Published:Updated:

லைஃப் ஆஃப் புலி!

உபயம்: தமிழர்கள்க.ராஜீவ் காந்தி

லைஃப் ஆஃப் புலி!

உபயம்: தமிழர்கள்க.ராஜீவ் காந்தி

Published:Updated:
லைஃப் ஆஃப் புலி!
##~##

ணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் நிஜமாக்கி நான்கு ஆஸ்கர் விருதுகளைத் தட்டியிருக்கிறது 'லைஃப் ஆஃப் பை.’ அந்த ஆஸ்கர் விருதுகளில் முக்கியமானது படத்தின் விஷ§வல் எஃபெக்ட்ஸ் பணிகளுக்குக் கிடைத்த விருது. 'அட... ஹாலிவுட் படம்... அமெரிக்காக்காரன் கிராஃபிக்ஸ்ல பிச்சு உதறுவான். இதுல என்ன அதிசயம்?’ என்கிறீர்களா? 'லைஃப் ஆஃப் பை’ படத்தின் விஷ§வல் எஃபெக்ட்ஸுக்கான விருது கௌரவத்தில் தமிழர்கள் ஐவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளில் பாதி, இந்தியாவில் அதுவும் இந்தத் தமிழர்களின் சிந்தனையில் உதித்ததுதான். ரிதம் அண்ட் ஹியூஸ் ஸ்டுடியோவில் பணிபுரியும் பாலாஜி அன்பழகன், முகேஷ்குமார், அமர்நாத் செந்தில் மற்றும் இளம்பரிதி ஆகியோர்தான் அந்தப் பெருமிதப் பெருமைக்கு உரியவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அனிமேஷன் டீம் லீடர் பாலாஜி அன்பழகன், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். ''ரிதம் அண்ட் ஹியூஸ் ஸ்டுடியோவின் ஹைதராபாத் கிளையில் எங்களுக்கு வேலை. 'லைஃப் ஆஃப் பை’ படத்தின் 40 சதவிகித டெக்னிக்கல் வேலைகள் இங்கேதான் நடந்தன.

லைஃப் ஆஃப் புலி!

கதைப்படி ஒரு பையன், ஒரு புலி... கடலில் பயணிப்பதுதான் முழுப் படமும். இந்தக் கதை நாவலாகப் பிரபலம் ஆகியிருந்தாலும், சினிமாவா எடுக்க யாரும் முன்வரலை. டெக்னிக்கலா இது ரொம்ப சவாலான விஷயம்னு ஒதுங்கிட்டாங்க. ஃபாக்ஸ் நிறுவன இயக்குநர் ஆங் லீ யிடம் கேட்ட பிறகு, அவர் அந்த புராஜெக்ட்டை சவாலாக எடுத்துக்கிட்டார். இந்தப் படத்தை செட் போட்டும் எடுக்க முடியாது. கடலிலேயும் படம் பிடிக்க முடியாது. அதனால், செட் பாதி, ஸ்டுடியோ பாதினு ஒரு மாதிரிக் கலவையான செட்டிங்ல ஷூட் பண்ணாங்க. பிரமாண்ட நீச்சல் குளம், அதில் கடல் மாதிரியே அலைகளை உண்டாக்கும் வைப்ரேஷன், அதுக்கு நடுவில் படகை செட் பண்ணியிருப்பாங்க. மேலேயும் கீழேயும் க்ரீன் டின்ட் ஸ்க்ரீன். ஒரு காட்சியில் புலியை இழுத்து மடியில் வெச்சுக்குவான் படத்தின் ஹீரோ பை. புலிக்குப் பதிலா ஒரு பொம்மையைப் பயன்படுத்தி அந்தக் காட்சியைப் படம் பிடிச்சிருப்பாங்க. நாங்க அந்த பொம்மையை முதலில் கச்சிதமா அழிக்கணும். அப்புறம் அந்த இடத்தில் ஒரிஜினல் புலியின் உடல் அசைவுகளைப் பொருத்தணும். அனிமேஷன் டைரக்டரும் விஷ§வல் சூப்பர்வைசரும் படப் பிடிப்பு சமயம் இயக்குநர் கூடவே இருப்பாங்க. அங்கே அவங்களோட வழிகாட்டுதலுக்கு ஏற்ப தான் காட்சிகளைப் படம்பிடிப்பார் இயக்குநர். அப்பதான் அனிமேஷன் டேபிளில் காட்சி களைப் பொருத்தமா மேட்ச் பண்ண முடியும்.  இதுவரை ஃபேன்டஸி, சாகசம், த்ரில்... இப்படி யான படங்களுக்குத்தான் கிராஃபிக்ஸ் பண்ணி யிருப்பாங்க. ஆனா, ஒரு தத்துவார்த்தக் கதைக்கு கிராஃபிக்ஸ் பண்றது ஹாலிவுட்டுக்கே புதுசு. படம் முடிஞ்ச பிறகும் ரசிகர்களிடம் ஓர்உணர்வு பூர்வமான நிறைவு இருக்கும். அதுதான் எங்கள் உழைப்பைத் தாண்டியும் ஆஸ்கர் வெற்றியைச் சாத்தியமாக்கியது!''

லைஃப் ஆஃப் புலி!

மதுரையைச் சேர்ந்த அமர்நாத், பேக்கிரவுண்ட் பிரிப்பரேஷன் அணியின் லீடர். ''படத்தில் மூணு புலிகள் நடிச்சிருக்கு. பிரான்ஸில் இருக்கும் ஒரு ஜூவில் உள்ள அந்தப் புலிகளின் நடவடிக் கைகளை ஃபுட்டேஜ்களா நிறையப் பதிவு பண்ணியிருப்போம். நாங்க கிராஃபிக்ஸ்ல உருவாக்கிய புலிக்கு அந்த நிஜப் புலிகளின் உடல் அசைவுகளைக் கடத்தணும். அதுவும் ரொம்பத் துல்லியமா, ஒரிஜினல் புலினு ரசிகர்களை நம்ப வைக்கிற அளவுக்கு இருக்கணும். பொதுவா, புலியின் கால் நகங்கள் மடங்கித்தான் இருக்கும். ஆனா, அது தாக்குதலுக்குத் தயாராகும்போது நகங்கள் வெளியே வரும். அந்த அளவுக்குக் கச்சிதமா அனிமேஷன் பண்ணணும். எட்டு நொடிக் காட்சிகளின் அனிமேஷன் சேர்க்க,  மூணு மாசம் ஆகும்!'' என்பவர் இதற்கு முன் 'சிவாஜி’ படத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.

லைஃப் ஆஃப் புலி!
லைஃப் ஆஃப் புலி!

படத்தின் சீக்வென்ஸ் சூப்பர்வைசர் முகேஷ்குமார், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருந்தபடி ஆங் லீயுடன் நேரடியாக இணைந்து அனிமேஷன்களை வடிவமைத்திருக்கிறார். ''படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுக்க மொத்தம் 700 பேர் வேலை பார்த்தாங்க. படத்தில் புலிக்கு அந்தப் பையன் பயிற்சி கொடுக்கும் காட்சிகள் முழுக்க என் பொறுப்பு. ஆங் லீ பயங்கர பெர் ஃபெக்ஷனிஸ்ட். ரொம்பக் கறாரா இருப்பார். இந்தியாவின் மிக பிரமாண்ட சினிமாவின் மொத்த செலவும் ஹாலிவுட் படத்தின் வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்கு மட்டுமே செலவாகும்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தின் அனிமேட் டர்களில் முக்கியமான வர் செந்தில். ''ஏதோ இந்தப் படம்தான் இந்தியாவில் உருவான முதல் பிரபல அனிமே ஷன் படம்னு  நினைக் காதீங்க. 'நார்நியா’, 'சூப்பர்மேன்’, 'மம்மி-3’, 'ஹல்க்’ படங்களின் கிராஃபிக்ஸ் வேலைகளும் இங்கே நடந் திருக்கு. இந்த வருஷம் ஆஸ்கரின் விஷ§வல் எஃபெக்ட்ஸுக்குப் போட்டி போட்ட ஐந்து படங்களில் இரண்டு படங்கள் நாங்கள் கிராஃபிக்ஸ் பண்ணதுதான். 'லைஃப் ஆஃப் பை’க்குப் பலமான போட்டியா இருந்த 'ஸ்னோவொய்ட் அண்ட் த ஹன்ட்ஸ் மேன்’ படத்திலும் எங்க வேலைகள் இருக்கு!'' என்று பூரிக்கிறார் செந்தில்.

லைஃப் ஆஃப் புலி!

இறுதியாகப் பேசினார் இளம்பரிதி. ''இந்தத் துறையின் அடுத்த கட்டம் ஹை க்வாலிட்டி ரியலிஸ்டிக் அனிமேஷன். கற்பனைத்திறனின் உச்சத்தை வெளிப்படுத்தக்கூடிய இந்த அனிமேஷன் துறையின் பயிற்சிகளைத் தமிழ் இளைஞர்களுக்குக் கொடுத்தால், ஆஸ்கர் விருதுகள் நம்ம பசங்களுக்குச் சர்வ சாதாரணம். 'எந்திரன்’ படத்துக்கு ஹாலிவுட் ஸ்டுடியோவில் பிரமாதமான கிராஃபிக்ஸ் பண்ணியிருந்தாங்க. ஆனா, அதே தரத்தில் எங்களாலும் கிராஃபிக்ஸ் பண்ண முடியும். ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை செலவும் அதிகம்... தயாரிப்புக் காலமும் அதிகம். 'லைஃப் ஆஃப் பை’ படத்துக்கான போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளே கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் நடந்தது. ஆனா, தமிழ்ல மூணு, நாலு மாசத்துக்குள்ள மொத்தப் படத்தை யும் முடிக்கணும்னு சொல்வாங்க. நம்ம ஆட்களிடம் நிறையத் திறமை இருக்கு. கொஞ்சம் பொறுமையும் இருந்தா, ஹாலிவுட் தரத்தைத் தாண்டியும் படங்கள் பண்ண முடியும்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism