Published:Updated:

"டாப் ஸ்டார் ஹீரோயின் ஆகணும்!”

க. நாகப்பன்

"டாப் ஸ்டார் ஹீரோயின் ஆகணும்!”

க. நாகப்பன்

Published:Updated:

" 'கோ' படத்துக்குப் பிறகு ஜீவா நடிச்சு ஆறு படங்கள் ரிலீஸ் ஆகிருச்சு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’னு என்கிட்ட கேள்வி கேக்காதவங்களே இல்லை. இப்போ நான் நடிச்ச மலையாள 'மகரமஞ்சு’ படத்தைப் பார்த்துட்டு, 'ஏன் கார்த்திகா இவ்ளோ க்ளோஸா நடிக்கிறே?’னு கேட்கிறாங்க. நடிக்கலைன்னாலும்  தப்பு, நடிச்சாலும் தப்பா?'' - கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டார். ஆனால், கார்த்திகாவின் இதழ்களும் இமைகளும் அத்தனை இனிமையாகப் படபடத்தன.

'' 'மகரமஞ்சு’ ஆர்ட் ஃபிலிம்னு நீங்க சொல்றீங்க... ஆனா, தமிழ்நாட்டில் அந்தப் படத்தை வேற மாதிரி ரிசீவ் பண்ணுவாங்களே?''

'' அது 'கோ’ படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே நான் கமிட்டான படம். சந்தோஷ் சிவன் சார் கேட்டு நடிக்க முடியாதுன்னு சொல்ல முடியுமா? அந்தப் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்துட்டுதான் கே.வி.ஆனந்த் சார் 'கோ’ படத்தில் நடிக்க என்னை செலெக்ட் பண்ணினார். அதுக்கு அப்புறம்தான் நான் ராதா பொண்ணுன்னே அவருக்குத் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சதே இல்லை. டென்த் சம்மர் லீவில் சும்மா வெகேஷன் வந்த மாதிரி நடிக்க வந்துட்டேன். ஆனா, இப்போ என் கேரியர் சினிமாதான்னு தீர்மானமா இருக்கேன். அம்மா, பெரியம்மாவை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவில் திறமை காட்டணும், தாய் மொழி மலையாளத்தில் ஸ்டார் ஆகணும். கன்னடத்தில் ஒரு ரவுண்டு வரணும். முதன்முதலில் என்னை ஹீரோயினா ஏத்துக்கிட்ட தெலுங்கில் இன்னும் நிறைய ஹிட்ஸ் கொடுக்கணும். எனக்கு ஆறு மொழிகள் தெரியும். எனக்குத் தெரிந்த மொழிகளில் நடிக்கும் சினிமா ஃபீல்டில் நான் டாப் ஸ்டாரா இருக்கணும். அதுக்கு 'மகரமஞ்சு’ மாதிரியான படங்களும் என் புரொஃபைல்ல இருக்கணும்!''

"டாப் ஸ்டார் ஹீரோயின் ஆகணும்!”

''சினிமா ஹீரோயின்கள் யாரும் ஃப்ரெண்டா இருக்காங்களா?''

'' 'தம்மு’ தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடிச்சதால், த்ரிஷா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். ஹன்சிகாவும் நானும் ஸ்கூல்மேட். அவளை நான் 'ஹனி’னுதான் கூப்பிடுவேன். குழந்தையா இருக்கும்போதே ஹீரோயினா நடிக்க வந்துட்டா ஹனி. காஜல், பிந்து மாதவி, லட்சுமி மஞ்சுனு நிறையப் பேர் நல்ல ஃப்ரெண்ட்ஸ். சாட்டிங், மீட்டிங்னு அடிக்கடி நடக்கும். எல்லாருக்கும் அவங்கவங்க ஸ்பேஸ் என்னன்னு தெரியும். அதனால், எங்களுக்குள் எந்தப் போட்டி, பொறாமையும் கிடையாது!''  

''இந்த மெச்சூரிட்டி தவிர, சினிமா வேற என்ன கத்துக்கொடுத்திருக்கு?''

''வாரிசு நடிகையை முதல் படத்திலேயே அவங்க அம்மாகூட ஒப்பிடுறாங்க. 200 படங்கள்ல நடிச்ச அம்மாவை 10 படங்கள்கூட நடிக்காத மகளோட கம்பேர் பண்றது சரியா? ஆனா, இப்போ வேற ஜெனரேஷன். அம்மா 200 படங்களில் நடிச்சு வாங்கின பேர், புகழை 10 படங்களில் நல்லா நடிச்சா, வாங்கிடலாம். அந்த அளவுக்கு இப்போ ரீச் அதிகம். அதே சமயம் சொதப்பினால், சட்டுனு மறந்தும்போயிடுவாங்க. என் ஸ்டேட்டஸ் என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும்!''

''துளசி உங்களுக்குப் போட்டியா?''

''ஏன் அக்கா தங்கச்சிக்குள்ளே வம்பு வளர்க்கிறீங்க? துளசி என் தங்கச்சி இல்லை... என் குழந்தை மாதிரி. 'கடல்’ல அவ்வளவு அப்பாவியா நடிச்ச துளசியைப் பார்த்து எனக்கு சந்தோஷப்படக்கூடத் தோணலை... உடனே அழுதுட்டேன். ஆனா, 'கடல்’ படம் சரியா ரீச் ஆகாதது கொஞ்சம் வருத்தம்தான். அடுத்த சான்ஸ்ல துளசி நிச்சயம் செமத்தியா ஸ்கோர் பண்ணுவா!''

''வீட்ல அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் நடிக்க வந்தாச்சு. அடுத்து யார்?''

''தம்பி ஒருத்தன் இருக்கான். விக்னேஷ். ப்ளஸ் டூ முடிச்சிருக்கான். அவனுக்கும் நடிக்கணும்னு ஆசை. சீக்கிரம் நடிக்க வந்தாலும் வருவான். நல்ல உயரமா, மேன்லியா இருப்பான். நிச்சயம் நீங்க அவனைப் பார்த்தா, சினிமாவுக்கு வெல்கம் சொல்வீங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism