Published:Updated:

அருவி, மழை, காத்து, ஆனந்தம்!

எஸ். கலீல்ராஜா

அருவி, மழை, காத்து, ஆனந்தம்!

எஸ். கலீல்ராஜா

Published:Updated:
##~##

''எனக்குப் படிப்பு வரலை. ஸ்கூலுக்குப் போகாம, விவசாயக் கூலி வேலைக்கும் ஹோட்டல் வேலைக்கும் போனேன். இப்போ நான் ஒளிப்பதிவாளர். இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளர் ஆகணும்னு ஆசைப்பட்டு டி.எஃப்.டி. கோர்ஸுக்கு விண்ணப்பிச்சிருக்கார் ஒருத்தர். அவருக்கு வந்த அட்மிஷன் லெட்டரை அவங்க அம்மா ஒளிச்சுவெச்சுட்டாங்க. நாம செலெக்ட் ஆகலை போலன்னுட்டு, சென்னை கிளம்பி வந்து இயக்குநர் ஆகிட்டார் அவர். அந்த அவர்... டைரக்டர் பிரபு சாலமன். எப்படி இருக்கு எங்க ஃப்ளாஷ்பேக்?'' - அதிர அதிரச் சிரிக்கிறார் சுகுமார். 'கும்கி’யில் மழைக் காடு. அதல பாதாள அருவி, எழில் கொஞ்சும் மலைகள், பூ வனம், ஆறு, வயல் என இயற்கையை அள்ளித் தந்து வசீகரித்த ஒளிப்பதிவாளர்.

 ''என் அண்ணன் ஜீவன் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபர். 'மின்சாரக் கனவு’ படத்துல அவன் வேலை பார்த்தப்போ, என்னை உதவிக்குக் கூப்பிட்டான். வேண்டாவெறுப்பாதான் வந்து சேர்ந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பிரின்ட்டிங் கத்துக்கோ. போட்டோகிராஃபி புரியும்’னு ஒரு லேப்ல சேர்த்துவிட்டான். பிரின்ட்டிங் பார்த்துப் பார்த்துதான் எப்படி ஃப்ரேம் வைக்கணும்னு கத்துக்கிட்டேன். அப்போ வஸந்த் சார் 'நேருக்கு நேர்’ படத்துல ஸ்டில்ஸ் எடுக்க ஜீவனைக் கூப்பிட்டார். அவனுக்கு வெளிநாட்டுக்குப் போற வேலை இருந்ததால், என்னை அங்கே சேர்த்துவிட்டான். வஸந்த் இயக்கம், கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு... ரெண்டு பேருமே விஷ§வல்ஸ்ல கில்லி. நான் நடுவுல செமத்தியா மாட்டிக்கிட்டு நிறையத் திட்டு வாங்கி, நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

அருவி, மழை, காத்து, ஆனந்தம்!

அப்புறம் ரத்னவேலு, எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியெம்னு பிரமாதமான ஒளிப்பதிவாளர்களிடம் ஸ்டில் போட்டோகிராஃபரா இருந்தேன். அப்பதான் பிரபு சாலமன் அறிமுகம் கிடைச்சது. அவர் இயக்கின 'கொக்கி’, 'லீ’ படங்கள்ல போட்டோகிராஃபரா வேலை பார்த்தேன். 'லாடம்’ படத்தில் என்னை ஒளிப்பதிவாளர் ஆக்கினார். அதுதான் 'மைனா’, 'கும்கி’னு தாவி வந்தது.

'கும்கி’ படத்துக்காக ஜோக் அருவியோட உச்சியில இருந்து படம் பிடிக்கணும்னு சொல்லிட்டார் பிரபு சாலமன். கர்நாடக வனத் துறைகிட்ட, 'உயிரும் உடமையும் எங்கள் சொந்தப் பொறுப்பு’னு எழுதிக் கொடுத்துட்டு, மலை உச்சிக்குப் போனோம். மலை மேல ஏற மூணு மணி நேரம், இறங்க ரெண்டு மணி நேரம். தோள்ல கிலோ கணக்குல ஒளிப்பதிவுச் சாதனங்கள். யூனிட்டுக்கு நாக்கு தள்ளிருச்சு.

நாங்க போன நேரம் மழை இல்லை. அருவியில தண்ணி அடர்த்தியா இல்லை. ரெண்டு, மூணு தடவை மலை மேல ஏறி ஏமாந்ததுதான் மிச்சம். அப்போ நாலாவது நாள் எங்களுக்குன்னே பெய்ஞ்ச மாதிரி அடிச்சு ஊத்துச்சு மழை. நனைஞ்சுக்கிட்டே அருவி உச்சிக்குப் போனா பேய்க் காத்து. விக்ரம் பிரபுவையும் லட்சுமி மேனனையும் கயிறு கட்டி பாறையில படுக்கவெச்சுட்டு, கயிறை உருவிட்டோம். சுண்டு விரலைக்கூட அசைக்காம, அவ்வளவு உயரத்துல உயிர் உதற பாறை மேல படுத்திருக்காங்க. ஜிம்மி ஜிப் கேமராவை ஒரு வழியா செட் பண்ணி, குளிர்ல நடுங்கிட்டே ஷூட் பண்ணேன். ஷாட் ஓ.கே. ஆனப்ப எங்க எல்லாருக்கும் அவ்வளவு பயத்தையும் தாண்டி பயங்கர சந்தோஷம்.

அருவி, மழை, காத்து, ஆனந்தம்!

அதே மாதிரி யானை மேல நாலஞ்சு பேர் ஏறி உக்கார முடியாது. யானை அசைஞ்சு அசைஞ்சு நடக்கும்போது ஸ்டெடியா உட்காரவும் முடியாது. தனி ஆளா, கேமரா, பேட்டரி எல்லாத்தையும் உடம்புல கட்டிக்கிட்டு ஃபோகஸ் பண்றது... ரொம்பச் சிரமமா இருந்தது. அப்படி உக்காந்துட்டே, யானை காது ஓட்டை வழியா விக்ரம் பிரபு முகம் தெரியுற மாதிரி ஷாட் வெச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். 'நீங்க கஷ்டப்பட்டு எடுத்த ஷாட்களுக்கு எல்லாம் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளும் பாருங்க’னு பிரபு சொன்னார். சொன்ன மாதிரியே அள்ளுது!

படம் பார்த்துட்டு சூர்யா சார் பேசினார். 'சுகு... இது உங்க லைஃப்ல பெரிய ஸ்டெப். அடுத்து இதைவிடப் பெரிய ஸ்டெப்பா வைங்க. கவனமா வைங்க’னு சந்தோஷத்தோட, அக்கறையோட சொன்னார். அடுத்த ஸ்டெப்புக்கு ரொம்ப ஆர்வமா... ரொம்ப ரொம்பக் கவனமாக் காத்திருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism