Published:Updated:

எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...

க.ராஜீவ் காந்தி

எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...

க.ராஜீவ் காந்தி

Published:Updated:
எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...
##~##

ஆக்டிங் கிராமரில் டிஸ்டிங்ஷன் அடிக்கும் நம் ஹீரோயின்கள், ஜெனரல் நாலெட்ஜில் எந்த அளவுக்கு ஸ்கோர் செய்வார்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''காலையில ஸ்கூல், ஈவ்னிங் டியூஷன்னு எக்ஸாமுக்கு சின்ஸியரா படிச்சுட்டு இருக்கேன். சப்ஜெக்ட்ல இருந்து கேட்டா, நான் ஆல் பாஸ்!'' என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார் லட்சுமி மேனன்.

''ஷூட்டிங் பிரேக்ல லைனுக்கு வந்திருக்கேன். 10 மினிட்ஸ் போதுமா?'' - இது ஸ்ருதிஹாசன்.

''ஃப்ளைட் பிடிக்கணும் நான். ஆனா, இன்னும் பிக்கப் கார் வரலை. கார் வர்றதுக்குள்ள கேட்டுக்கோங்க!'' என்றார் ஹன்சிகா.

''இப்பதான் சாதனைப் பெண்மணினு அவார்டு கொடுத்திருக்காங்க. அந்த இமேஜை டேமேஜ் பண்ணிராதீங்க!'' என்று சிரித்தார் த்ரிஷா.

கேள்வி: இந்தியாவில் பிரபலங்கள் பயணிப்பதற்கு என வாங்கப்பட்ட ஹெலிகாப்டர் ஊழலில் சம்பந்தப்பட்ட இத்தாலிய நிறுவனத்தின் பெயர் என்ன?

பதில்: ஃபின் மெக்கானிக்கா.

லட்சுமி மேனன் : (கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று வெடிக்கிறார் ) ''ஏங்க... எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? என் மூடைக் கெடுக்காதீங்க!''

ஸ்ருதி: ''தெரியலையே... நோ ஐடியா!''

ஹன்சிகா: (திடுக்கிடுகிறார்) ''எதுலங்க கரெப்ஷன்? ஹெலிகாப்டரா... ஃப்ளைட்டா? கரெக்டா சொல்லுங்க... நான் இப்போ கூட ஃப்ளைட்டுக்காகத்தான் வெயிட் பண்றேன். அதுல ஒண்ணும் டேஞ்சர் இல்லையே!''

த்ரிஷா: ''ஆஹா... நியூஸ் படிச்ச ஞாபகம் இருக்கே... ஏதோ மெக்கானிக்கான்னு வரும். ப்ச்... மறந்துடுச்சு!''

எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...

கேள்வி: தமிழக அரசு திறந்திருக்கும் மலிவு விலை உணவகங் களில் ஒரு இட்லியின் விலை எவ்வளவு?

பதில்: ஒரு ரூபாய்

லட்சுமி மேனன்: ''நான் இப்ப கேரளால இருக்கேன். அப்படி ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சதே தெரியாது. தமிழ்நாடு வந்ததும் போய் சாப்பிட்டுட்டுச் சொல்றேன்!''

ஸ்ருதி: (கொஞ்சம் சந்தேகக் குரலில் விசாரிக்கிறார்) ''ஏன் இப்படிலாம் கேள்வி கேட்கிறீங்க? உங்க மோட்டிவ் என்ன?''

ஹன்சிகா: ''யூஷ்வலா சென்னைல ஒரு இட்லி ஃபைவ் ரூபீஸ்தானே! சரி... என்கிட்ட ஏன் இந்தக் கொஸ்டீன்? என்னை சின்ன குஷ்புனு சொல்றாங்களே... அதனாலயா?''

த்ரிஷா : ''சீப் பிரைஸ்னா எப்படியும் ரெண்டு, மூணு ரூபா இருக்கும். கஷ்டப்படுறவங்களுக்கு நிச்சயம் யூஸ் ஆகும்!''

கேள்வி: 'அன்பு நெஞ்சன்’ என்று சமீபத்தில் பட்டம் சூட்டப்பட்டு இருக்கும் பிரபல அரசியல்வாதியின் வாரிசு யார்?

பதில்: 'அஞ்சா நெஞ்சன்’ அழகிரியின் மகன் துரை தயாநிதி.

லட்சுமி மேனன் : (குரலில் சின்ன ஜெர்க்குடன்) ''சத்தியமா தமிழ்நாடு பாலிடிக்ஸ் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது!''

ஸ்ருதி : (கொஞ்சம் கோபமான குரலில்) ''நீங்க ஜி.கே. இன்டர்வியூனு சொல்லி ஏமாத்துறீங்க. இதெல்லாமா பப்ளிக் எக்ஸாம்ஸ்ல கேப்பாங்க. இந்தக் கேள்விக்கும் எனக்குப் பதில் தெரியாது!''

ஹன்சிகா: ''அன்பு நெஞ்சனா..? அப்படின்னா? ஓ... லவ் ஹார்ட்டா? ஏதாச்சும் ஹீரோவுக்குத்தானே கொடுத்திருப்பாங்க!''

த்ரிஷா: (கேள்வியைக் கேட்டதும் சுதாரிக்கிறார்) ''விவகாரமான பேட்டியா இருக்கும் போல... பதில் தெரியலை. போதுமா... இதோட முடிச்சுக்கலாமா?''

எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...

கேள்வி: தமிழக சட்டசபையில் விஜயகாந்தின் பொறுப்பு என்ன?

பதில்: எதிர்க் கட்சித் தலைவர்.

லட்சுமி மேனன்: ''விஜயகாந்த் தெரியும். அவர் அசெம்ப்ளில இருக்காரா? அது தெரியாதே!''

ஸ்ருதி: ''சத்தியமா எனக்குத் தெரியலை. இனி, மிஸ்டுகால் பார்த்துட்டு லைனுக்கு வரவே மாட்டேன்!''

ஹன்சிகா: (சட்டென்று குஷியாகிறார்) ''விஜயகாந்த் சார்... தெரியுமே! ஓல்டு ஹீரோ... அவர் ஃபிலிம் பார்த்துருக்கேன். பட், அவர் அரசியல்ல இருக்கார்னு தெரியாதே!''

த்ரிஷா: (பிரகாசமான குரலில்) ''எதிர்க் கட்சித் தலைவர்ங்க. அப்பாடா... ஒரு கேள்விக்கு சரியாப் பதில் சொல்லிட்டேன்ல!''

கேள்வி: '' 'விஸ்வரூபம்’ படத்துக்குத் தாமதமாக சமீபத்தில் தடையை விலக்கிக் கொண்ட நாடு எது?''

பதில்: மலேசியா.

லட்சுமி மேனன்: ''பாகிஸ்தானா? தெரியலையே!''

ஸ்ருதி: ''மலேசியா. அப்பா படம் பத்தி எனக்குத் தெரியாம இருக்குமா?''

ஹன்சிகா: ''வாட்... எந்த நாடு? அவங்க எதுக்குப் பிரச்னை பண்ணாங்க?''

த்ரிஷா: ''ஐ... ஈஸி கொஸ்டீன். மலேசியா. ஐ சப்போர்ட் கமல் சார் ஆல்வேஸ்!''

எக்ஸ்க்யூஸ் மி லேடீஸ்...

''சமீபத்தில் ஆசிட் வீசப்பட்டதால், தமிழகத்தில் பலியான இரு பெண்களின் பெயர் என்ன?''

பதில்: வினோதினி, வித்யா.

(கேள்வியைக் கேட்டதுமே, அனைவரின் குரலிலுமே சட்டென்று சோகம் குடிகொள்கிறது)

லட்சுமி மேனன் : ''வினோதினி... வித்யா. அவங்களைப் பத்தி நினைச்சாலே மனசு சோகம் ஆகிடுது!''

ஸ்ருதி: ''வினோதினி, வித்யா! இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்!''  

ஹன்சிகா: ''வினோதினி அண்ட் வித்யா! ஆசிட் வீசுன ஆட்களைக் கடுமையா பனிஷ் பண்ணணும்!''

த்ரிஷா: ''வினோதினி, வித்யா. செம ஷாக்கிங்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism