Published:Updated:

வெயிலுக்கும் மழைக்கும் காதல்!

பாரதி தம்பி

##~##
'கொ
ஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’  தலைப்பே கொஞ்சிப் பேசி உள்ளே இழுக்கிறது. ''கதைக்கு ஒரு கம்பங்கொல்லை தேவைப்பட்டுச்சு. தேனி பக்கத்தில் ஒரு விவசாயியின் ஐந்து ஏக்கர் நிலத்தில் கம்பு விதைச்சு, அது மெதுவா துளிர்த்து, பசுமையா பயிராகி, பொன் நிறத்தில் விளைஞ்சி நிற்கும் வரைக்கும் எல்லாத் தையும் உண்மையா எடுத்து இருக்கோம்!''- அனு பவத்தை அனுபவித்துப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஏகாதசி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெயிலுக்கும் மழைக்கும் காதல்!

'ஆத்தா உன் சேலை, அந்த ஆகாயத்தைப் போல’ என்ற இவரது பாடல் த.மு.எ.க.ச. மேடைகளில் பிரபலம். 'ஆடுகளம்’ படத்தின் 'ஒத்தச் சொல்லாலே’ பாடலும் இவர் எழுதியதுதான். '' 'அவள் பெயர் தமிழரசி’யில் ஐந்து பாடல்களும், 'திட்டக்குடி’யில் நான்கு பாடல்களும் எழுதிஇருக் கேன். ஆனால், எழுதியதைவிட, எழு தாம தவிர்த்த பாடல்கள்தான் அதிகம். ஏன்னா, நான் இயக்குநர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்!'' என்கிறார்.

''உசிலம்பட்டி பக்கம் நடுத்தலைப்பட்டி கிராமத்தில் மூணு நாள் கோயில் திருவிழா நடந்துச்சு. ஹீரோ தேஜ், ஹீரோயின் நட்சத்திரா. ரெண்டுபேருமே புதுமுகம் என்பதால் மக்களுக்கு

வெயிலுக்கும் மழைக்கும் காதல்!

அடையாளம் தெரியலை. அப்படியே உண்மையான திருவிழாவை ஷூட் பண்ணி னோம். அந்த கிராம மக்கள் ஒருநாள் திருவிழாவை எங்களுக்காகவே விட்டுத் தந்தாங்க! படத்தில் ஒரு கொடூர வில் லன் கேரக்டரை நானே பண்ணி இருக்கேன். இது முழுக்கவும் கிராமத்துப் படம் இல்லை. பாதிக்குப் பிறகு நகரத்து வாழ்க்கையையும் பதிவு செஞ்சிருக்கேன்!''