Published:Updated:

''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது!''

ம.கா.செந்தில்குமார்

''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது!''

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##
''கி
ண்டர் கார்டன் படிக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். மலையாளத்தில் மம்மூட்டி, லால், ஜெயராம், திலீப்னு எல்லா பெரிய நடிகர் களோடும் நடிச்சிருக்கேன். தமிழில் 'பீமா’ படத்தில் த்ரிஷாவுக்கு தங்கச்சியா நடிச்சேன். அப்போ அந்தப் படத்தோட அசோசியேட் டைரக்டர் பன்னீர்செல்வம், 'நான் படம் பண்ணினா, நீதான் ஹீரோயின்’னு சொல்வார். சும்மா கிண்டலுக்குச் சொல் றாருன்னு நினைச்சேன். ஒருநாள் போன் பண்ணி, 'ரேனிகுண்டா’னு ஒரு படம் பண்றேன். நீதான் ஹீரோயின்’னு சொன்னார். என்னால் நம்பவே முடியலை. இதுதான் நான் ஹீரோயின் ஆன கதை'' - மலையாளம் கலந்த மழலைத் தமிழில் பேசுகிறார் சனுஷா. 15 நாள் நடிப்பு, 15 நாள் படிப்பு என்று பரபரப்பாக இருக்கும் 11-ம் வகுப்பு மாணவியாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது!''

''மலையாள இண்டஸ்ட்ரியில் உங்களை ஹீரோயினா ஏத்துக்கிட்டாங்களா?''

''மலையாளத்தில் இதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமா 30 படங்கள் நடிச்சேன். அங்கே எல்லோருக்கும் நான் இப்போதும் குழந்தை நட்சத்திரம்தான். 'ரேனிகுண்டா’ பாத்துட்டு, 'யேய்... சனுஷாவா இது?’ன்னு ஆச்சர்யப்பட்டாங்க. மம்மூக்கா, லால் சார் எல்லாம் பாராட்டினாங்க. 'நம்மளும் நல்லா நடிக்குறோம்போல’ன்னு சந்தோஷமா இருந்தது.''

''ஷூட்டிங் போறதுக்கு ஸ்கூலில் லீவு தர்றாங்களா?''

''மம்மூக்கா கூட நடிச்ச 'காழ்ச்சா’ படத் துக்கு கேரள அரசின் 'சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருது கிடைச்சது. அதில் இருந்து ஸ்கூலில் எனக்குப் பெரிய மரியாதை.எக்ஸாம் எழுதத் தேவையான அளவுக்கு மட்டும் அட்டென்டன்ஸ் இருந்தாப் போதும்னு சொல்லிட்டாங்க. நடிப்பு மாதிரியே படிப்பும் எனக்கு முக்கியம். அதனால மாசத்துக்கு 15 நாள்தான் கால்ஷீட் தருவேன். 'ரேனிகுண்டா’ பாத்துட்டு, 'அந்தப் பையனை எப்படியாச்சும் நீ காப்பாத்தி இருக்கலாம்’னு எங்க ஸ்கூல் டீச்சர், ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும் வருத்தப்பட்டாங்க. அந்த அளவுக்கு எனக்கு அங்கே ஃபேன்ஸ் உண்டு!''

''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது!''

''அடுத்ததா என்ன படம் பண்றீங்க?''

'' 'எத்தன்’, 'பரிமளா திரையரங்கம்’னு ரெண்டு படங்கள். ரெண்டுமே பப்ளியான கேரக்டர்ஸ். 'எத்தன்’ படத்தில் இன்னும் ஹைலைட். ஹீரோ கடன் வாங்குறதால பாதிக்கப்படுற பொண்ணு நான். படத்தில் விமலுக்கு செம ரகளையான காமெடி கேரக்டர். அவருக்கு இணையா நானும் கலக்கி இருக்கேன். பார்த்தீங்கன்னா... என்னை  உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!''  

''அனுஷ்கா, தமன்னான்னு கிளாமர் ஹீரோயின்கள்தான் இங்கே டாப் லெவலில் இருக்காங்க. குழந்தை முகத்தோடு தமிழில் தாக்குப் பிடிக்க முடியுமா?''

''நீங்க சொல்ற கிளாமர் ஹீரோயின்களால் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா? 'ரேனிகுண்டா’வில் அனுஷ்கா நடிச்சா நல்லா இருந்திருக்குமா? பெரிய படம், சின்ன படம், ஹீரோ யாருன்னு நான்

''என்னால் முடிஞ்சது அனுஷ்காவால் முடியாது!''

பார்ப்பது இல்லை. என்ன கேரக்டர்னு மட்டும்தான் பார்ப்பேன். அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைஞ்சா, நானும் டாப்  ஹீரோயின் ஆகிடுவேன்!''

''உங்க பாய் ஃப்ரெண்ட் பேர் என்ன?''

''அனுப்... உடனே பரபரப்பாயிடாதீங்க. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற என் தம்பி பேர்தான் அனுப். எங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் லீவு விட்டா, நாங்க அடிக்கிற கூத்தைப் பார்த்து, எங்க அம்மாவும் அப்பாவும் தலையில் கைவெச்சு உட்கார்ந்துடுவாங்க. அந்த அளவுக்கு அடிதடி, ரகளை நடக்கும். வாரிசு சினிமாப்படி எனக்கு அடுத்து அவன் ஆக்ஷன் ஹீரோவா வருவான்னு நினைக்கிறேன். ஹிஹிஹிஹி!''