''சினிமாவில் மட்டும் இல்லை, காதல் எங்குமே அலுக்கலை. ஒவ்வொரு கணமும் ஒரு மனசு காதலால் துடிக்குது. காதலுக்கு ஏங்குது. காதலுக்காகச் சாகுது. 'ஆயிரம் முத்தங்களுடன்... தேன்மொழி’ன்னு படத்துக்குப் பேரு. இந்த சினிமா உங்களுக்குள்ள ஒரு சின்ன இறகையேனும் அசைக்கும்!'' - தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் ஷண்முகராஜ். சேரனின் சீடர்.

''காதல் உன்னதம்தான். ஆனா, இதுவரை பகிர்ந்துகொள்ளப்படாத விஷயம் என்ன வெச்சிருக்கீங்க?''

''இன்னும் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களே நிறைய இருக்கே. ஏன், முத்தத்தை எடுத்துக்குங்க... சங்க இலக்கியங்களில் இருந்து நம் முன்னோர்கள் கொடுத்த முத்தத்துக்குக் குறைவே இல்லை. காதல் கனிந்த பிறகுதான் முத்தத்துக்கான அனுமதி என்பது இலக்கியங்களில்கூட மரபு. காதலின் உச்சகட்ட வெளிப்பாடு சந்தேகமே இல்லாம, முத்தம்தான். 'விகல்பம் இல்லாத இரண்டு இதயங்களின் நிம்மதிக் குரல்’னு முத்தத்தைச் சொல்லலாம். சமயங்களில் ஒரு பெண்ணைப் பார்த்த கணத்தில் பச்சக்குனு பிடிச்சுப்போகும். இந்த சினிமாவில்... நீங்க ஒரு பெண்ணை எப்படிப் பிடிச்சிருக்குன்னு சொல்வீங்க, உங்க ஆளு எங்கே இருப்பாள், எப்படிப் பார்ப்பீங்க, எந்த விதத்தில் காதல் வரும், எதுவரை நீடிக்கும், காதல் வெற்றி பெற என்ன வழின்னு தெளிவா சொல்லி இருக்கோம்!''

''காதல் மட்டும்தான் படத்தில் விசேஷமா?''

''இந்தக் கேள்விக்குப் பெரிய பதில் இருக்கு. 'மன்மதன் அம்பு’ சினிமா பண்ணும்போது, ஒவ்வொரு நடிகரும் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரிகர்சல் எடுத்துக்கிட்டா, படம் பண்ணும்போது பளு குறையும். ஷூட்டிங் நாட்களின் அளவு கணிசமாக் குறையும்னு சொன்னார் கமல். அதை நாங்க ஒரு வருஷம் முன்னாடியே நடைமுறைப்படுத்தினோம். கிட்டத்தட்ட 372 நாட்கள் நடிகர்களை வெச்சு பயிற்சி முகாம் நடத்தினோம். 72 நடிகர்களுக்கு மேல் இதில் கலந்துக் கிட்டாங்க. பாடல் காட்சிகளுக்கான ரிகர்சல்கூட நடந்தது. அப்படியே காட்சிக்குக் காட்சி படத்தை டிஜிட்டல் கேமராவில் ஷூட் பண்ணோம். அது ரீ - ரிக்கார்டிங், எடிட் செய்யப்பட்டு, முறையாக எடுக்கப்பட்ட படம். அதைத் தயாரிப்பாளருக்குக் காண் பிச்சோம். அவர் பச்சைக் கொடி காட்ட, அதையே பிறகு ஃபிலிம்ல ஷூட் பண்ணோம். பாடல்களும் சேர்த்து ஒட்டுமொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் 31 நாட்களில் முடிந்துவிட்டது. படத்தில் 62 ஸீன். 62 ஷாட். ஒவ்வொரு ஸீனும் ஒரே ஷாட்டில் முடிஞ்சது!''

''ரொம்ப நல்ல விஷயம். தலைப்பு கவிதையா இருக்கு. படத்தில் கவிதைகள் எப்படி இருக்கும்?''

''திருக்குறளின் காமத்துப் பாலில் இருந்து 18 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தெளிவுரைகளையே பாடலாக்கி இருக்கிறோம். ஓர் ஆர்வத்தில் ஆரம்பிச்சது. ரொம்பவே சுவாரஸ்யமா வந்திருக்கு.

உதாரணமா,

'பாலோடு தேன்கலந் தற்றே, பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்’ -என்ற குறளின் தெளிவுரையை விரிவாக்கி,

'பாலோடு தேன் சேர
பணிமொழி வாய் சேர
காலோடு ஊர் சேர

கனவுகள் இமை சேர’ன்னு அர்த்தம் கெடாமல் பாடல் எழுதித் தந்தார் யுகபாரதி. இது மாதிரிதான் எல்லாப் பாடல்களும்அமைந்து இருக்கின்றன.

'வம்சம்’ படத்துக்கு இசையமைத்த தாஜ்நூர், இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், அவருக்கு இது இரண்டாவது படமாக அமைந்துவிட்டது. மனுஷன் பின்னிட்டார்!''