Published:Updated:

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

Published:Updated:

'ஆயிரம்தான் சொல்லு, நம்ம சேகர் மாதிரி வருமா?’ என்று ஆரம்பிப்பார்கள் நம் ஆட்கள். சரி, அதென்ன ஆயிரம்... சொல்லு என்று கேட்டால், 'லொள்ளு சபா’ மனோகர் மாதிரித் திருதிரு என்று முழிப்பார்கள். இப்படி நம் ஆட்கள் சும்மனாச்சுக்கும் அடிச்சு விடற வார்த்தைகளைப் பத்திக் கொஞ்சம் பார்ப்போமா?

ஆனா ஊனா வசந்தம்கிற வார்த்தையை வசந்த் அன் கோவுக்கு அடுத்து நம் ஆட்கள் பாடாய்ப்படுத்துறாய்ங்க. அதென்ன பொன் வசந்தம்? வெள்ளி வசந்தம், பிளாட்டின வசந்தம்லாம் வேற

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருக்கா என்ன? சர்க்கரைப் பந்தல், ஜவ்வாது மேடைன்னு பாட்டுல சொல்றாங்க. சர்க்கரையில பந்தல் போட்டா ஈ மொய்ச்சுராது? ஜவ்வாது மேடையிட்டால் கசகசன்னு இருக்காதா பாஸ்?

நாமதான் இப்படி என்றால் பேசுவதற்கு என்றே பிறப்பெடுத்த அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கழகச் செயல் வீரர்கள் என்கிறார்களே... அவர்களுக்கு கமாண்டோ ட்ரெயினிங்கோ, போர்ப் பயிற்சியோ யாராச்சும் கொடுத்தாங்களா?

தடைக்கற்களைப் படிக்கல்லாக்கு என முழக்கமிடுபவர் வீட்டின் முன் அரை லோடு பாறாங்கற்களை இறக்கிவைத்தால் அதை உருட்டிட்டுப் போய் படிக்கல்லா மாத்திருவாரோ? 'விண்ணை முட்டியது கோஷம்’ என்கிறார்கள். ஐயனோஸ்பியர்- ட்ரோபோஸ்பியர்- ஸ்ட்ராடோஸ்பியர்லாம் தாண்டி மேலே சத்தம் போகும்னு இவிய்ங்களா விஞ்ஞானத்தைக் கையிலெடுத்துப் பொய் சொல்றாய்ங்கதானே?

'கண்டனம்’ என்று சொன்னால் போதாதா? அது என்ன கடுங்கண்டனம்? கடுங்காபி மாதிரி. சூனாவுக்கு சூனாப் போட்டு சூறாவளிச் சுற்றுப் பயணம் என்கிறார்களே... சூறாவளி போல தாறுமாறாய்ப் பறந்து போகிறார்களா என்ன? காரில்தானே போறாய்ங்க. 'இலக்கு நோக்கிய ஏவுகணை எங்கள் தலைவர்’ என்கிறார்கள். அவர் என்ன ஸ்ரீஹரிகோட்டாவிலா வேலை பார்க்கிறார்?

கொஞ்சமாவது லாஜிக்கோட பேசுங்கப்பா!

அவ்வளவு ஏன், தினமும் காலையில் பேப்பரைத் திறந்தால், ஏதோ ஒரு குற்றத்துக்காக போலீஸ் வலை வீசித் தேடுகிறது என்கிறது செய்தி. வலை வீசித் தேட குற்றவாளிகள் என்ன நெய் மீனா, நெத்திலி மீனா? குள்ள நரிபோல தந்திரம் செய்கிறான் என்கிறார்கள். குள்ளநரி தந்திரம் செய்ததை பக்கத்துல இருந்தாய்யா பார்த்தீங்க? கழுதைக்கு கற்பூர வாசனை தெரிஞ்சு என்னதான் ஆகப்போகுது சொல்லுங்க?  

காதலிக்கிறவன் அரசியல்வாதிகளைவிட டேஞ்சர். இன்னும் வார்த்தைகளால் கொல்லுவான். 'ஒரு கொடியில ஒரு பூதான் பூக்கும்’ என்பான். 'இன்னொரு பூ பூத்தா செத்துடுவியா?’னு கேட்கணும் போல இருக்கும். 'என் நெஞ்சுக்குள்ள நீதானடி!’ என்கிறான். ஸ்கேன் செஞ்சா பார்த்தே?

'தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன்’ என்று ஒரு கவிஞர் ஆண்கள் சார்பாகப் பாடுகிறார். டார்ச்சர் தாங்காமல் அந்தப் பெண் கொஞ்சூண்டு கங்கு அள்ளி ஆணின் வாயில் போட்டுத் தின்னச் சொன்னால் தின்பாரா? அப்புறம் ஏன் அப்படி ஒரு கொலவெறிக் கவிதை? வர்ணிக்கிறோம்னு பிறை போன்ற நெற்றி, கிளி போன்ற மூக்கு, முத்து போன்ற பற்கள், மான் போன்ற கண்கள், சங்கு போன்ற கழுத்து, ஆரஞ்சு பழம் போன்ற உதடுகள், ஆப்பிள் போன்ற கன்னங்கள்னு பேய்த்தனமா பேத்தக் கூடாது.

மானோட கண்ணு, அதுக்குக் கீழே கிளியோட மூக்கு இதெல்லாம் சேர்த்து வெச்சு வரைஞ்சு பாருங்க, 'ப்பா... யாருடா இது பேய் மாதிரி’னுதான் கேட்போம். இனிமேலாச்சும் ஒரு வார்த்தையை எழுதுவதற்கு முன் ரெண்டுவாட்டி யோசிச்சுட்டு எழுதுங்கப்பா. இல்லைன்னா இன்னொரு மொக்கைக் கட்டுரை எழுத வேண்டி வரும். சாக்ரத!

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism