##~##

நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவரின் மகளை அலேக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர்’ கார் கதை. அதில் மசாலா பெயின்ட் அடித்து, குத்துப் பாடல்களைப் போட்டு, கிளாமர் ரூட்டில் கியர் போட்டால்... அதுதான் 'அலெக்ஸ் பாண்டியன்’.

 அமெரிக்காவின் மோசடியான மருந்து கம்பெனி தமிழகத்தில் மருந்து விற்க அனுமதி கேட்கிறது. நேர்மையான முதல்வர் விசு மறுக்கிறார். அவரைச் சம்மதிக்கவைக்க, அவரது மகள் அனுஷ்காவை  கார்த்தி மூலம் கடத்துகிறது வில்லன் குரூப். காதலில் விழும் கார்த்தி அனுஷ்காவைக் காப்பதே கதை.  

விமர்சனம் : அலெக்ஸ் பாண்டியன்

ஹாலிவுட் காப்பி கதையில், ஏற்கெனவே தமிழ் சினிமாவில் நாம் பார்த்த காட்சிகளைப் புகுத்தி இது அந்தப் படமா, இந்தப் படமா என்று குழம்பவைத்த வகையில் வெற்றிபெற்றிருக் கிறார் இயக்குநர் சுராஜ். மற்றபடி எதுவுமே லேது.

எதிரிகளைப் பந்தாடும்போது கார்த்தியின் முறைப்புக் கண்களும், விறைப்பு உடம்பும் செம. மத்தபடி காமெடி (என்று நினைத்து)  டயலாக்குகள், பாடி லாங்குவேஜ் அத்தனையும் உஷ்ஷ்ஷப்பா... என்ன ஆசையோ, 'வேட்டைக் காரன்’ எம்.ஜி.ஆர், 'டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன்’ ரஜினியை இமிட்டேட் செய் கிறார்.

டைட்டில் போடும்போது வருகிற அனுஷ்கா, நடுவில் காணாமல் போய், இன்டர்வெல்லின்போதுதான் மீண்டும் தலைகாட்டுகிறார். என்ன ஆச்சு? அழகான அனுஷ்கா இதில் கொஞ்சம் டயர்டாகவும், கொஞ்சம் முதிர்ச்சியாகவும் தெரிகிறாரே? கதைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கிளாமர் காட்டிவிட்டு பை பை சொல்கிறார். ஆரம்பத்தில் மூன்று தங்கைகளைக் காப்பாற்ற சந்தானம் படும்பாடு சிரிப்ஸ் என்றால், அதுவே முன்பாதி முழுக்க இழுப்பது செம கடுப்ஸ். சந்தானத்துக்கு டபுள் மீனிங் டயலாக் பேச சொல்லித் தர வேண்டுமா? இதில் மூன்று தங்கச்சி ப்ளஸ் 'ஏ’டாகூட விளையாட்டுக்கள்.  

தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர்

விமர்சனம் : அலெக்ஸ் பாண்டியன்

தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காட்சிகளே அடி பின்னி எடுப்பதால், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் ஒட்டாத பாடல்களும், சரவணனின் கிறுகிறு சுற்றல் கேமராவும் பெரிய தவறாகத் தெரியவில்லை.

இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள்... ஆந்திரா டைப் காரசாரப் படங்களை ஆந்திராவில் எடுங்கள். தமிழ்நாடு பாவம் பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு