Published:Updated:

" ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் ஒரு ரகசிய அடியாள்!"

க.நாகப்பன்

" ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் ஒரு ரகசிய அடியாள்!"

க.நாகப்பன்

Published:Updated:
##~##

"டைட்டில் ரொம்பப் புதுசா இருக்கு'' என்று பாராட்டினால், ''தேங்க்ஸ்'' என்று பூரிப்போடு புன்னகைக்கிறார் பிருத்வி ராஜ்குமார். அர்ஜுன், வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர். 'நான் ராஜாவாகப்போகிறேன்’ என டைட்டிலிலேயே கதை சொல்பவரைச் சந்தித்தேன்.

 ''டைட்டில்ல இருந்தே கதை ஆரம்பிச்சிரும். இமாச்சலப் பிரதேசத்தில் ஆரம்பிக்கும் கதை, இங்கே நம்ம சென்னையில் வந்து முடியும். படம் முழுக்க ரயில் ஒரு கேரக்டரா நம்மகூடவே வரும். ஊருக்கு உழைக்கிற... உலகத்தை நேசிக்கிற நல்ல மனிதர்களை ஆதரிக்கிறவர் சாந்தினி. அதனாலேயே அவருக்குப் பல பிரச்னைகள் வருது. அதில் இருந்து சாந்தினியை நகுல் எப்படிக் காப்பாத்துறார்னு கதை. இதில் தமிழீழம், காவிரிப் போராட்டம், பிளாஸ்டிக் ஒழிப்புனு நிறைய விஷயங்களைத் தொட்டுக் காட்டி இருக்கேன். எந்த ஒரு திட்டத்தை யும் அமல்படுத்துறதுக்கு முன்னாடி, 15 வருடங்கள் கழித்து அதோட பின் விளைவு கள் எப்படி இருக்கும்கிறதை அரசு யோசிக்கணும். எடுத் தோம் கவிழ்த்தோம்னு எந்தத் திட்டத்தையும் போடக் கூடாதுங்கிறதைத் தைரியமா சொல்லப்போறோம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

" ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் ஒரு ரகசிய அடியாள்!"

''அரசுத் திட்டங்களை விமர்சிக்கிற அரசியல் படமா?''

''சாப்பிடுற அரிசியில் இருந்து, குடிக்கிற தண்ணி வரைக்கும் அரசியல்தான். நான் குற்றம் சொல்லலை. திட்டங்கள் சரியா இருக்கணும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாதுன்னு அக்கறையோட சொல்றேன். 20 வருஷங்களுக்கு முன்னாடி மரங்கள் அதிகமா வளர்க்கணும்னு சீமைக் கருவேல மர விதைகள் விதைச்சாங்க. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் பகுதிகள்ல இருந்த  கடைசிச் சொட்டு நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சிருச்சு. இந்த சீமைக் கருவேல மரங்கள் வறட்சியை உண்டாக்குதுனு தெரிஞ்சு, அமெரிக்காவில் அதை அழிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போதான் நமக்கு விழிப்பு உணர்வே வந்திருக்கு. வளரும் நாடுகள் வல்லரசாவதைத் தடுக்க, பொருளாதார அடியாள் ஒவ்வொரு நாட்டுக்கு உள்ளேயும் ரகசியமா நுழையுறான். அதை ஹீரோ தடுக்கிறார். இந்த விஷயங்களைப் பிரசாரமா இல்லாம, சுவாரஸ்யமா சொல்லிஇருக்கேன்.

இது அரசியல் படம் இல்லை. எந்த இயக்கத்தோட வாடையும் படத்துல இருக்காது. ஆனா, நிறைய உண்மைகள் இருக்கும். அந்த உண்மைகள் மக்களுக்கு ஆதரவா பேசும்.''

" ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் ஒரு ரகசிய அடியாள்!"

''இந்தியிலயும் படம் பண்றீங்களாமே?''

''ஆமாம். இதே படத்தை இந்தியில் ரீ மேக் பண்றேன். ரன்பீர் கபூர் நடிக்கிறார். படம் பார்க்கும் அனுபவத்தை மக்களுக்குப் புதுசாத் தரணும். பூமி யில் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்கள் நடந்துட்டே இருக்கு. என் படமும் ஒரு புது விஷயமா இருக்கும்!''