Published:Updated:

விமர்சனம் : சமர்

விகடன் விமர்சனக் குழு

விமர்சனம் : சமர்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

வில்லன் யாரென்று தெரியாமல் ஆடும் கண்ணாமூச்சியே... சமர்!  

 'ப்ரேக்-அப்’ ஆன காதலி சுனைனா வைச் சந்திக்க பாங்காக் செல்கிறார் விஷால். ஆனால், அங்கு அவரை வரச் சொன்ன சுனைனா வரவில்லை. திடீரென விஷாலைக் கொல்ல ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இன்னொரு கும்பல் அவரைக் காப்பாற்றுகிறது. அவரைத் தொழிலதிபர் எனக் கொண்டாடு கிறார்கள். போலீஸ் மரியாதை, ஆடம்பர கார், நட்சத்திர ஹோட்டல் சூட் என வசதிவாய்ப்பு தேடி வருகிறது. சில நாட்களிலேயே அது பறி போகிறது. 'தனக்கு ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தவிக்கும் விஷால், தன்னைச் சுற்றிக் கட்டப்பட்ட சதிவலையை அறுப்பதே மீதிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'டபுள் ஹீரோ கதையா... விஷாலுக்கு ஞாபக மறதியா... ஆள் மாறாட்டக் கதையா... அண்டர்ப்ளே கதையா?’ என்றெல்லாம் யோசிக்கவைத்து, இறுதியில் சஸ்பென்ஸ் கலைத்த விதத்தில் 'அட’ போடவைக்கிறார்

விமர்சனம் : சமர்

இயக்குநர் திரு. கொஞ்ச காலமாக ஃபார்மில் இல்லாத விஷாலுக்கு இது முக்கியமான படம். ஆனாலும், ஸ்க்ரீனில் விஷா லிடம் அந்த உற்சாகம் இல்லையே. சண்டைக் காட்சிகளில் செம ஆக்ரோஷம் காட்டும் விஷால், ரொமான்ஸ் காட்சிகளிலும், என்ன நடக் கிறது என்று புரியாமல் பதறும் காட்சிகளிலும் பரிதவிக்கிறார்.

திடீர் அறிமுகத்தில் விஷாலோடு காதல்கொள்ளும் பெண்ணாக த்ரிஷா. பாடல் காட்சிகளில் அழகாகவும், காதல் காட்சிகளில் அழுத்தமாகவும் இருக்கிறார். சுனைனா... சும்மாச் சுக்கும்ணா!

சிறிது நேரமே வந்தாலும் வில்லன்கள் ஜே.டி.சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவருமே மிரட்டி இருக்கிறார்கள். தாங்கள் சாவோமா, மாட்டோமா என்று விழப்போகும் விமானத்தில் வில்லன்கள் பெட் கட்டி விளையாடுவது ஒரு டெரர் சாம்பிள். ஆனால், எதற்கெடுத்தாலும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பது லேசான அலுப்பு.  

விஷால், சுனைனாவின் பிறந்த நாள் பரிசாகக் காட்டுக் குள் கிடைத்த மலர்களை வைத்துப் பூங்கொத்து தயாரிக்கும் காட்சி கவிதை. 'நீ எல்லாத்துக்கும் கணக்குவெச்சிருக்கே. நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்’, 'கேம்ல பூ விழுமா? தலை விழுமா?னு கேட்டுட்டு இருக்கக் கூடாது... விழவைக்கணும்’, 'பயமுறுத்துனீங்க... பயந்தேன். துரத்துனீங்க... ஓடுனேன். சுத்த விட்டீங்க... நின்னேன். அதனால ஜெயிச்சேன்!’- எஸ்.ராமகிருஷ்ணன், திருவின் வசனங்கள் ஆங் காங்கே ரசிக்கவைக்கின்றன.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையைவிட அதிக மாக ஈர்க்கிறது தரண்குமாரின் பின்னணி இசை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு பாங்காக் அதிரடியையும், த்ரிஷாவின் அழகியலையும் அள்ளிக் கொடுக்கிறது.

விமர்சனம் : சமர்

தன்னை டீலில் விட்ட, அவ்வளவு பெரிய வில்லன் கும்பலை எதிர்க்க விஷால் எவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும்? ஆனால், போகிற போக்கில் த்ரிஷாவைச் சாலையில் நிற்கவைத்துக் காய் நகர்த்துவது... போங்க பாஸ் போங்கு!

டெரர் கதையில் 'மிரட்டல் டான்’ என்று ஸ்ரீமனைக் காட்டி ஆங் காங்கே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். வில்லன் அண்ட் கோவில் உறுப் பினராக இருக்கும் ஜெயப் பிரகாஷ், சம்பத், ஸ்ரீமன் திருந்துவது எதற்கு என்றே தெரியவில்லையே?

லாஜிக் பார்க்காவிட்டால், பார்க்க சுவாரஸ்மான த்ரில்லர் விளையாட்டு இந்த சமர்!