##~##

 விகடன் சர்வேல ஃபோர்த் ப்ளேஸ்... எனக்கு செம ஷாக்! இப்போ தமிழ் கைஸ்க்கு ஸ்லிம் ஹீரோயின்தான் பிடிக்குதாம். ஹலோ! தமிழ் கைஸ்.... நோட் திஸ் பாயின்ட்.  இப்போ நான் முன்னாடி மாதிரி பப்ளி இல்லை. செம ஸ்லிம். என் ஸ்லிம் போட்டோஸ் வெச்சுட்டு திரும்ப அந்த சர்வே பண்ணுங்க.அப்போ யார் ட்ரீம் கேர்ள்னு தெரியும்'' - எப்போதும் அதி உற்சாகமாக 'ஹாய்’ சொல்லும் ஹன்சிகா குரலில் அன்று ஏகத்துக்கும் சோகம்.

''  'சின்ன குஷ்பு’னு உங்களைத் தமிழ்நாடே கொண்டாடிட்டு இருந்துச்சே... ஏன் திடீர்னு இவ்ளோ ஸ்லிம் ஆகிட்டீங்க?''

''எந்த பிளானும் இல்லை. ஆனா, இதுக்கு மேல வெயிட் போடக் கூடாதுனு டிசைட் பண்ணேன். 'சேட்டை’ ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப அஞ்சலி என்னைவிட ஸ்லிம்மா இருந்தாங்க. ஆனா, இப்போ நான்தான் அவங்களைவிட ஒல்லி. அவ்ளோ வொர்க்-அவுட் பண்ணேன். அப்புறம் ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குனு ஏழு படங்கள்ல நடிக்கிறேன். பறந்து பறந்து வேலை பார்த்தா உடம்பு ஸ்லிம் ஆகத்தானே செய்யும்.''

''ஹீரோயின்களுக்கு என் மேல் பொறாமை!''

''ஏழு படம்னா... ஏழு ஹீரோக்கள் உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்காங்க. ஓ.கே. அப்போ ஹீரோயின்ஸ் யாரும் ஃப்ரெண்ட்ஸா இல்லையா?''

''ம்ம்ம்... ஹீரோயின்ஸ் யாரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. என்னைப் பார்த்துப் பொறாமைப்படறவங்கதான் அதிகம். ஆனா, அவங்களுக்காகவும் சேர்த்து நான் ப்ரே பண்றேன். காட் ப்ளெஸ் தெம்!''

''சரி... உங்க ஹீரோஸ்பத்திச் சொல்லுங்க... சூர்யா?''

''ரொம்ப டீசன்ட். 'சிங்கம்-2’ ஸ்பாட்ல அவர்கிட்ட, 'ஹாய்... ஹலோ’ தவிர வேற எதுவும் நான் பேசுனதே இல்லை. அவரு ரொம்ப ஷை டைப். அதிகம் பேச மாட்டாரு!''

''சிம்பு?''

''செம ஸ்டைலிஷ் பாய். ரொம்ப மேன்லியா நடந்துக்குவாரு. 'வேட்டை மன்னன்’ படத்துல என்னை நம்பி கேங்ஸ்டர் ரோல் கொடுத்திருக்கார். அவர் நம்பிக்கையைக் காப்பாத்தணும்!''

''ஆர்யா?''

''உலகத்துல எப்ப என்ன நடந்தாலும் செம கூலா ஒரு ஆள் இருந்தார்னா... அது ஆர்யாவாகத்தான் இருக்கும். செம கலாட்டா பார்ட்டி. ஸோ நாட்டி. ஐ லைக் ஹிம். அவர் பக்கத்துல இருந்தா நாம சிரிச்சுட்டே இருக்கலாம்.''

''சித்தார்த்?''

''நிறைய ஹீரோக்கள்கூட நடிச்சிருந்தாலும் என்னமோ தெரியலை, சித்தார்த்கூட நடிச்சப்ப நான் ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணேன். எனக்கு செம மேட்ச் அவர்தான்!''

''தனுஷ்?''

''நான் பார்த்ததுலயே ஒரு ஹீரோ, தான் உண்டு... தன் வேலை உண்டுனு இருக்கார்னா... அது தனுஷ்தான். ஸ்பாட்ல அவர் இருக்கிறதையே கண்டுபிடிக்க முடியாது. அவ்ளோ சைலன்ட் பார்ட்டி.''

''ஹீரோயின்களுக்கு என் மேல் பொறாமை!''

''உதயநிதி?''

''அவர் ஒரு குட் ஸ்டூடன்ட். ஆமா... தெரியாத விஷயங்களை ஆர்வமா கத்துட்டே இருப்பார்.''

'' 'ஜெயம்’ ரவி?''

''ஸ்க்ரீன்ல குறும்புத்தனமா தெரியற இவர்... நேர்ல ரொம்பச் சமர்த்துப் பையன்!''

''அஞ்சு வருஷம் கழிச்சு ஹன்சிகா என்ன பண்ணிட்டு இருப்பாங்க?''

''சினிமால நடிச்சுட்டு இருப்பாங்க. ஏன்னா, அவங்களுக்கு அதைத் தவிர வேற எதுவும் தெரியாது. ரொம்பச் சின்ன வயசுலயே நான் சினிமாவில் நடிக்க வந்துட்டேன். 15 வயசுல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். 16 வயசுலயே பாலிவுட் சினிமா பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, இப்போ என் லட்சியம், ஆசை, கனவுலாம் தமிழ், தெலுங்குல சூப்பர் ஹீரோயினா வரணும்கிறது மட்டும்தான். சும்மா பாலிவுட்ல போய் ஒரு பாட்டு, ரெண்டு ஸீன் நடிச்சுட்டு 'பாலிவுட் போயிட்டேன்’னு பில்டப் கொடுக்க விரும்பலை. அப்படிலாம் நடிக்கச் சொல்லி மும்பைல இருந்து யாரும் வந்து கால்ஷீட் கேட்டா, நான் யோசிக்காம சொல்ற ஒரே வார்த்தை 'கெட்அவுட்’தான். எனக்கு தமிழ் சினிமா மட்டுமே போதும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு