Published:Updated:

''என் பெட்ரூமில் ரஜினி!''

இரா.வினோத்

''என் பெட்ரூமில் ரஜினி!''

இரா.வினோத்

Published:Updated:
##~##

ஜெனிஃபர் கோத்வால்... பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார். மாடலிங், விளம்பரங்களில் செமத்தியாகக் கல்லா கட்டுகிறார். பெங்களூரு தாஜ் ரெசிடென்ஸியில் ஜெனியோடு இருந்த ஹனி நிமிடங்கள்...

''பயோடேட்டா ப்ளீஸ்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் பிறந்தது, தவழ்ந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை. பதினஞ்சாவது வயசிலேயே மாடலிங் வந்துட்டேன். அப்புறம், இந்தி சீரியலில் நடிச்சேன். ஷாரூக் கானுடன் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரம் சூப்பர் ஹிட். தொடர்ந்து ஏழு விளம்பரங்களில் ஷாரூக்கோடு நடிச்

''என் பெட்ரூமில் ரஜினி!''

சுட்டேன். இருந்தாலும், விளம்பரங்களில் நடிச்சதுக்குப் பதிலா, படத்தில் அவரோடு ஜோடி சேர்ந்திருந்தா... ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். இந்தக் கவலையை ஷாரூக்கிட்டயே சொன்னேன். 'கவலைப்படாதே... கண்டிப்பா சான்ஸ் தர்றேன்’னு சொல்லி இருக்கார்!''

''தமிழுக்கு மட்டும் ஏன் தடா?''

''பாலிவுட்ல நான் மூணு படங்கள்தான் பண்ணினேன். கன்னடத்தில் ஷிவ்ராஜ் குமாரோடு 'ஜோகி’ நடிச்சேன். படம் செம ஹிட். அதனால், பெங்களூர்லயே செட்டில் ஆகிட்டேன். அப்பப்போ தெலுங்குப் பக்கம் போய் வர்றேன். அதனால், தமிழில் தலை காட்ட முடியலை. நீங்க சொன்ன பிறகு, எப்படிச் சும்மா இருக்க முடியும்? தமிழில் நல்ல ஸ்க்ரிப்ட் இருக்கான்னு உடனே விசாரிக்கிறேன்!''

''தெலுங்குப் படத்தில் நடிக்கும்போது உங்களுக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும்...''

''அது பொய்யான கிசுகிசு. தெலுங்கு மீடியாக்கள் சும்மா பத்தவெச்சுட்டாங்க!''

''அப்போ, உங்களோட லவ் கெமிஸ்ட்ரியைச் சொல்லுங்க?''

''அது கெமிஸ்ட்ரி இல்லை. சோகமான ஹிஸ்டரி. காலேஜ் படிக்கும்போது, ஒரு பையன் வந்து லவ் பண்றதா சொன்னான். நான் ஓ.கே சொல்லலாம்னு முடிவெடுத்து, சஸ்பென்ஸா வெச்சிருந்தேன். அடுத்த வாரத்துலயே அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க, குடும்பத்தோடு டெல்லிக்குக் கிளம்பிட்டாங்க. அதோடு காதலும் குளோஸ்.

நான் சின்ன வயசில் இருந்தே ரஜினி சார் ஃபேன். இப்போதும் என் பெட்ரூமில் ரஜினியோட போஸ்டர்கள்தான் இருக்குது.

''என் பெட்ரூமில் ரஜினி!''

'ரோபோ’ பார்த்ததில் இருந்து ரஜினியைத் தீவிரமாக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனந்த விகடன் மூலமா என் காதலை சொல்லட்டுமா? 'ஐ லவ் யூ ஸோ மச் ரஜினி!''

''ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். மும்பை ஹீரோயின்ஸ் ஒண்ணு சேர்ந்தா, எங்க ஊரு ஹீரோக்களைக் கேலி பண்ணிச் சிரிப்பீங்களாமே?''

(வாய்விட்டுச் சிரித்துவிட்டு) ''நோ கமென்ட்ஸ்!''