Published:Updated:

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

க.ராஜீவ் காந்தி

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

"சும்மா பேசினாலே ஏதாவது வில்லங்கமாப் பேசிடுவேன். இதுல ஜாலி பேட்டி வேறயா? அவதூறு வழக்கு பாயாமப் பார்த்துக்குங்க...'' - தயாரானார் கருணாஸ்.

''திண்டுக்கல், அம்பாசமுத்திரம், இப்ப ரகளபுரம்... பேரரசுக்குப் போட்டியா ஊர் பேரா டைட்டில் பிடிக்கிறீங்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதல் ரெண்டும் தற்செயலா நடந்ததுண்ணே. ஆனா, ரகளபுரம் அப்படி இல்லை. ஊர் பேர் சென்டிமென்ட் ஆயிடுச்சேனு திண்டுக்கல் பக்கத்துல இருக்கற ஊர் பேரையெல்லாம் தேடித் தேடித் தேர்ந்தெடுத்ததுண்ணே. உண்மையிலயே அப்படி ஒரு ஊரு இருக்குது. படம் முழுக்க ரகளையா சிரிச்சு ஜமாய்க்கிற மாதிரி இருக்கும். அதான் இந்தப் பேரு!''

''அப்படி என்ன ரகளை பண்ணியிருக்கீங்க?''

''ஒரு பயந்தாங்கொள்ளி போலீஸ் ஆகறான். ஒரு கட்டத்துல சீக்கிரமே சாகப்போறோம்னு தெரிஞ்சதும் டூட்டில இருக்கும்போதே செத்தா குடும்பத்துக்குப் பணம் வருமேனு நினைக்கிறான். அதனால ரிஸ்க் எடுக்குறான். ஆனா, அவன் நினைச்சதுக்கு ஆப்போசிட்டா எல்லாம் நடக்குது. விஜயகாந்த், அர்ஜுன்லாம் போலீஸா நடிச்ச படங்களைக் காமெடியாப் பார்த்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு ஆக்ஷன் பேஸ்டு காமெடி கலந்த குடும்பக் காவியம்.''

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

''அப்ப, இனிமே நீங்க ஒன்லி ஹீரோதானா?''

''பொழப்புல உலை வெச்சுடாதீங்க. 2005-லயே ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரெண்டு லட்சம் வாங்குனேன் நான். ஆனா, ஒரு கட்டத்துல யோசிச்சுப்பார்த்தா, 100 படம் வந்தா, 10 படம்தான் ஹிட் ஆகுது. மிச்சம் 90 படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுல நிக்குறாங்க. சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு, படம் எப்படிப் போனா நமக்கென்னன்னு நினைக்க முடியலை. அதான் நாமளே குதிரையா இருந்து பார்க்கலாம்னு முடிவுபண்ணி ஹீரோவா நடிக்கிறேன். அதுக்காக குதிரைச் சவாரி செய்ய எனக்கு ஆசை இல்லை. பாரம் சுமக்கத்தான் ஆசை!''

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

''இது ஜாலி பேட்டி... இங்கே ஏன் இவ்ளோ ஃபீலிங்ஸ்?''

''அட... ஸாரிண்ணே! லொடுக்கு பாண்டி உணர்ச்சிவசப்பட்டுட்டான். இனி அடக்கி வாசிப்பான்!''  

''அது என்ன, சிவப்பான ஹீரோயின்கள் என் கூட நடிக்க மறுக்குறாங்கன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க ஏன் கறுப்பான ஹீரோயின்கள் கூட நடிக்க மறுக்குறீங்க?''

''அண்ணனுக்கு விவரம் பத்தலை. இப்ப இருக்கற ஹீரோயின்கள் பாதிப் பேரு கறுப்புதாண்ணே. நீங்க இன்னும் பலரை மேக்அப் இல்லாமப் பார்த்தது இல்லை. அதுவும் போக, ஏற்கெனவே நாம கறுப்பு. ஹீரோயினும் கறுப்புன்னா பிளாக் அண்ட் வொயிட் படமாத்தான் இருக்கும். என்னைத் தேடி வர்ற ரசிகர்களுக்கு அவ்ளோ பெரிய கஷ்டத்தைக் கொடுக்க நான் விரும்பலை.''

''காமெடியன்... வில்லன்... ஹீரோ... அடுத்து அரசியல்தானா? உங்க சென்னை விஜயத்தின் நோக்கம் இதானே?''

''அப்படிலாம் எதுவுமே இல்லைண்ணே. ஊர்ல இருந்து வரும்போது ஏதாவது டீக்கடை, ஹோட்டல்ல வேலைக்குச் சேரலாம்னுதான் வந்தேன். ஏன்னா, அங்கே மட்டும்தானே தங்கறதுக்கு இடமும் கொடுத்து மூணு வேளை நல்ல சோறும் போடுவாங்க. வந்தாரை வாழவைக்கும் ஹோட்டல்களை நம்பித்தான் சென்னைக்கு வந்தேன். அப்புறம் நானே ஹோட்டல் ஆரம்பிச்சதுலாம் வேற கதை. நான் வேலை பார்த்த ஹோட்டல்கள் எல்லாம் எனக்கு நல்லா சோறு போட்டுச்சு. ஆனா, நான் நடத்துன ஹோட்டல் மட்டும்தான் எனக்குச் சோறு போடாம விட்டுருச்சு.''

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

''கருணாநிதி ஏன் கருணாஸ் ஆனாரு?''

''எல்லாம் நிதிப் பற்றாக்குறைதான்!''

'' 'சூப்பர் ஸ்டாருக்கு நான்தான் போட்டி’னு பவர்ஸ்டார் சொல்லிட்டு இருக்காரே?''

''அண்ணே... பவர் வழி நேர்வழி கிடையாது. பவரைக் கண்டுபிடிச்ச எடிசனுக்கே இந்தப் பட்டத்தை யாரும் கொடுக்கலை. ரஜினிக்குலாம் போட்டினு யாரும் கிடையாது. ஆனா இனி, பவர் ஸ்டாருக்குப் போட்டியா ஏகப்பட்ட பேர் கிளம்புவாங்க. இதோ இப்பவே ஒருத்தர் ஜரூரா ரெடி ஆகிட்டார் பாருங்க. அவர் நம்ம 'நீ வருவாய் என’ ராஜகுமாரன். 'எனக்கு ஏதாவது பட்டம் கொடுங் க’னு அவரே பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறாரு. மூக்கு வரைக்கும் லிப்ஸ்டிக் போட்டு போஸ் கொடுக்குறதைப் பார்த்தா, இவரு டிரிபிள் பவர் ஸ்டார் ஆகிடுவாரு போலருக்கு. இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க, ஊரு உலகத்துல யாருமே இல்லையா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism