மிழ், தெலுங்கில் 'மோஸ்ட் வான்டட் நடிகை’... சருமப் பாதிப்பு, வெயிலில் முகம் காட்டக் கூடாது, மணிரத் னத்தின் 'கடல்,’ ஷங்கரின் 'ஐ’ படங்களில் இருந்து காரணம் சொல்லாமல் விலகினார்... என இந்த அழகுப் பெண்ணைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனால், சந்தித்தால் செம சமத்தாகப் பேசுகிறார் சமந்தா!  

”காதலை ஓப்பனா சொல்ல முடியுமா?”
##~##

''சமந்தாவுக்கு என்ன ஆச்சு?''

''ஹைய்யோ, பெருசா எதுவும் இல்லை. இம்யூனிட்டி (நோய் எதிர்ப்புச் சக்தி) குறைஞ்சிடுச்சு. ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட். கொஞ்சம் முகம் டல் ஆகிருச்சு. அதான் 'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான். ஆனா, இப்போ அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு, தமிழ், தெலுங்குனு நாலு மாசத்துல நாலு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. தமிழ்ல அடுத்து லிங்குசாமி டைரக்ஷன்ல சூர்யாவுடன் நடிக்கிறேன். நிச்சயம் என் கேரியர் சூப்பரா இருக்கும்!''

'' 'நீதானே என் பொன்வசந்தம்’ டிரெய்லர் க்யூட். ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியை 'என்.இ.பி.’ நித்யா பீட் பண்ண முடியுமா?''

”காதலை ஓப்பனா சொல்ல முடியுமா?”

''நிச்சயமா! ஜெஸ்ஸியை விட நித்யாவுக்கு பெரிய கேன்வாஸ் கொடுத்திருக்கார் கௌதம் சார். சொல்லப்போனா, 'வி.டி.வி’-யைவிட 'என்.இ.பி.’ உங்க மனசுக்கு இன்னும் நெருக்கமா இருக்கும். படத்தின் ஏதோ ஒரு அஞ்சு நிமிஷம் உங்க வாழ்க்கையில நடந்திருக்கும். எனக்கும் என் மேக்கப் அசிஸ்டென்ட், காஸ்ட்யூமர்னு என் கூட இருந்தவங்களுக்கும் அந்த ஃபீல் கிடைச்சது!''  

''இப்படி ஒரு முழு ரொமான்டிக் சப்ஜெக்ட்ல ஜீவா நடிக்கிறது புதுசு. அவரை நீங்க ஈஸியா ஓவர்டேக் பண்ணியிருப்பீங்களே?''

''அட போங்க பாஸ்... ஜீவா கூட ரொமான்ஸ் படம் பண்றது கஷ்டம். எமோஷன், சென்டிமென்ட் சீனுக்கு முன்னாடி நான் மூணு நாலு மணி நேரம் பயங்கரமா ஹோம் வொர்க் பண்ணிட்டு கேமரா முன்னாடி நிப்பேன். ஆனா, டைரக்டர் ஆக்ஷன் சொல்றதுக்குள்ள சின்னதாக் கண்ணடிச்சு மொத்த மூடையும் மாத்தி சிரிக்கவெச்சிடுவார் ஜீவா. அதே நேரம், அவர் மட்டும் நல்ல பிள்ளையா கண்ணு முழுக்கக் காதலோட பார்த்துட்டு நிப்பாரு. ஸ்வீட் ராஸ்கல். அவர்கூட காமெடிப் படம் பண்றதுன்னா புகுந்து விளையாடலாம்!''

''சமந்தாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு?''

''காஜல் அகர்வால். 'பிருந்தாவனம்’ தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடிச்சப்போ, ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். அவ எனக்கு காஜ். நான் அவளுக்கு சாம். ரெண்டு பேரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. ஆனா, அப்போ சினிமா பத்திப் பேசவே மாட்டோம்!''

''சமந்தா செய்கிற நல்ல விஷயம்?''

''எதுக்கும் ஃபீல் பண்ணாம நம்மால முடிஞ்சதைப் பண்ணணும்னு நினைப்பேன். 'பிரதியுஷா’னு ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருக்கேன். ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அறுநூறு குழந்தைகளைக் கவனிச்சுக்கிறேன்.''

''சமந்தாவுக்குப் பிடிச்ச நடிகை?''

''அப்ப கஜோல். இப்ப அஞ்சலி. எனக்கு கஜோல் மாதிரி இருக்கணும்னு ஆசை. செமத்தியா நடிச்சாங்க. சரியான டைமிங்ல சினிமாவை விட்டுட்டு குடும்பத்துல செட்டில் ஆனாங்க. அந்த சிம்ப்ளிசிட்டி... சிம்ப்ளி சூப்பர். 'தமிழ் எம்.ஏ’, 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ படங்கள்ல அஞ்சலியை ரொம்பப் பிடிச்சது. ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. அஞ்சலியோட ரசிகை நான்!''

”காதலை ஓப்பனா சொல்ல முடியுமா?”

''சமந்தாவின் நேர்மைக்கு ஒரு சின்ன டெஸ்ட்... உங்களுக்குக் காதல் பூத்த தருணம் எது?''

''உண்மையைச் சொல்லியே ஆகணுமா? ம்ம்... எட்டாவது படிக்கிறப்போ ரெண்டு, மூணு பேர் மேல லவ் வந்துச்சு. பப்பி லவ். அப்புறம்... ஹலோ... நான் ஒரு பொண்ணுங்க... எல்லாத்தையும் உங்ககிட்ட ஓப்பனா சொல்ல முடியுமா? கௌம்புங்க... கௌம்புங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு