Published:Updated:

ஐடியா மணி... ஆங்!

ஐடியா மணி... ஆங்!

ஐடியா மணி... ஆங்!

ஐடியா மணி... ஆங்!

Published:Updated:

'ஆனி போய் ஆடி வந்தா டாப்பா வருவோம்’ என்று விஜயகாந்த் நினைக்க, அவருக்கோ ஆப்பாதான் வருது. இன்னும், இன்னும் அவரை இம்ப்ரூவ் பண்ண ஏதோ எங்களால் முடிந்த சில யோசனைகள்...

ஐடியா மணி... ஆங்!

கட்சியில சேர வர்றவங்ககிட்ட வேற கட்சிக்கு மாற மாட்டேன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் வாங்கிக்குங்க. மீறி மாறுனா... என் பையன் நடிக்கிற படத்தைத் தயாரிக்கணும்கிற மாதிரி பாண்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்குங்க. அப்புறம், ஒரு பையன் ஓடுவானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐடியா மணி... ஆங்!
ஐடியா மணி... ஆங்!

நீங்க உங்க கட்சி எம்.எல்.ஏ.கிட்டயே அடி வாங்கின வீடியோவை கேப்டன் டி.வி-யில அடிக்கடிப் போட்டுக்காட்டி, 'தலைவரையே அடிக்கிற அளவுக்கு சுதந்திரம் உள்ள ஒரே கட்சி’னு பப்ளிக்குட்டியைக் கிளப்புங்க!

ஐடியா மணி... ஆங்!

அதுக்காக ஆளாளுக்கு, கையை மடக்கி, எச்சி துப்பி உங்க தலையில அடிக்கத் தயார் ஆயிட்டாங்கன்னா, 'இனிமே தெய்வத்தோடும் ஜிம் பாய்ஸோடும்தான் கூட்டணி’னு அறிவிச்சிடுங்க. அதே மாதிரி வேலி தாண்டும் வெள்ளாடுகளுக்காக, 'இனிமே தெய்வத்தோடும் மந்திரவாதியோடும்தான் கூட்டணி. பாதியில கட்சியைவிட்டுப் போறவங்க ரத்தம் கக்கிச் சாவாங்க’னு பயமுறுத்துங்க!

ஐடியா மணி... ஆங்!

கட்சிக்கு 'அகில இந்திய தேசிய முற்போக்கு திராவிட கழகம்’னு பெயரை மாத்திட்டு, டெல்லியிலும் ஒருகை பாத்துடலாம் கேப்டன். 'ஏணியைக் கூரையை நோக்கிப் போடாதீங்க. வானத்தை நோக்கிப் போடுங்க’னு தயாளன் சாரே சொல்லி இருக்கார்... ஆங்!

ஐடியா மணி... ஆங்!

டெய்லி மறக்காம, இன்றைய நிலவரப்படி கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்கனு அட்டென்டெண்ஸ் எடுங்க!  

ஐடியா மணி... ஆங்!

இனிமே பத்திரிக்கைகாரங்க உங்களுக்குச் சம்பளம் கொடுக்க வந்தா, வாங்கி எண்ணிப் பார்த்துட்டு, 'தீபாவளி போனஸ் உங்க தாத்தாவா கொடுப்பாங்க?’னு கறாரா கவுன்ட்டர் அட்டாக் பண்ணுங்க. நடுவுல வழக்கம்போல 'நாயே... பேயே... எலேய்’ எல்லாம் போட்டுக்கணும்!

ஐடியா மணி... ஆங்!

'முதல்வரைச் சந்திக்க சபாநாயகரிடம் மனு அளிச்சு ரொம்ப நாளாப் பதில் வரலை... அதனால,  சீக்கிரம் அப்பாயின்மென்ட் கொடுக்கலைன்னா, எங்க பாஸ் வெயிட்டிங் சார்ஜ் போடுவாரு’னு யாராவது மிச்சம்  இருக்கிற எம்.எல்.ஏ-க்களை வெச்சு அறிக்கைவிட்டு ஆளுங்கட்சிக்கு பிரஷர் கொடுங்க!

ஐடியா மணி... ஆங்!

'கேப்டன்னா கப்பல்லதான போகணும்..? ஏன் ஃப்ளைட்ல போறீங்க?’னு கேனத்தனமா கேள்வி கேட்டு ஏர்போர்ட்ல உங்களைக் கடுப்பேத்தணும்னே பேட்டி எடுக்க வருவாங்க. அப்போ '2016-ல நான்தான்டா முதல்வர்... அப்போ வந்து கேளு இந்தக் கேள்வியை'னு சொல்லுங்க, உடனே நிருபர்கள் தரையில விழுந்து புரண்டு சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க... நீங்க தொந்தரவு இல்லாம போர்டிங் பாஸ் போடப் போயிடலாம்!

- சுகுமார் சுவாமிநாதன்,

சு.ராம்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism