Published:Updated:

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

Published:Updated:

னைவியிடம் பொய் சொல்வது ஆயகலைகளில் 65-வது கலை! (ஆயகலைகள் 64தானேனு அறிவாளித்தனமா கேட்கக் கூடாது. இது அதுக்கும் மேல!) அந்த டெக்னிக்குகள் உங்களுக்கே உங்களுக்காய்!

வீட்டுக்கு என்னிக்கும் இல்லாம அன்னிக்கு சீக்கிரமாப் போறீங்க... டி.வி-யில 'சரவணன் மீனாட்சி’ பார்த்துட்டு இருக்குற உங்க மனைவி, ''ஏங்க மீனாட்சி கட்டி இருக்குற மெரூன் கலர் ஷிஃபான் சாரி எங்கிட்ட இருக்கு பாருங்க. செம மேட்ச்ல?’னு கேட்குறாங்க. நீங்க உடனே, 'சூப்பரு’னு பொய் சொல்லக் கத்துக்கணும். 'இல்லையே அது மீனாட்சிக்குத்தான் எடுப்பா இருக்கும்’னு சொன்னா, சீன் ஜிந்தாபாத் தான். 'ஆக்ச்சுவலி மீனாட்சி அப்படி ஒண்ணும் அழகே இல்லை... ஓவர் மேக்-அப். ஒரு பொண்ணு மேக்-அப் இல்லாட்டியும் அழகா இருக்கணும்... உன்னை மாதிரி’னு பிட்டைப் போட்டீங்க... அன்றைய நாள் இனிதே முடிந்து, அடுத்த நாள் இனிதே தொடங்கும்!    

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்னங்க, சின்ன வேலைதான். பத்தே நிமிஷத்துல மேட்சிங் ப்ளவுஸ் எடுத்துட்டுப் போயிடலாமே’னு

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

போறபோக்குல ஒரு ப்ளான் சொன்னாங்கன்னா, கோபத்துல 'நோ’ சொல்லிடாதீங்க. அதோட விளைவு அன்னிக்குப் பின் இரவு வரை தொடர்ந்து உங்களைப் படுத்தி எடுத்துடும். மேட்ச்சிங் ப்ளவுஸ்தானேனு போய் பல்பு வாங்காம இருக்கணும்னா, சிம்பிள் ஐடியா. 'ராமர் கலர் சேலைக்கு நவ்வாப்பழம் கலர் மேட்ச் ஆகாதுல்லப்பா?’னு உங்க சிற்றறிவுக்கு எட்டாத கலர் காம்பினேஷனை எல்லாம் கேட்டு, ஒரு மணி நேரமா ஒரே மாதிரி இருக்கிற கலர்ல வெரைட்டி காட்டி, படுத்தி எடுப்பாங்க. அப்போல்லாம், 'நீ ஏன் கான்ட்ராஸ்ட்டா போடக் கூடாது. இந்த கலர் காம்பினேஷன்ல சினேகா மாதிரி இருப்பே’னு ஏதோ ஒரு கலர்ல சூடம் ஏத்தி சத்தியம் பண்ணாத குறையாகப் பொய் பேசி வாங்கவெச்சுட்டீங்க... வீட்டுக்கு சீக்கிரமா கௌம்பிடலாம். அப்புறம் முக்கியமான மேட்டரு... 'மேட்சிங் பிளவுஸ் கிடைச்சும் லைனிங் அமையலைப்பா’ என அம்மணி அடுத்த ஆபரேஷனை ஆரம்பிக்கிறதுக்குள்ள 'லைட்டாத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு போவோமா?’னு பைக்கைக் கௌப்பிருங்க மக்கா!

ஆபீஸ் விஷயமா டூர் கிளம்பும்போது மனைவி உங்களிடம், 'போற இடத்துல ட்ரிங்ஸ் அடிச்சுடாதீங்க. அப்புறம் எனக்குக் கெட்ட கோவம் வரும்’ என எச்சரிக்கை மணி அடித்தால், ட்ரிங்ஸ் அடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. 'சரக்கா? நானா? தொப்பை போடுதுனு அதை விட்டு மாமாங்கம் ஆச்சு’ எனப் பொய் சொல்லிட்டு நண்பர்களோடு தீர்த்தவாரித் திருவிழாவில் இருக்கிறப்போ போன் வந்தா, எடுத்துப் பேசி மாட்டிக்காதீங்க. உங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆகும் மாத்திரை, நெடில், குறில், நேர்மா, புளிமா அளவெல்லாம் கண்டுபிடிச்சு

பொய் சொன்னாத்தான்யா போஜனம்!

ஸ்ட்ரெய்ட்டாகவே, 'தண்ணி அடிச்சுட்டுப் பேசுறீங்களா?’னு மலையேறிடுவாங்க. அப்போ என்ன பண்ணனும்னு கேட்கிறீங்களா? எந்த இன்டோர்ல உட்காந்து இருந்தாலும் புத்திசாலித்தனமா நீங்க உடனே அவுட்டோருக்கு ஓடி, 'செல்லம் இப்போ டிராஃபிக்ல இருக்கேன். நான் வீட்டுக்குப் போக ஒன் அவர் ஆகும்...’னு சொன்னீங்கனா உங்களுக்கு அடுத்த ரெண்டு மணி நேரம் போனே வராது!

அடுத்த வீட்டுக் கதையை சுவாரஸ்யமாக உங்களிடம் பேசுவாங்க. அதுல ஒரு சுவாரஸ்யமும் இல்லாட்டிக்கூட, 'அட, நல்லா இருக்கே கதை... ம், மேலே சொல்லு’ என 'உம்’ போடக் கத்துக்கிடணும். அப்படி செஞ்சா, உங்களுக்கு ஸ்பெஷல் ரிவார்டு கெடைக்கும். சீரியல் கதையைப் பேசினாலும் சீரியஸான முகபாவனையில், 'இருந்தாலும் துளசி இப்படி அவசரப்பட்ருக்கக் கூடாது’னு போறபோக்குல லீட் எடுத்துக் கொடுத்து சைலன்ட் ஆகிடணும். இப்படி செஞ்சா 'டேஸ்ட்கூட கரெக்ட்டா இருக்கே’னு அவங்க மைண்ட் வாய்ஸ் புளகாங்கிதப்படும்!

சாம்பாரில் பாகற்காய் எல்லாம் போட்டு புதுக் குழம்பை உங்க மனைவி சமைத்துவிட்டு உலகப் போர் நடத்திய டயர்ட்னெஸோடு 'ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்சேன் எப்படி இருக்குனு சொல்லுங்க’ எனக் கேட்டால், உப்பும் சப்பும் இல்லாத அந்தக் குழம்பின் உண்மை நிலையைப் பகன்று உள்ள சோத்துக்கும் பங்கம் பண்ணிடாதீங்க. 'அட, இதே டேஸ்ட்ல காரைக்குடி ரெஸ்ட்டாரென்ட்ல ஒரு நா சாப்பிட்டேன்ப்பா... செமையா இருந்துச்சு... இது என்ன குழம்பு? செம டேஸ்ட்டா இருக்கு’ எனக் குழம்பவிடுங்க! இந்த விஷயத்துல பொய் சொன்ன வாய்க்குத்தான் போஜனம் கிடைக்கும் பாஸ்!

-ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism