Published:Updated:

நான் ஸ்டுப்பிட்டாவே இருந்துட்டுப் போறேன் !

க.ராஜீவ் காந்தி படங்கள்: ஜெ.தான்யராஜு

##~##

  பூ படத்தில் கவனம் கலைத்து நெகிழவைத்த பார்வதி, கடந்த ஏழு ஆண்டுகளில் 10 படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். 'சினிமாவுக்காக காம்ப்ரமைஸ் செய்துகொள்ள மாட்டேன்!’ என்ற அவருடைய உறுதிதான் காரணம்.

''ஆமா... அது உண்மைதான். என்னை ஸ்டுப்பிட்னுகூட நிறையப் பேர் சொல்வாங்க. ஆனா, அதுக்காக எல்லார் மாதிரி யும் நான் நடிக்க முடியாது. ராத்திரி படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரணும். நாளைக்கே எனக்குக் குழந்தை பிறந்தா, நான் நடிச்ச படங்களைப் பார்த்துட்டு, 'ஏம்மா இந்த மாதிரிப் படத்துல நடிச்சே?’னு கேட்டுடக் கூடாது. இது வீம்புதான். ஆனா, எனக்குப் பிடிச்சிருக்கு. ஸோ, நான் ஸ்டுப்பிட்டாவே இருந்துட்டுப் போறேன். என் கேரியர் மேல் எனக்கே

நான் ஸ்டுப்பிட்டாவே இருந்துட்டுப் போறேன் !

இல்லாத அக்கறை இங்கே பலருக்கு இருக் கிறது சந்தோஷம்தான். ஆனா, எனக்கான மீனுக்காக நான் காத்திருப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லை. அப்படிக் காத்திருந்து கிடைச்ச படம்தான் 'மரியான்’. அதுக்காக கமர்ஷியல் படங்களில் நடிக்கவே மாட்டேன்னு சொல்லலை. 'ஓம் சாந்தி ஓம்’ மாதிரியான படங்கள் பண்ண ஆசைதான். அப்படி வாய்ப்பு கிடைக்கிறப்ப பார்ப்போம்!''

''மாடர்ன் ஆடைகளில் அழகாவே இருக்கீங்க? ஆனா, நடிக்கிறப்ப பாவாடை, தாவணி மட்டும் ஏன்?''

''எனக்கும் மாடர்ன் உடைகள்தான் பிடிக்கும். சொல்லப் போனா, 'பூ’ படத்துக்கு அப்புறம் பெரிய இடைவெளி வரக் காரணமே இந்த காஸ்ட்யூம் பிரச்னைதான். அந்தப் படத்துக்கு அப்புறம் எனக்கு வந்த எல்லா வாய்ப்புகளுமே 'பூ’ மாதிரியான கிராமத்து சப்ஜெக்ட்தான். திரும்ப என் முகத்துல கறுப்பு மையைப் பூசி, தாவணி மாட்டிவிடலாம்னு பார்த்தாங்க. சரி, கதையாவது சுவாரஸ்யமா இருக்கான்னு பார்த்தா, அதுவும் இல்லை. மாரி அளவுக்கு எந்த கேரக்டரும் உயிர்ப்பா இல்லை. 'மரியான்’ பனிமலர்தான் அந்த அளவுக்குச் சவாலான கேரக்டரா இருந்தா. ஆசை ஆசையா நடிச்சுட்டு இருக்கேன்.''

''நீங்க இவ்வளவு பிடிவாதமா இருந்தா விஜய், அஜித், ஆர்யா போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதே...''

''ம்ம்ம்... இந்த டைரக்டர்கூடப் பண்ணணும், அந்த டைரக்டர்கூடப்

நான் ஸ்டுப்பிட்டாவே இருந்துட்டுப் போறேன் !

பண்ணணும்னுதான் நான் படங்களை செலெக்ட் பண்ணுவேன். பெரிய ஹீரோக்கள்கூடப் பண்ணும்போது வளரலாம். ஆனா, வளர்ச்சி மட்டுமே முக்கியம் இல்லை. திருப்திதான் எனக்கு முக்கியம்.''

''ஹீரோயின்களில் ரொம்ப போல்டா இருக்கீங்க. உங்களுக்கு ரோல் மாடல் யார்?''

''நம்புவீங்களா..? நயன்தாரா. ஆச்சர்யமா இருக்கா? அனுஷ்கா, ஹன்சிகாகூட எனக்கு ரோல் மாடல்ஸ் தான். காரணம், அவங்கள்லாம் கமர் ஷியல் ஹீரோயினா இருந்தாலும், தான் என்ன பண்றோம்கிறதில் தெளிவாஇருக் காங்க. நானும் அப்படி இருக்க ஆசைப் படறேன். அவங்களை மாதிரியான கிளாமர் கேரக்டர்களில் நடிக்க இன்னும் எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. கிடைச்சா, நிச்சயம் நடிப்பேன். ஸ்க்ரிப்ட்டும் எனக்குப் பிடிக்கணும்!''

''சமீபத்தில் பார்த்த படம்... பிடிச்ச ஹீரோயின்?''

''நாகர்கோவில்ல 'சுந்தரபாண்டியன்’ பார்த்தேன். அந்த மாதிரி லோக்கல் தியேட்டர்களில் படம் பார்க்கத்தான் எனக்குப் பிடிக்கும். அப்பதான் ரசிகர்களின் உண்மையான பல்ஸ் என்னன்னு தெரியும். படம் ரொம்ப நல்லா இருந் தது. லட்சுமி மேனன் பிரமாதமா நடிச்சு இருந்தாங்க. அப்புறம்... ஆன்ட்ரியா ஒரு மலையாளப் படத்துல அட்டகாசப் படுத்திட்டாங்க.''  

'' 'மரியான்’ படப்பிடிப்பில் ஒரு காட்சியில் தனுஷ் நிஜமாவே உங்களை உதைச்சுட்டாராமே?''

''நடிக்கும்போது அதெல்லாம் பார்க்கக் கூடாது. 200, 300 பேர் சேர்ந்து ஒரு குடும்பமாக் கஷ்டப்பட்டு படம் பண்ணிட்டு இருப்போம். அத்தனை பேர் உழைப்புக்கு முன்னாடி ஒரு உதை வாங்குறது பெரிய விஷயமா என்ன? ஒரு ஷாட் நல்லா வரணும்னா அதெல்லாம் வாங்கித்தான் ஆகணும். இதைப் பெரிய விஷயமா பேசாதீங்க.''

''இவ்வளவு தெளிவா இருக்கீங்க... டைரக்ஷன் ஆசை?''

''இருக்கு. எதிர்காலத்துல நிச்சயம் படம் இயக்குவேன்!''

அடுத்த கட்டுரைக்கு