Published:Updated:

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

க.நாகப்பன்

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

க.நாகப்பன்

Published:Updated:
##~##

"மாணவன், தீவிரவாதி, டாக்டர்னு ஏழு வித்தியாசமான நபர்கள் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடி வர்றாங்க. இதுதான் படத்தின் ஒன் லைன். இளைஞர்களை நிமிர்ந்து உக்காரவைக்கிற அளவுக்குச் சுவாரஸ்யமா இருக்கா?''- படீரெனச் சிரிக்கிறார் இயக்குநர் யுரேகா. மேலும் தொடர்ந்தார்...

''அந்த மாணவனின் ஐ.டி. கார்டு பார்த்துட்டு 'படிக்குற வயசுல இங்கே வந்திருக்கியே’னு அடிக்கிறா நம்ம ஹீரோயின். 'உனக்கென்ன..? வேணும்கிற காசை நான் கொடுக்கிறேன். சொல்றதை மட்டும் செய்’னு அவன் பதில் சொல்ல... சண்டை வலுக்குது. 'உன் அப்பா, அம்மா ஏன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

நண்பர்கள்கூடச் சொல்ல முடியாத சில விஷயங்களை நான் சொல்ல முடியும். புரிஞ்சுக்கோ’னு பேசிப்பேசி அவன் மனநிலையில் மாற்றம் கொண்டுவர்றா இவ. இது நிஜமா ஒரு பாலியல் தொழிலாளிக்கு நடந்த அனுபவம். இப்படித்தான் படத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் உயிரோட்டம் விதைச்சிருக்கோம்!''- கம்பீரமாகப் பேசுகிறார் இயக்குநர் யுரேகா. பாலிவுட் இயக்குநர்கள் மகேஷ் பட், ராம்கோபால் வர்மாவிடம் சினிமா கற்றவர். இப்போது தமிழில் 'சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். பாலியல் தொழிலாளிகளின் பகிரப்படாத உணர்ச்சிகளைக் கண்ணியமாகக் காட்சியாக்கும் முனைப்புடன் இருந்தவரிடம் பேசினேன்...

''இந்த சப்ஜெக்ட்டுக்கு ஏகப்பட்ட ஹோம்வொர்க் செய்திருக்கணுமே?''

''பின்னே... சும்மாவா? ரெண்டு வருஷம் டெல்லி, மும்பை, கொல்கத்தானு சுத்திச் சுத்தி சீன் தேத்தினோம். அங்கெல்லாம் பாலியல் தொழில்  அனுமதியுடன் நடக்குது. ஆனா, சென்னையில் ரெட்லைட் ஏரியா இல்லை. அதுக்காக பாலியல் தொழில் இங்கே நடக்கலைனு சொல்ல முடியுமா? சென்னையில் மட்டும் 60,000 பாலியல் தொழிலாளர்கள் இருக்காங்க. இந்தியாவில் சராசரியா ஒரு நாளைக்கு 500 இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுறாங்க. பல கணவர்கள் தங்கள் மனைவியை 5,000-த்துக்கும் 10,000-த்துக்கும் வித்துட்டுப் போறாங்க. மிகவும் வறுமையில் வாடும் புறநகர்ப் பெண்கள் கும்பலா சென்னைக்கு வந்து பகல்ல பாலியல் தொழிலில் ஈடுபடுறாங்க. சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது யாருக்காவது போதுமான பணம் கிடைக்கலைன்னா, மத்தவங்க சம்பாத்தியத்தில் இருந்து பங்கு பிரிச்சுக்கிறாங்க. இப்படியொரு படத்தின் சவாலான கேரக்டரில் நடிக்கப் பல நடிகைகள் தயங்கியபோது, சான்ட்ரா எமி தைரியமா நடிச்சிருக்காங்க!''

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

''பாலியல் தொழிலாளிகளின் அடையாளமாகச் சித்திரிக்கப்படும் பிம்பங்கள் உண்மையா?''

''வெற்றிலை குதப்பியபடி, தொப்புள் தெரிய புடைவை கட்டிக்கிட்டு, வீதியில் நடந்துபோகும்போதே ஆண்களை அழைக்கும் பாலியல் தொழிலாளிகளை சினிமாவில் மட்டும்

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

தான் பார்க்க முடியும். நிஜத்துல மற்ற சராசரிப் பெண்களைப் போலத்தான் பாலியல் தொழிலாளிகளும் நடமாடுறாங்க. கணவன், குழந்தைகளோட சினிமாவுக்குப் போறாங்க. மார்க்கெட்ல காய்கறிகளைப் பேரம் பேசி வாங்குறாங்க. பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய அநாகரிக பிம்பங்களை உடைச்சு உள்ளதைச் சொல்லும் முயற்சிதான் எங்க படம். அந்தத் தொழிலில் ஈடுபட்டுஇருக்கும் பெண்கள் யாரும் அந்தத் தொழிலை இஷ்டப்பட்டோ, வசதியான வாழ்க்கைக்காகவோ செய்யலை. அப்படி நாம நெனச்சுக்கிட்டா அது பெரிய முட்டாள்தனம்.  தன் உடம்பை மூலதனமாவெச்சு ஒரு பெண் ஒரு நாள் 1,000 ரூபாய் சம்பாதிச்சா, அவங்க கையில மிஞ்சுறது 200 ரூபாய்கூட இருக்காது. அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற, அவர்களுக்கான சமூக அங்கீகாரமும் பாதுகாப்பும் அவசியம்!''

''பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் அளிப்பது தற்போதைய சமூக அமைப்பில் ஆரோக்கியமான பலன் அளிக்குமா?''

''பாலியல் தொழிலை முறைப்படுத்தாத பட்சத்தில்தான் நெகட்டிவ் விளைவுகள் உண்டாகும். ஊருக்கு நடுவில் கழிப்பறை கட்டினால்தானே வீதியோரங்கள் சுகாதாரமா இருக்கும். காமம்கூட உடல் உபாதைதான். அரசாங்கமே டாஸ்மாக் நடத்தும் சமூக அமைப்பில் அங்கீகாரம் பெற்ற சிவப்பு விளக்குப் பகுதிகள் நிச்சயம் தப்பே இல்லை. டாஸ்மாக் செயல்படுறதால இப்போ கள்ளச்

"சிவப்பு விளக்குக்கு வேண்டும் க்ரீன் சிக்னல்!”

சாராயச் சாவுகள் தமிழ்நாட்டில் கிட்டத் தட்ட இல்லை. அதே மாதிரி பாலியல் தொழிலை அங்கீகரிச்சு, சில நடைமுறை விதிகளை ஒழுங்குபடுத்தினா, நிச்சயம் அந்தத் தொழிலும் கட்டுக்குள் இருக்கும். இதுல உளவியல்ரீதியான ஒரு புரிதலும் இருக்கு.

பாலியல் தொழிலாளியிடம் வந்துபோகும் அத்தனை ஆண்களும் உடல் தேவைக்காக மட்டுமே வந்துபோறது இல்லை. ஒவ்வொரு பாலியல் தொழிலாளியும் தன் வாடிக்கையாளரின் உளவியல்ரீதியான காயங்கள், வேதனைகளுக்கு ஒரு வடிகாலா இருக்காங்க. இந்த அழுத்தமான உண்மையைப் புரிஞ்சுக்க விசாலமான மனசும் அறிவார்ந்த புரிதலும் வேண்டும். அது இருக்கா நம்மகிட்ட?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism