படம் முழுக்கத் திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனா, படம் முழுக்கக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுட்டே இருந்தோமே... இது எப்படி?'' - 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்’ படம் பார்த்து வெளியே வந்து நீண்ட நேரத்துக்குப் பிறகும் நமது 'மெடுலா ஆப்லங்கேட்டா’வில் அலைமோதிய சிந்தனை இதுதான். பாஸ்... பட்டையைக் கிளப்பிட்டீங்க.

நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும்போது விஜய் சேதுபதிக்குத் தலையில் அடிபட்டு, கடந்த ஒரு வருட நினைவுகள் மறந்துவிடுகின்றன. அந்த மறதிப் பட்டியலில் அடுத்த இரண்டே நாட்களில் மணம் முடிக்க இருக்கும் காதலியும் இருந்தால்... நண்பர்களின் பி.பி. எப்படி எகிறும்? அதைச் சிந்தாமல் சிதறாமல் நமக்கும்

விமர்சனம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

அப்படியே கடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன். 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'என்.கே.பி.கே.’ கூட்டணி!

'மறதி’ நாயகனாக விஜய் சேதுபதி. 'என்னாச்சி?’, 'ப்பா... பேய் மாதிரி இருக்காடா!’, 'யாருக்குடா கல்யாணம்?’, 'நீ சொன்னா இந்த பில்டிங் மாடில இருந்துகூடக் குதிப்பேன்டா!’ என அதே வசனம், அதே ரியாக்ஷன்தான் படம் முழுக்க. ஆனால், சின்னச் சின்ன சேட்டைகள் மூலம் கலக்குகிறார் விஜய்.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.

'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல. இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!

தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)

விமர்சனம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை. நிஜ சம்பவத்தில் தொடர்புஉடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே!  

முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த காமெடி எக்ஸ்பிரஸ்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - படிக்க சுவாரஸ்யமான காமெடி நாவல்!