Published:Updated:

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

Published:Updated:

தீவிரவாதிகளை ஒழிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்டான விஜயகாந்த், 'துப்பாக்கி’ படத்தைப் பார்த்த தும் டென்ஷன் ஆகிறார். ஏ.ஆர்.முருகதாஸை ரெண்டு தட்டுத் தட்டி, அதே கதையை, இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித் தரும்படி வற்புறுத்துகிறார். இதோ உருவாகிவிட்டது 'ராணுவத் துப்பாக்கி.’

ஓப்பனிங் சாங்கில் ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியை (தேசியக் கொடி அல்ல தே.மு.தி.க. கொடி... ஆங்!) கேப்டனைச் சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுகிறார்கள். அவரை வரவேற்க ரயில் நிலையத்தில் மும்பைத் தமிழர்கள் எல்லாம் காத்துக்கிடக்கிறார்கள். பத்திரிகையாளர்களும் மைக்கோடு நிற்கிறார்கள். 'என்ன சார், மிலிட்டரில இருந்து வர்றீங்க. இவ்வளவு குண்டா இருக்கீங்களே?' என்று அவர்கள் கேட்க 'நீங்களாடா எனக்குச் சோறு போடுறீங்க?' என்று கோபமாகக் கேட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறார் கேப்டன்.

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எப்பப் பார்த்தாலும் நாட்டைப் பத்தியே சிந்திச்சுக்கிட்டு இருக்க. ஆகஸ்ட் வந்தா, உனக்கு 30 வயசு(!). அதனால உனக்கொரு கால்கட்டுப் போடப் போறோம்''னு சொல்லி, நமீதாவைப் பெண் பார்க்கக் கூட்டிட்டுப் போறாங்க கேப்டனின் பெற்றோர். அவர்கள் பேச்சைத் தட்ட முடியாமல் சீருடையோடு பெண் பார்க்கப் போகும் கேப்டன், 'இந்தப் புனிதமான உடையைப் போட்டுக்கிட்டு நான் பெண்களை ரசிக்கிறதில்லை' என்று பஞ்ச் பேசி எஸ்ஸாகி விடுகிறார். 'ஏன்டா அந்தப் பெண்ணை பிடிக்கலைன்னு சொன்ன?' என்று போகும் வழியில் பெற்றோர் கேட்க, 'இல்லம்மா, என்னோடு கம்பேர் பண்ணும்போது அந்தப் பொண்ணு ரொம்ப ஒல்லியா இருக்கா' என்று சொல்கிறார். விஷயம் தெரிந்து கொதித்தெழும் நமீதா, டூ பீஸ் உடையில் ஆட்டம் போட்டு, தான் ஒல்லி இல்லை என்று நிரூபிக்க, கேப்டனும் நாக்கைத் துருத்திக்கொண்டே ஒன்றாக ஆடுகிறார். காதல் மலர்கிறது.

விடுமுறையில் வந்த கேப்டனுக்கு, மும்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாஸ்கர் (தேர்தல் பிரசாரத்தில் அடிவாங்கிய அந்த பாஸ்கர் இல்லீங்க. எம்.எஸ்.பாஸ்கர்!) நண்பர். சும்மாச் சும்மா அவரை அடித்துக்கொண்டே இருக்கிறார் கேப்டன். அடிவாங்கிக்கொண்டே போலீஸ் ஜீப்பை ஓட்ட முடியாது என்பதால், பஸ்ஸில் போகிறார்கள் இருவரும்.

அப்போது, ஒரு பெண்ணின் இடுப்பை யாரோ கிள்ளிவிட, அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எல்லோரையும் வரிசையில் நிறுத்தி மீண்டும் கிள்ளச் சொல்கிறார் கேப்டன். 'எங்கே நாம் பிடிபட்டுவிடுவோமோ?’ என்று ஒருத்தன் மட்டும் ஓட்டம் பிடிக்க, அவனை விரட்டிப் பிடிக்கிறார் கேப்டன். அப்போது பஸ்ஸில் குண்டு வெடித்து பலர் இறந்துபோகிறார்கள். கேப்டனிடம் பிடிபட்டவர் பெயர் கந்தர்ராஜன்.

கந்தர்ராஜனைக் கடத்திக் கொண்டுபோய், உண்மையைக் கறக்க முயற்சிக்கிறார் கேப்டன். முதலில் மறுக்கும் அவர், ஒவ்வொரு சொத்துக்களாக கேப்டன் எழுதி வாங்க ஆரம்பித்ததும், எங்கே தன் சுய சம்பாத்தியத்தையும் பறித்துவிடுவாரோ என்று பயந்துபோய் உண்மையைச் சொல்லிவிடுகிறார். தன்னைப் போல் மேலும் 12 பேர் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதாகச் சொல்ல, கேப்டனின் வேட்டை ஆரம்பமாகிறது. திட்டக்குடி, ராதாபுரம், பேராவூரணி போன்ற ஊர்களுக்குப் போய் ஸ்லீப்பர் செல்களான தமிழரசன், அந்தோணி ராயப்பன், வருண்பாண்டியன் ஆகியோரைக் கடத்திக் கொண்டுவந்துவிடுகிறார்கள் கேப்டனின் படையினர்.

'இந்த ஸ்லீப்பர் செல்லில் கண்ணுரொட்டி ராமச்சந்திரன், சதீஷ் ஆகியோர் இருக்கிறார்களா?’ என்று கண்டறிவதற்காக, கடத்தி வந்த மூணு பேரையும் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து, தான் நடித்த பழைய படங்களின் டி.வி.டி-க்களை எல்லாம் போட்டு உச்சக்கட்ட சித்ரவதை செய்கிறார். அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் அல்லவா? அதனால் அனைத்து காட்சிகளையும் விசிலடித்து ரசிக் கிறார்கள். கடுப்பாகிப்போன கேப்டன், தன் நண்பன்

''ஸ்லீப்பர் செல்லை ஒழிக்கிறவரைக்கும் ஸ்லீப்பிங்கே கிடையாதுடா ஆங்!''

பாஸ்கரைப் போட்டு அடிஅடியென்று அடிக்கிறார். அவருக்கு எப்போதுமே யாரையாவது அடித்தால்தான் புதிய யோசனைகள் தோன்றும். எதிர்பார்த்தபடியே ஒரு யோசனை அவருக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதைச் சொன்னால் யாரும் படத்தைப் பார்க்க மாட்டீர்கள் என்பதால், (இல்லாட்டி மட்டும் போகவா போறோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது) நேரடியாக கிளைமாக்ஸ் காட்சிக்கு வருகிறோம்.

கிளைமாக்ஸில் முக்கியமான திருப்பம். அந்த ஸ்லீப்பர் செல் நெட்ஒர்க்குக்குத் தலைவரே சதீஷ்தான் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார் கேப்டன். சொந்தபந்தம் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு நாட்டு நலனுக்காக சதீஷையும் அடிக்கத் தயாராகிறார். அப்போது குறுக்கே வரும் நமீதா, 'நான்தான் இதைச் செய்யச் சொன்னேன்' என்று சொல்ல அதிர்ச்சியாகிறார் கேப்டன்.

'40 நாள் லீவு விட்டுட்டாங்கனு நீங்க பாட்டுக்குச் சும்மா ஊர் சுத்தறது, மிலிட்ரி கேன்டீன்ல வாங்கிட்டு வந்த சரக்கை நண்பர்களுக்குக் கொடுத்து ஊர் ஊரா போய் டான்ஸ் ஆடுறதுனு இருந்தா எப்படிங்க நாட்டைக் காப்பாத்த முடியும்? இந்திய ராணுவத் தளபதியா மாறணும்னா நீங்க தொடர்ந்து வேலை பார்க்கணும்ங்கிறதுக்காகத்தான் நான் இந்த நாடகத்தை நடத்துனேன்' என்று நமீ சொன்னதும் அவர்களைப் பார்த்துத் திரும்புகிறார் கேப்டன்.

'அண்ணே, அண்ணி சொல்றது உண்மைதான். இதுக்கு மேல அடிக்காதீங்க. படத்துல வன்முறை அதிகம் இருக்குனு சென்சார் போர்டுல சொல்லிடப் போறாங்க' என்று கதறுகிறார்கள் ஸ்லீப்பர் செல்கள். ''நீங்க ஆரம்பிச்ச நாடகத்தை எப்படி முடிச்சேனு பார்த்தீங்களா?'' என்று பஞ்ச் பேசிவிட்டு கேப்டன் ரயில் ஏறுகிறார். ஓப்பனிங்கில் அவரை வரவேற்க வந்த கூட்டத்தைப் போல 20 மடங்கு பேர் அவரைச் சந்தோஷமாக வழியனுப்பிவைப்பதுடன் படம் முடிவடைகிறது. ஆங்..!

தன்னைக் கட்டாயப்படுத்தி படம் இயக்கவைத்த விஜயகாந்த்தை அவர் படத்திலேயே வாரு, வாரு என்று வாரிய மகிழ்ச்சியுடன் 'எ ஃபிலிம் பை ஏ.ஆர்.முருகதாஸ்’ என்று பெயர் போடுகிறார் இயக்குனர்!

- கே.கே.மகேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism