Published:Updated:

'நாயா நானா?'

நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...

'நாயா நானா?'

நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...

Published:Updated:

நாய், யானை, குரங்கு, பாம்பு, பல்லிகளை சினிமாவில் நடிக்கவைக்கும் அளவுக்கு ராம.நாராயணனுக்கு விலங்குநேயம் இருந்தது. ஆனால், நாய் நடித்த படத்தை நாய்க்குப் போட்டுக் காட்டும் அள வுக்கு அவருக்கு விலங்கு நேயம் இல்லை. ஆனால், ராம.நாராயணனின் விலங்கு நேயத்தையும் தாண்டி இருக்கிறார்கள் நியுயார்க்கில்.

நியுயார்க்கைச் சேர்ந்த பி.டி.வி. என்னும் மீடியா நிறுவனம் நாய்களுக்கான 'டாக் டி.வி’ என்ற பிரத்யேகத் தொலைக்காட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதான் ஏற்கெனவே 'அனிமல் பிளானெட்’, 'டிஸ்கவரி சேனல்’னு நிறைய இருக்குங்கிறீங்களா? அவை விலங்குகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கான தொலைக்காட்சிகள். ஆனால் இது முழுக்க முழுக்க நாய்கள் பார்த்து ரசிப்பதற்கானது. 'மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கும் பொழுதுபோக்குகள் தேவை. அவற்றுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது, இதனால்தான் நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த நாய்கூட ஒரு நாள் டென்ஷனில் நம்மை லபக் என்று கடித்துவிடுகிறது என்கின்றனர் வல்லுனர்கள். 'ஆகா இதற்கு என்னதான் தீர்வு’ என்று யோசித்த பி.டி.வி. நிறுவனம். நாய்களின் தனிமையைப் போக்க இந்த சேனலைத் தொடங்கியுள்ளது.

'நாயா நானா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மேலை நாடுகளில் நாயும் வீட்டின் உறுப்பினர்தான். நாய்களை வீட்டுப் பாதுகாப்பிற்காகவும் செல்லப் பிராணியாகவும் வளர்க்கும் அதன் உரிமையாளர்கள், வேலைக்குச் செல்லும்போது, அவற்றைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல வேண்டியுள்ளது. அதனால், அவை மனதளவில் தனிமையால் பாதிக்கப்படுகின்றன. எனவே பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்கினோம். நாய்களின் பார்வைத் திறன், நிறம் அறியும் தன்மை, ஒலியை உள்வாங்கும் அறிவு எல்லாம் மனதில்கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்கிறது பி.டி.வி. 'இந்த சேனலை டியூன் செய்தவுடன் மனிதர்களாகிய நமக்கு இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் விநோதமாக இருக்கலாம். ஆனால், முதல் முறை இந்தத் தொலைக்காட்சியை டியூன் செய்யும் நாய் உரிமையாளர்கள் சில மணி நேரம் உங்கள் நாயின் அருகில் அமர்ந்து இதை உங்கள் செல்ல நாய்க்குப் பார்க்கப் பழக்க வேண்டும். காரணம் உங்கள் நாய்க்கு இது ஒரு புது உலகமாக இருக்கும், அவை வாழ்வில் ஏதோ விநோதத்தைக் கண்டதுபோல் துள்ளிக் குதிக் கும். பிறகு உங்கள் நாய் ’டாக் டி.வி’யைப் பார்க்கப் பழகிய பின் நீங்கள் தைரிய மாக வீட்டில் அவற்றை விட்டுவிட்டு அலுவலகமோ ஷாப்பிங்கோ செல்லலாம். உங்கள் நாய் வீட்டில் உள்ள எந்தப் பொருளையும் உருட்டி விடாது. நீங்கள் ஆசையாக வாங்கிய மெத்தையைக் கிழிக்காது’ என்கிறார்கள்.

ஆரம்பக் கட்டமாகச் சில மாகாணங்களில் மட்டும் ஒளிபரப்பாகும் இந்தத் தொலைக்காட்சி விரைவில் சாட்டிலைட் சேனலாக உலகம் முழுதும் உருவெடுக்குமாம். இப்போதைக்கு 'டாக் டி.வி.’ இணையதளம் மூலமாக ஒளிபரப்பாகிறது. இதற்கான கட்டணம் ஒரு மாதத்திற்க்கு அதிகபட்சம் 10 டாலர்.

தமிழ்நாட்டில் வந்தால் 'தமிழகத்தின் 'வள்’ளக் குரலுக்கான தேடல்’ நிகழ்ச்சியை ஆரம்பித்துவிடுவார்கள்!

- சத்யா சுரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism