Published:Updated:

இது ஒரு தலையாய ஜோக்!

இது ஒரு தலையாய ஜோக்!

இது ஒரு தலையாய ஜோக்!

இது ஒரு தலையாய ஜோக்!

Published:Updated:

அது டெல்லியிலேயே பெரிய சலூன் கடை.

இது ஒரு தலையாய ஜோக்!

ஒரு முறை மத்திய அமைச்சர் கபில்சிபல் முடி வெட்டிக்கொள்வதற்காக அங்கு வந்தார். முடிதிருத்துபவர் புதியவர். அன்றுதான் சேர்ந்திருக்கிறார். அவர் கபில்சிபலுக்கு முடி வெட்டும்போது,"சார், இந்தக் கறுப்புப் பணம், சுவிஸ் பேங்க் விவகாரங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?. அதுல யார் யாரு சம்பந்தப்பட்டு இருக்காங்கனு உங்களுக்குத் தெரியுமா?''னு கேட்டார். அவ்வளவுதான், கபிலுக் குக் கோபம் வந்து கத்திவிட்டார். ''முடி வெட்டுற வேலைய மட்டும் பாரு. எதுக்கு உனக்குத் தேவை யில்லாத கேள்விகள் எல்லாம்?''னு கேக்க, ''ஸாரி சார் சும்மா கேட்டேன். மன்னிச்சுடுங்க"னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில நாள் கழித்து முடி வெட்ட வந்தார் ப.சிதம்பரம். அதேபோல, அவர் "சார். இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?

இது ஒரு தலையாய ஜோக்!

அதுல யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்காங்கனு உங்களுக்குத் தெரியுமா?''னு கேட்க, சிதம்பரம் டென்ஷன் ஆகி "முடி வெட்டுற வேலைய மட்டும் பாரு. எதுக்கு உனக்குத் தேவையில்லாத கேள்விகள்''னு கத்த, ''மன்னிச்சுடுங்க சார்"என்றார் அவர்.

அடுத்த வாரம் மன்மோகன் சிங்கே அந்தக் கடைக்குச் சென்று முடி வெட்ட உட்கார,''சார் நிலக்கரி ஊழலைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்று கேட்டார் அவர். மன்மோகன் டென்ஷ னாகப் பதிலளிக்கிறார் (ஜோக் தானேங்க... இதிலேயாவது வாயைத் திறந்து பேசட்டுமே!) "தேவை யில்லாத

இது ஒரு தலையாய ஜோக்!

கேள்வி இது. உன் வேலையை மட்டும் பார்" என்றார். அடுத்த நாள், சி.பி.ஐ. அந்தக் கடையைச் சூழ்ந்தது. ''சொல்லுங்க, இதுக்கு முன்னால என்ன செஞ்சுட்டு இருந்தீங்க? நீங்க பாபா ராம்தேவ் கூட்டத்தைச் சேர்ந்தவரா?''

அவர் : ''இல்லை.''

சி.பி.ஐ : ''அப்போ அண்ணா ஹசாரே கூட்டத்தைச் சேர்ந்தவரா?''

அவர் : ''இல்லை.''

சி.பி.ஐ : ''அப்புறம் ஏன் நீங்க பிரதமர்கிட்டேயும், மினிஸ்டர்ஸ்கிட்டேயும் ஊழல்கள் பத்தி விசாரிச்சீங்க?''

அவர் : ''அது இல்லீங்க சார். நான் தொழிலுக்குப் புதுசு. முடி வெட்டக் கஷ்டமா இருந்துச்சு. இந்த விஷயங்களைப் பத்திக் கேட்டா அவங்க எல்லோரோட முடியும் நட்டமா நின்னுக்கிடும்னு தெரியும். அதான் சார் அப்பிடிக் கேட்டேன்!''னு சொல்ல, இப்போது நட்டமா நின்னது சி.பி.ஐ-யின் தலைமுடி!

- மோ.கிஷோர் குமார்