Published:Updated:

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

க.ராஜீவ் காந்தி

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

கார்த்திக் ஸ்ரீனிவாசன்... விளம்பரங்களுக்கு பளிச் முகம் கொடுக்கும் ரசனைக் கலைஞன். சின்ன ஸ்டுடியோக்களில் நிகழ்ந்துவந்த போட்டோ ஷூட்களுக்கு லட்சக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கி, அவுட்டோர், வெளிநாட்டுத் தளங்கள்... என்று பிரமாண்ட ஃப்ளாஷ் அடிப்பவர்.  

 ''ஒவ்வொரு முகமும் ஒரு புத்தகம் மாதிரி. ஒவ்வொரு முகத்துக்கும் பிரத்யேக லைட்டிங், ஃப்ரேம் செட் பண்ணினால்தான், அதன் முழு அழகும் வெளிப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குப் பனி மலை மேல் இளையராஜா சாரை கிராண்ட் பியானோ வாசிக்கவெச்சு ஹெலிகாப்டரில் இருந்து க்ளிக் பண்ண ஆசை. ஆனா இமயமலை, ஹெலிகாப்டர் எல்லாம் சாத்தியம் இல்லைனு தெரியும். இருந்தாலும் அதைக் கொஞ்சம் டச் பண்ற மாதிரி யுவன் ஷங்கரை பாண்டிச்சேரி கடலில்வெச்சு எடுத்தேன். பாறையில் கிரேன், கிரேனுக்கு மேல் இன்னொரு கிரேன், கடல் அலை தெறிக்குது. செம ரிஸ்க் எடுத்து யுவனை க்ளிக் பண்ணினேன். இந்த ஷூட் பண்ணப்போ, ஒரு சின்ன லைட் உடைஞ்சிருச்சு. அதோட விலை ஒரு லட்சத்துப் பதினைஞ்சாயிரம். ஆனா, ரிசல்ட் பார்த்தப்ப... அதெல்லாம் மறந்துபோச்சு!

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

ஆண்ட்ரியா நல்ல உயரம், செம ஸ்லிம். லோ ஆங்கிள் ஷாட் வெச்சா, இன்னும் உயரமாத் தெரிவாங்க. ஆனா, நான் எப்பவுமே அவரை மிட் ஷாட்லதான் எடுப்பேன். பொதுவா ஆர்ட்டிஸ்ட்கள் தன்னை வித்தியாசமாக் காட்டுறதைவிட அழகாக் காமிக்கணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனா, ஆண்ட்ரியா எப்பவும் அழகைவிட வித்தியாசத்தைத்தான் விரும்புவாங்க.

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

'கடல்’ ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடி கௌதம் - துளசியை வெச்சு ஷூட் பண்ணேன். கௌதமுக்கு நான் வெச்சது எல்லாமே டாப் ஷாட்ஸ். ஸ்ட்ரெய்ட் போஸே இருக்காது. துளசி கொஞ்சம் பப்ளி. அதனால் அவங்க முடியை ஓப்பன் பண்ணி தோள்ல புரளவிட்டோம். இப்ப கழுத்து, கை ரெண்டும் ஃபோகஸ் ஆகாது. ஸ்லிம் லுக் வந்துரும்.

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”
"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

காஜல் என் ஷூட்டுக்கு வந்திருந்தப்ப செமத்தியா வெய்ட் குறைஞ்சிருந்தாங்க. லென்ஸ் எப்பவும் அவங்க முகத்தை ஃபோகஸ் பண்ற மாதிரியே வெச்சு ஷூட் பண்ணேன். ஷூட்டுக்கு நடுவில் என்கிட்ட வந்து, 'உங்க கேமரா ஆங்கிள்ஸ் எல்லாமே சூப்பர்’னு சொன்னாங்க. பொதுவா

"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்!”

லேப்டாப் ஸ்க்ரீன்ல போட்டோ பார்த்த பிறகுதான் ஒரு படத்தைப் பத்தி ஆர்ட்டிஸ்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். ஆனா, கேமரா ஆங்கிள் பார்த்தே ரிசல்ட் கணிக்கிற அளவுக்கு காஜல் செம ஷார்ப்.

'3’ பட புரமோஷனுக்காக தனுஷ் - ஸ்ருதியை வெச்சு ஷூட் பண்ணேன். அந்த செஷன்ல ஒரு இடத்தில்கூட அவங்க ரெண்டு பேர்கிட்டயும், 'இதைப் பண்ணுங்க... அதைப் பண்ணுங்க’னு நான்  சொல்லவே இல்லை. அவங்களே டக் டக்னு அடுத்தடுத்து போஸ் பண்ணிட்டே இருந்தாங்க. நான் சும்மா க்ளிக் பண்ணிட்டே இருந்தேன். க்ளிக் பண்ண 300 போட்டோக்கள்ல, 250 படங்கள் அட்டகாசமா வந்திருந்தது. தனுஷ§க்கும் ஸ்ருதிக்கும் செம கெமிஸ்ட்ரி!''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism