Published:Updated:

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

மின்மினிகளின் மீட்டிங்க.ராஜீவ்காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

மின்மினிகளின் மீட்டிங்க.ராஜீவ்காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

சேட்டை படத்தில்கூட ஒரே ஃப்ரேமில் வராத அஞ்சலி - ஹன்சிகாவைப் படத்துக்கான புரொமோஷன் சமயம் சந்திக்கவைத்தோம். ஹோம்லி மல்லி, கிளாமர் கில்லி எனத் தமிழ் சினிமாவைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களின் 'சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த’ சந்திப்பு இது!  

''ஹாய் அஞ்சலி... உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிருந்தேன். அது எப்படி எல்லா ஹீரோயின்களுக்கும் உன்னைப் புடிக்குது. த்ரிஷால இருந்து சமந்தா வரை 'ஐ லைக் அஞ்சலி’, 'ஐ லவ் அஞ்சலி’னு உருகுறாங்களே?’ - செம பாசிட்டிவ்வாகச் சந்திப்பைத் தொடங்கிவைத்தார் ஹன்சிகா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னை ஹீரோயின்களுக்குத்தானே பிடிக்குது. ஆனா, உன்னை எல்லா ஹீரோக்களுக்கும் பிடிக்குதே! ஒரே நேரத்துல அஞ்சாறு படங்கள்ல நடிக்கிற. விஜய், சூர்யா, சிம்புனு எல்லா ஹீரோக்கள்கூடவும் நடிக்கிற. உன் கிராஃப் செமத்தியா இருக்கே!'' என்று அஞ்சலி சொல்ல... ஹன்சிகா முகம் வெட்கத்தால் இன்னும் சிவந்தது.

''சும்மா இருப்பா... இன்னும் ரஜினி, கமல், அஜித் கூடலாம் நடிக்கணும். நான் இத்தனை படங்கள்ல நடிச்சும் என்ன பிரயோஜனம்? தமிழ்நாட்டுல நீ எங்கே போனாலும் மணிமேகலை, கனி, ஆனந்தினு சொல்லிக் கொண்டாடுறாங்க. என்னை அப்படிலாம் யாரும் செல்லமா கூப்பிட்டதே இல்லை. அஞ்சலி... இன்னொரு விஷயம் உன்கிட்ட கேக்கணும் நினைச்சேன்... 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ மாதிரி படங்கள்லயும் நடிக்கிற. திடீர்னு 'சேட்டை’ மாதிரி படத்துலயும் நடிக்கிற. எப்படி இது?''

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

''அஞ்சலின்னா இப்படித்தான் நடிப்பானு இமேஜ் வந்துரக் கூடாது. அதனாலதான் அப்பப்போ 'சேட்டை’ பண்றேன். அதுவும்போக 'சேட்டை’ படம் இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு ஹிட் படத்தை மிஸ் பண்ண மனசு இல்லை. முன்னாடி இப்படிலாம் பிடிவாதம் பிடிச்சு நிறையப் படங்களை மிஸ் பண்ணியிருக்கேன். அதான் உடனே ஓ.கே. சொல்லிட்டேன். சரி... உனக்கும் சிம்புவுக்கும் கிஸ்கிஸ்னு கிசுகிசுக்கிறாங்களே... என்ன விஷயம் மேடம்?'' என்று கண்ணடித்தார் அஞ்சலி.

''சிம்புகிட்ட லவ் சொல்லியிருக்கேன். ஆனா, கேமரா முன்னாடி மட்டும்தான். சிம்புவுக்கும் எனக்கும் ஸ்க்ரீன்ல நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. அதான் ஒரே நேரத்துல ரெண்டு படத்துல அவர்கூட சேர்ந்து நடிக்கிறேன். மத்தபடி நத்திங் ஸ்பெஷல். இப்படித்தான் சித்தார்த்தை என்கூட கனெக்ட் பண்ணிப் பேசுனாங்க. இப்ப அவருக்குக் கல்யாணம் ஆகப்போகுது. அடுத்து, சிம்புவுக்கும் கல்யாணமானா எனக்குச் சந்தோஷம்!''

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

''அட... ஆமால்ல! சித்தார்த் உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்தானே. சமந்தா - சித்தார்த் லவ் எக்ஸ்க்ளூசிவ் என்ன?''

''ஹேய்... பப்ளிக்... பப்ளிக்! அப்புறம் சொல்றேன்!''

''சரி... அப்போ உன் சம்பளம் எவ்வளவுனு இப்போ சொல்லு... ஒரு கோடியைத் தாண்டிட்டனு சொல்றாங்க?'' என்று அஞ்சலி குறும்பாகக் கேட்க, அதிர்ச்சியில் புருவம் உயர்ந்தது ஹன்சிகாவுக்கு.

''ஹேய்... ஹேய்... அப்படிலாம் யாரு சொல்றா? அதெல்லாம் இல்லை. இந்தக் கேள்விலாம் பேட்டில ஸ்கிப் பண்ணிடுங்க. எனக்கு ஜஸ்ட் 21 வயசுதான் ஆகுது. இன்னும் நிறையப் படங்கள் நடிக்கணும். ப்ளீஸ்... ப்ளீஸ்... எதுவும் ப்ளேமிங்கா எழுதிடாதீங்க!''- ஹன்சிகா நம்மிடம் கெஞ்சுவதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார் அஞ்சலி.

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

''கூல்... கூல்... ஹன்சிகா. சீனியர் ரேக்கிங்னு நினைச்சுக்க!''

'ஹப்பா’ என்று பெருமூச்சுவிட்டு ரிலாக்ஸான ஹன்சிகா,

அஞ்சலியை மாட்டவைப்பது போன்ற கேள்விக்கு யோசித்து, உள்ளுக்குள் பல்ப் எரியவும் பிரகாச மாகிறார்.

''ஆங்... அஞ்சலி... படத்துல லிப் டு லிப் கிஸ் சீன்ல எப்படி நடிச்ச? இட்ஸ் அமேசிங்!'' என்று ஹன்சிகா கண்சிமிட்டிக் கேட்கவும் இப்போது

அஞ்சலி முகத்தில் அப்பிக்கொண்டது வெட்கம்.

''அந்த சீன் வேண்டவே வேண்டாம்னு நான் சொல்லிட்டே இருந்தேன். ஆனா, அது படத்துல எவ்வளவு முக்கியம்னு டைரக்டர் கண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிப் புரியவெச்சார். அதான் ஓ.கே. சொன்னேன். ஆனா, அந்த ஸீன் ஷூட் பண்ணப்ப ரொம்ப பதற்றமா இருந்துச்சு. ஏதோ முதல் நாள், முதல் சீன் நடிக்கிற மாதிரி இருந்தது. கடைசி நிமிஷம் வரைக்கும் அந்த சீன் வேண்டாம்னு சொல்லிட்டே இருந்தேன். 'டைரக்டர்கிட்ட சொல்லேன்’னு ஆர்யாகிட்ட சொல்லி அனுப்பினேன். அவனும் 'ஓ.கே. பேபி... ஓ.கே. பேபி’னு சொல்லிட்டுப் போனான். ஆனா,

"நீ தமிழ்நாட்டின் செல்லம்!” “நீ ஹீரோக்களுக்குச் செல்லம்!”

டைரக்டர்கிட்ட போய், 'இந்த சீன் உங்களுக்குத் திருப்தியா இல்லைன்னா, எத்தனை டேக் வேணும் னாலும் எடுத்துக்கலாம்னு அஞ்சலி சொல்லச் சொன்னாங்க’னு சொல்லிட்டு வந்துருக்கான். ஸ்வீட் ராஸ்கல். அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சேன். சரி ஹன்சிகா... உன்னை சின்ன குஷ்புனு சொல்றாங்களே... அடுத்து என்ன பாலிடிக்ஸா?''

''அந்த வம்பே வேண்டாம். இப்படி எல்லாரும் கேட்குறாங்கன்னுதான் ஸ்ட்ரிக்ட்டா டயட்ல இருந்து வெயிட் குறைச்சுட்டேன். ஆமா, நடுவுல என்ன சொன்ன..? ஆர்யா உன்னை பேபின்னா கூப்பிடுவான்?''  

''ஆமா... 'பேபி... பேபி’ன்னுதான் கூப்பிடுவான். செம ஜாலி கேரக்டர். ஏன் கேக்குற?''

உர்ரென்று முறைக்கும் ஹன்சிகா, ''என்னையும் அவன் பேபின்னுதான் கூப்பிடுவான். அவனை... இரு... இரு..!'' என்றபடி தன் மொபைலில் இருந்து ஆர்யாவுக்கு அழைக்க, அஞ்சலி நம்மைப் பார்த்துக் கல்மிஷமாகச் சிரிக்கிறார்.

ஐயோ பாவம் ஆர்யா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism