Published:Updated:

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

Published:Updated:

பல்பு கொடுப்பதும் வாங்குவதும் தமிழர் பண்பாடு! 2012-ல் நமக்கு பல்பு கொடுத்த டார்ச்சர் பார்ட்டிகளுக்கு எப்படி எல்லாம் பல்பு கொடுக்கலாம்? சில 'பிரகாசமான’ ஐடியாக்கள்!

நாஞ்சில் சம்பத்போல இனி ஒருவர் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக, வைகோ இனி எகிப்து, கிரேக்கம், பாரசீக வீரர்களின் வரலாற்று புதினப் புத்தகங்களை மொத்தமாக வாங்கிப் பாதாள அறையில் ஒளித்து வைத்து பல்பு கொடுக்கலாம். மேடையில் இனி 10 நிமிடங்களுக்கு மேல் தன்னைத் தவிர வேறு எந்த ஒரு தொண்டனையும் பேசவிடாமல் செய்வதன் மூலம், வருங்காலத்தில் தன் அடியற்றிப் பேசிக் கூட்டம் சேர்க்கும் சம்பத்துகளுக்கு நிரந்தரமாக பல்பு கொடுக்கலாம்!

கலைஞரிடம் 'தானைத் தலைவனுக்குத் தன்னிகரில்லாப் பாராட்டு விழா... வள்ளுவர் கோட்டத்தில் இடம்பிடிக்க உங்கள் கையப்பம் வேண்டும்’ என்று ஸ்டாலினைவிட்டுப் பொய் சொல்லவைத்து வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும். அதில் ராஜினாமா கடிதம் எழுதி தலைவர் போஸ்ட்டில் இருந்து கலைஞருக்கு கல்தா கொடுத்து கருகிப்போன பல்பு கொடுக்கலாம்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படித்தான் ஃபியூஸ் பிடுங்கணும்!

காதலுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் ராமதாஸையும் காடுவெட்டி குருவையும் ஐ.ஐ.டி. காட்டுக்குள் இருக்கும் லேபில் வைத்து ஜெமினி கணேசன், கமலஹாசன் டி.என்.ஏ-வை ஏற்றிவிட்டால், 'லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா’ எனப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். கூடவே கோ.க.மணிக்கும் அன்புமணிக்கும் சசிக்குமார், சமுத்திரக்கனி டி.என்.ஏ-வை ஏற்றிவிட்டால், அவர்கள் நாடோடிகளாக மாறி காதலர்களைச் சேர்த்துவைக்க அலைந்தால் கிடைக்குமே  கலர்ஃபுல் காதல் பல்புகள்!    

ஆர்யா நம்பருக்குப் பெண் குரலில் சைனா மொபைலில் பேசி பார்ட்டிக்கு அழைக்க வேண்டும். பெர்முடாஸ் மாட்டிக்கொன்டு வருவார் மைனர் பாய். குறிப்பிட்ட இடத்தில் சிம்பு, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா போன்றவர்களை நிற்கவிட வேண்டும். அப்போ பகீர் பல்பு வாங்குவார்யா நம்ம ஆர்யா!

சரியாக ஜெயா டி.வி-யில் 'தேன் கிண்ணம்’ ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, போயஸ் கார்டனின் ஃபியூஸ் கேரியரைப் பிடுங்கிட்டு வந்துடணும். அப்போ கொடுக்கலாம்யா அம்மாவுக்கு இருட்டு பல்பு!

மன்மோகன் சிங், அவர் வீட்டில் 'காலை டிபன் என்ன?’ என உட்காரும்போது, 'எனக்கு சமைக்கத் தெரியாது’ எனச் சமையல்காரரரைச் சொல்லவைக்கலாம். காரில் ஏறி உட்காரும்போது, 'எனக்கு கார் ஓட்டத் தெரியாது’ என டிரைவரைச் சொல்லவைக்கலாம். அப்படியே ஓட்டுக்கேட்டு வரும்போது, 'எங்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாது’ என்று பல்பு கொடுக்கலாம்!

'கம்போஸிங் ரெடி... ஆன்ட்ரியா அவெய்லபிள்’ என, கத்தி முனையில் அனிருத்தைச் சொல்லவைத்து சிம்புவையும் தனுஷையும் ஏமாற்றி வரவழைத்து, நேராக நாரத கான சபா, மியூஸிக் அகாடமி, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் என டிசம்பர் சீஸன் கச்சேரிகளில் கட்டிப்போட வேண்டும். மூர்ச்சையாகும் நிலையில் உலுக்கி எழுப்பி, 'காம்போதி எப்படி? கல்யாணி எப்படி’ என வி.டி.வி. கணேஷை விட்டுக் கரகர குரலில் கேட்கவைத்து கொலவெறி பாய்ஸுக்கு கொடுக்கலாமே குண்டு குண்டா பல்பு!      

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism