Published:Updated:

ஐ! கதை கிடைச்சுடுச்சு!

ஐ! கதை கிடைச்சுடுச்சு!

ஐ! கதை கிடைச்சுடுச்சு!

ஐ! கதை கிடைச்சுடுச்சு!

Published:Updated:
ஐ! கதை கிடைச்சுடுச்சு!

சிஸ்டென்ட் டைரக்டருக்குக்கூட கதை சொல்லாமல் ரொம்பவும் சீக்ரெட்டாப் படம் எடுத்துக்கிட்டு இருக்கிற ஷங்கரோட 'ஐ' படத்தோட கதையை அப்படி இப்படினு அலைஞ்சி திரிஞ்சி கண்டுபுடிச்சி உங்களுக்காகவே சொல்றோம் கேட்டுக்குங்க!

கதைப்படி ஹீரோ விக்ரமுக்கு இங்கிலீஷ் சுத்தமாப் பேச வராது.  ஆனா, ஹீரோயின் எமி ஜாக்சன், பக்கா லண்டன் இறக்குமதி. விக்ரமுக்கு, லண்டன்ல இருந்து தமிழ்க் கலாசாரத்தைக் கத்துக்க கோயம்பேடு வர்ற எமியைப் பார்த்த உடனே பத்திக்கிச்சு. எமி போற இடமெல்லாம் பின்னாடியே சுத்திட்டு இருக்கார். கோயம்பேடு மார்க்கெட்டுல எமி கலாசாரத்தைக் கத்துக்கிட்டு இருக்கும் நேரத்துல ஏரியா ரௌடி எக்குத்தப்பா எமியைக் கிண்டல் பண்ண, அதைப் பார்த்த விக்ரமுக்கு மூக்கு, காது, நாக்குனு எல்லாம் சிவக்க, ஓரமாக்கிடந்த தக்காளி  மொதக்கொண்டு எல்லாத்தையும் பிழிஞ்சி எடுக்கிறார்.  ஓரமா நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த எமி, ''தேங்க்ஸ்''னு சொல்லிட்டுப் போக, அன்னைக்குத்தான் தேங்க்ஸ்ங்கிறது இங்கிலீஷ் வார்த்தைனு விக்ரமுக்குத் தெரியுது. இங்கிலீஷ் தெரியாததால எமிகிட்ட தன்னோட காதலை எப்படிச் சொல்றதுனு தெரியாமப் புலம்பிட்டு இருக்கிறார் விக்ரம்.

இப்போ கதைல ஒரு ட்விஸ்ட். விக்ரமோட தூரத்துப் பெரியப்பாவான இங்கிலீஷ் வாத்தியார், நம்ம பவர் ஸ்டார், அவர் பொண்ணு கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்க சென்னை வர்றார். பவர்கிட்ட தன்னோட லவ் ஸ்டோரியைச் சொல்லி 'எப்படியாவது சேர்த்துவெச்சிடுங்க பெரியப்பா’னு கெஞ்ச, நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு அவரும் சம்மதிக்கிறார். அன்னைக்கு வெள்ளிக்கிழமை. எமி மாரியம்மன் கோவிலுக்குச் சேலை கட்டிக்கிட்டு தலையில மல்லிகைப்பூ வெச்சிக்கிட்டு வர்றாங்க. (கலாசாரத்தைக் கத்துக்கிட்டாங்களாமாம்!). பவர் எமிகிட்ட தனக்குத் தெரிஞ்ச 'எ ஃபார் ஆப்பிள்’ இங்கிலீஷ்ல ஒரு வழியா மேட்டரைச் சொல்ல, மறு நிமிஷமே பவருக்கு ஒரு பளார் விட்டுட்டு, கீழ விழுந்த பூவைக்கூட எடுக்காம எமி போயிடுறாங்க. இருந்தாலும் விக்ரம் விடுறதா இல்லை, மறுபடியும் துரத்தித் துரத்தி லவ் பண்றார்.

அந்த நாள்... எமி கலாசாரம் கத்து முடிச்சிட்டு லண்டனுக்குக் கிளம்புறது தெரிஞ்சிக்கிட்டு, அடிபட்ட

ஐ! கதை கிடைச்சுடுச்சு!

புலியான பவரைக் கூட்டிகிட்டு ஏர்போர்ட்டுக்குப் போய் வெய்ட் பண்றார் விக்ரம். இப்போ அடுத்த ட்விஸ்ட். பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததால எமி அன்னைக்கு லண்டன் போகலை. மூணு நாள் கழிச்சி அவங்க ஏர்போர்ட் வரும்போது, ரத்தக்காயத்தோட பவரும் விக்ரமும் நிக்கிறாங்க. மூணு நாளா ஏர்போர்ட்ல இருந்தவங்க எல்லோரும் அடிச்சி விரட்டியும் அந்த இடத்தைவிட்டுப் போகாம இருந்தது எமிக்குத் தெரியவருது.  கண் கலங்கிப்போன எமி, 'நான் மறுபடியும் ஆறு மாசம் கழிச்சித் திரும்பி வரேன், நாம அந்த மாரியம்மன் கோயில்ல (அதான், பவருக்குப் பளார் விட்ட அதே கோயில்) மீட் பண்ணுவோம். அதுக்குள்ள நீ நல்லா இங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டா நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு சொல்லிட்டு டாட்டா காமிச்சிட்டுக் கிளம்பிடுறாங்க.

பவர் ஒரு டம்மி பீஸுனு ரொம்ப லேட்டாப் புரிஞ்சிக்கிற விக்ரம், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுக்கிற சந்தானத்துக்கிட்ட ஸ்டூடன்ட்டா ஜாய்ன் பண்றார். சந்தானம் 'அமெரிக்கன் இங்கிலீஷ் சொல்லித்தரவா? பிரிட்டிஷ் இங்லிலீஷ் சொல்லித்தரவா?’னே மூணு மாசம் ஓட்ட, வெறுப்பாகிப்போன அவர் சந்தானத்தை நாலு சாத்து சாத்திட்டு, தானே பலான இங்கிலீஷ் படங்களாப் பார்த்து இங்கிலீஷ் பேசக் கத்துக்கிறார். 24 மணி நேரமும் இங்கிலீஷ் இங்கிலீஷ்னு தீயா வேலை செய்றார். ஆறு மாசம் முடிஞ்சபோது ஒபாமாவையே இன்டர்வியூ எடுக்கிற அளவுக்கு முன்னேறிடுறார்னா பாத்துக்குங்க (ஷங்கர் படம்னா, அப்படித்தான் பாஸ்!).

ஏற்கெனவே சொன்னமாதிரி ஆறு மாசம் கழிச்சி மாரியம்மன் கோயில்ல மீட் பண்றாங்க. முதல்ல தன்னோட காதலை இங்கிலீஷ்ல சொல்ல நினைச்ச விக்ரம் 'ஐ’னு சொல்ல வரும்போது எவனோ உடைச்ச அஞ்சு ரூபாய் தேங்காய் விக்ரமோட பின்மண்டையில அடிக்க, மெடுலா ஆப்லங்கட்டா குழம்ப, கடைசி ஒரு வருஷத்துல நடந்த எதுவுமே அவருக்கு ஞாபகம் இல்லாமப் போயிடுது. விக்ரமுக்கு இன்னைக்குச் சரியாகிடும் நாளைக்குச் சரியாகிடும்னு வைதேகி காத்திருந்தாளை விட அதிகமாகக் காத்திருந்த எமி எரிச்சலாகி, மறுபடியும் லண்டனுக்கே பேக் பண்ணிட்டுப் போய்டுறாங்க. மண்டையில அடிபடுறதுக்கு முன்னாடி சொல்லவந்த 'ஐ’ யை மட்டும் விக்ரம் சொல்லிக்கிட்டே இருக்கார். அப்பதான் 'ஐ’ ன்னு டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிக்கிறோம்.

நோட்: நீங்க நெனைச்ச மாதிரி அது தமிழ் 'ஐ’ இல்லைங்க... இங்கிலீஷ் 'ஐ’!

இந்தக் கதையை நான்தான் சொன்னேன்னு ஷங்கர்கிட்ட யாரும் சொல்லிடாதீங்க... ப்ளீஸ்!

- சு.ராம்குமார்