Published:Updated:

அப்பவே அப்படின்னா..?

அப்பவே அப்படின்னா..?

பிரீமியம் ஸ்டோரி

• ஒருவேளை இப்போதுள்ள தொழில்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்..?

• திரௌபதிக்காக ஐந்து சிம் கார்டுகள் போடும் செல்போனைக் கண்டுபிடித்திருப்பார்கள்!

• அந்தப்புரம் கணினிமயமாக்கப்பட்டு அரசரே கூட பாஸ்வேர்டு மூலமே நுழைய முடியும் என்பதால், வேறு யாரும் நுழைய முடியாது!

அப்பவே அப்படின்னா..?

• சிலம்பை ஸ்கேன் செய்து பார்த்திருந்தால், உள்ளே இருப்பது மாணிக்கப் பரலா, முத்துப் பரலா என்று அறிந்து கோவலனின் மரணத்தோடு பாண்டிய மன்னனின் மரணத்தையும் தடுத்திருக்கலாம்!

• 56 நாட்டு இளவரசர்களும் நேரில் வராமல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சுயம்வரம் நடந்திருக்கும். செலவும் நேரமும் மிச்சம்! (அடிதடியும்தான்)

• சகுனி பகடைகளைத் தந்திரமாக உருட்டி வெற்றி பெற்றிருக்க முடியாது. கம்ப்யூட்டர் துணையுடன் ராண்டம் ஜெனரேஷன் டெக்னிக் மூலம் நியாயமான முறையில் பந்தயம் நடந்திருககும்!

• இ- கவர்னென்ஸ் மூலம் அரசவையைக் கூட்ட ஆகும் அனாவசியச் செலவை மிச்சப்படுத்தி இருக்கலாம்!

• மாதாந்திரக் கப்பத்தைக் குறுநில மன்னர்கள் போஸ்ட் டேட்டட் செக்குகள் மூலம் மூவேந்தர்களுக்குச் செலுத்தி இருப்பார்கள்!

• புலவர்கள் வீட்டில் இருந்தே  இ-மெயிலில் மன்னரைப் புகழ்ந்து பாடியிருப்பார்கள். அதற்கான மன்னரின் சன்மானம் ஆன்லைனில் அக்கவுன்ட் கிரெடிட் ஆகியிருக்கும்!

• சீதை இருக்கும் அசோகவனத்தை கூகிள் மேப் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்திருப்பார் அனுமார்!

- ரகோத்தமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு