Published:Updated:

அமிதாப் தந்த அட்வைஸ்!

அமிதாப் தந்த அட்வைஸ்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
மிழில் 'வ’ வாரிவிட்டாலும், கன்னட 'ஹுடூகா ஹுடுகி’ பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் மலர்ந்து சிவந்திருக்கிறது லேகா வாஷிங்டன் முகம்! ஒரு மழைச் சந்திப்பில், ''எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?'' என்று பேட்டி ஆரம்பித்தால், ''ஐ... ஐஸ் ஐஸ்!'' என்று கைதட்டிச் சிரிக்கிறார் டியூட்டி ஃப்ரூட்டி பியூட்டி!

''இந்தி, கன்னடத்துல எல்லாம் ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஆனா, சென்னைப் பொண்ணு இன்னும் தமிழில் தடுமாறிட்டே இருக்கீங்களே?''

''நான் என்ன பண்ணட்டும்? 'ஜெயம் கொண்டான்’ படத்துக்குப் பிறகு 'தங்கை’ கேரக்டர்களா தொடர்ந்து வந்தது. 'ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்’னு முடிவெடுத்துட்டதால், எந்தப் படமும் கமிட் ஆகலை. என் அம்மா, அப்பா யாரும் சினிமா இண்டஸ்ட்ரியில் இல்லை. அப்புறமா எனக்குன்னு மேனேஜர் யாரும் இல்லை. இது எல்லாம்கூட எனக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததற்குக் காரணமா இருக்கலாம். ஆனா, இந்த ஜனவரியில் இருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன்!''

அமிதாப் தந்த அட்வைஸ்!

''இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறீங்களாமே?''

''ரொம்ப சந்தோஷமான 'யெஸ்’! என்னோட முதல் இந்திப் படம், 'பீட்டர் கயா கம்ஸே’ படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே ராஜ்குமார் சந்தோஷி இயக்கும்

அமிதாப் தந்த அட்வைஸ்!

'பவர்’ படத்தில் அமிதாப்பின் மகளாகவும், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகவும் நடிக்கிறேன். படத்தில் எனக்கு ரெண்டு டூயட். சஞ்சய் தத், அனில் கபூர் வில்லனாக நடிக்கிறாங்க. ரொம்ப கிராண்ட் டீம், பெரிய படம் தலைவரே!''

''அமிதாப் கூட நடிச்ச அனுபவம்...''

''முதல் நாள் ஷூட்டிங்கே அமிதாப் சாரும், நானும் பேசிக்கிற மாதிரியான ஷாட். நெர்வஸா நின்னுட்டு இருந்தேன். ரொம்ப நீளமான டயலாக் வேற. என் பதற்றத்தைப் பார்த்துட்டு, அமிதாப்ஜியே தோள்ல தட்டிக் கொடுத்து ரிலாக்ஸ் பண்ணாரு. ஒவ்வொரு வார்த்தையும் எப்படிப் பேசணும்னு சொல்லிக் கொடுத்தாரு. 'ரொம்ப சீனியர்கூட நடிக்கிறோம்னு எப்பவும் பதற்றமாகாதே. எப்பவும்போல் உன் ஸ்டைலில் பண்ணு’ன்னு உற்சாகப்படுத்தினார்!''

''நீங்க ரொம்ப தைரியமான பொண்ணுன்னு சிம்பு ஒரு தடவை சொன்னாரே... அப்படியா?''

அமிதாப் தந்த அட்வைஸ்!

''ஓ... அப்படியா சொன்னார். தேங்க்ஸ் சிம்பு! தைரியமான பொண்ணுங்கவும், ஏதோ காளையை அடக்குவேன்னுலாம் நினைச்சுக்காதீங்க. என் வேலையை நானே செஞ்சுக்குவேன். தனியாவே வெளியே போவேன், இயக்குநர்களைச் சந்திப்பேன், அறிமுகம் இல்லாதவங்ககிட்டகூட சகஜமா பேசுவேன். ஆனா, ஒரு வேளை பேயை நேரில் பார்த்தா பயப்படுவேனோ!''

''அந்த தைரியம்தான் 'வ குவாட்டர் கட்டிங்’ படத்தை 'மோசமான படம்’னு ட்விட்டர்ல கமென்ட் பண்ண வெச்சதா?''

''ஐயோ! நான் அப்படிலாம் எதுவுமே பண்ணலை. நம்புங்கப்பா. யாரோ என் பேர்ல பொய்யான ஐ.டி-யில் இருந்து அந்த கமென்ட் பண்ணி இருக்காங்க. 'வ குவாட்டர் கட்டிங்’ படம் நான் ரொம்ப என்ஜாய் பண்ண படம். புஷ்கர், காயத்ரி, சிவான்னு அந்த டீமே செம கலகல கூட்டணி. அவங்களோட வேலை பார்த்ததே சுவாரஸ்யமான அனுபவம்தான். ஆனா, அது ஆடியன்ஸுக்குப் போய்ச் சேரலை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு