Published:Updated:

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

Published:Updated:

ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு,  யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!

 தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!

பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!

நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?

சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!

எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!

சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? நான் நியூட்டனாவோ ஆர்க்கிமிடீஸாவோ ஆக முடியுமா? என்னாது...? முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

- சத்யா சுரேஷ்