உலகத்தில் நடக்கிற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு வைத்திருக் கிறார் சிவகாசியைச் சேர்ந்த ஜோதிடர் ஏ.எஸ்.ஸ்ரீ. அப்படி என்னதான் தீர்வா? மேலே படிங்க!
"நியூமராலஜி என்றதும் எழுத்துக்களை மட்டும் பார்க்கக் கூடாது. அந்த வார்த்தையின் பொருளுக்கும் 'பவர்' இருக்கிறது. 'விஸ்பரூபம்’ படத்துக்கு ஏன் தெரியுமா இவ்வளவு பிரச்னை? விஸ்வரூபத்தைக் கடவுள்தான் எடுக்க முடியும். அதை மனிதன் எடுக்க நினைப்பது அகந்தையல்லவா? ஆங்கிலத்தில்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Vishwaroopam என்று எழுதினால் அதன் கூட்டுத் தொகை 51. இந்த எண் மிகுந்த கண் திருஷ்டியைக் கொடுக்கக் கூடியது. ரஜினியின் பிறந்த தேதி 12 என்பதால், அவரின் அதிர்ஷ்ட எண் 3. மூன்றுக்கு ஆகவே ஆகாத எண் 6. அதனால்தான் கூட்டுத்தொகை 6 என்று வரும்படி, 'பாபா' என்ற படத்தை எடுத்துவிட்டு படாதபாடுபட்டார். ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானுக்கும் பிரச்னை இருக்கிறது. காரணம், kochadaiyaan என்ற பெயரின் கூட்டுத்தொகை 8. இது பல தடங்கல்களையும் சிக்கலையும் கொடுக்கும்.
காவிரி பிரச்னை ஏன் தீரவே மாட்டேங்குது தெரியுமா? தமிழ்நாடு என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது கூட்டுத் தொகை 3. விதி வசத்தால் காவேரி(24), முல்லை பெரியாறு(51), கேரளா, கர்நாடகா ஆகியவற்றின் கூட்டுத் தொகை 6 ஆக இருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னபடி, மூன்றுக்கு ஆகவே ஆகாத எண் 6 என்பதால்தான் இவ்வளவு பிரச்னைகள். அது மட்டும் இல்லாம 'நாடு' என்ற சொல்லுக்குப் பயங்கரமான பவர் இருக்குது. தினமும் பல லட்சம் பேர் தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கிறோம். இதனால், பவர் மேலும் மேலும் அதிகமாகி தமிழ்நாடு தனி நாடாகிவிடும் சூழ்நிலை இருக்கிறது. எனவே, உடனே தமிழ்நாட்டின் பெயரை 'தமிழக ஸ்டேட்(!)' அல்லது 'தமிழகம்' என்று மாற்ற வேண்டும்" என்று பேசிக்கொண்டே போனவரிடம் "சரி சாமி... ஜெயலலிதாவுக்குப் பிரதமர் பதவி கிடைக்குமா?" என்று கேட்டேன்.
"இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வது குருபகவான்தானே ஒழிய, நான் கிடையாது'' என்று சேஃப்ட்டியாகச் சொன்னவர்,

''ஜெயலலிதாவின் பிறந்த தேதிப்படி (24) அவரது அதிர்ஷ்ட எண் 6. ஆனால், அவரோ கூட்டுத்தொகை 7 என்று வரும்படி கூடுதலாக ஒரு 'ஏ' போட்டு Jayalalithaa என்றே எழுதுகிறார். இதனால்தான் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, அவர் தன்னுடைய பெயரைப் பழையபடி எழுத ஆரம்பிக்க வேண்டும். பா.ஜ.க. தொடங்கப்பட்ட தேதிப்படி அதற்கு விருச்சிக ராசி. அந்த ராசிக்குக் கட்டம் சரியில்லாததால் அவர்களால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜெயலலிதாவால் பிரதமராக முடியும். ஆனால், அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் பெயரைத் தமிழகம் என்று மாற்றிவிட வேண்டும். இல்லை என்றால் அவர் தனித் தமிழ்நாட்டின் பிரதமராகத்தான் ஆக முடியும். (இவ்ளோ பெரிய குண்டைத் தூக்கிப் போடறாரே!) கடக ராசிக் காரரான கருணாநிதிக்கு இப்போது சுக்கிர திசை நடக்கிறது. கட்சி தொடங்கிய தேதிப்படி பார்த்தால், தி.மு.க-வுக்கும் இப்போது சுக்கிர திசைதான். ஆனா, குரு வந்து (எந்த குரு... சோ.ராமசாமியா?) ஆட்டையைக் கலைச்சிடுவாரு. அதனால, இனிமேல் அவருக்கு நன்மையும் தீமையும் ஃபிப்ட்டி- ஃபிப்ட்டிதான். மத்தியில் ஆட்சி இருந்தா, மாநிலத்துல போயிடும். மாநிலத்துல அதிகாரம் கிடைச்சா, மத்தியில ஃபியூஸ் போயிடும். ஒரு பிள்ளையால சந்தோஷம் கிடைச்சா, இன்னொரு பிள்ளையால வேதனை வந்து சேரும். ஸ்டாலினுக்கு சிம்ம ராசி பூர நட்சத்திரம். சனி திசை . அதனால, இப்போதைக்கு அவர் பெரிய பதவி எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க.அழகிரிக்கு.... மறுபடியும் சொல்றேன். யாரும் என்னைய அடிக்கக் கூடாது. மு.க.அழகிரியோட பிறந்த தேதிப்படி அவருடைய கூட்டு எண் 18. ஸ்ரீலங்காவுக்கு என்ன கூட்டுத்தொகை வருதோ, அதே எண். அதனால எப்பவும் சண்டை, சச்சரவு என்று குழப்பமான மனநிலையில் இருப்பார். ஆனா, பாதிப்பு இல்லாம போயிடும். டோன்ட் ஒர்ரி" என்றார் ஏ.எஸ்.ஸ்ரீ.
எனக்கென்னவோ ஜோதிடருக்குத்தான் நேரம் சரியில்லை என்று தோன்றுகிறது!
- கே.கே.மகேஷ், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்