Published:Updated:

லாலல்லா தேவதைகள்!

க.நாகப்பன், படங்கள்: உசேன், சொ.பாலசுப்ரமணியன்

லாலல்லா தேவதைகள்!

க.நாகப்பன், படங்கள்: உசேன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

அடுத்த அனுஷ்கா, சமந்தா ஆகவிருக்கும் லட்சியத்துடன் கோடம்பாக்கத்தில் சிறகு விரித்திருக்கும் சில தேவதைகளின் மினி பயோடேட்டா இங்கே...

லாலல்லா தேவதைகள்!

ஸ்கர் விருது பெற்ற 'லைஃப் ஆஃப் பை’யில் அழகு அபிநயங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஷ்ரவந்தி... சென்னைப் பொண்ணு. ப்ளஸ் டூ ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் சின்னக் கண்ணு.  

செல்லப் பெயர்: ஷ்ரவந்தி 70. ரைமிங்கா இருக்குனு ஃப்ரெண்ட்ஸ் இப்படித்தான் கூப்பிடுவாங்க.

பிறந்த நாள்: 1.11.1995.  

பிடிச்சது: பரதம்.

பிடிக்காதது: முகத்துக்கு நேராப் பேசாம, முதுகுக்குப் பின்னாடி பேசுறது.

சென்டிமென்ட்: ஐஸ்வர்யா ராய் பிறந்த நவம்பர்1-தான் நானும் பிறந்தேன். அவங்களை மாதிரியே வேர்ல்டு ஃபேமஸ் ஆகணும்!

கேரக்டர்: தெரிஞ்சவங்ககிட்ட நிறையப் பேசுவேன். தெரியாதவங்ககிட்ட அளவாப் பேசுவேன்!

இனிய எதிரி: என் ஃப்ரெண்ட் காவ்யா. அடிக்கடி சண்டை போட்டாலும் உடனே ராசி ஆகிருவோம்.  

ஃபேவரைட் டிரெஸ்: சல்வார்.

பயம்: ஆ... கரப்பான்பூச்சி!

மொபைல் ஸ்க்ரீன் சேவர்: என் போட்டோதான்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டடித்த 'விக்கி டோனர்’ பட ஹீரோயின் யாமி கௌதம், பஞ்சாப் பேரழகி. 'கௌரவம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.

செல்லப் பெயர்: யாமினி.

பிறந்த நாள்: 28.11.88.  

சமீப சர்ப்ரைஸ்: 'கௌரவம்’ படத்தின் சட்டம் படிக்கும் வக்கீல் கேரக்டர். ரீல்லயும் ரியல்லயும் ஒரே கேரக்டர்!

சென்டிமென்ட்: செய்யும் தொழிலே தெய்வம்!

லாலல்லா தேவதைகள்!

ரோல் மாடல்: நான் மத்தவங்களுக்கு ரோல் மாடலா இருக்கணும்னு ஆசைப்படறேன்!

பிடிச்சது: மணிரத்னம், கௌதம் மேனன், சந்தோஷ் சிவன், ஷங்கர் சினிமாக்கள்!  

ஃபேவரைட் கடவுள்: அன்பு காட்டும் ஒவ்வொருவரும் கடவுள்தான். அப்படிப் பார்த்தா, நான் கடவுள்!

கேரக்டர்: நல்லது, கெட்டது தெரியும். ஸ்ட்ராங்கா இருப்பேன். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி சமயோசிதமா செயல்படுவேன். எதையும் ஒழுங்கா செய்து முடிக் கணும்.

முதல் சம்பளம்: ஸாரி... தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு. அதனால் பப்ளிக்ல சம்பளம் சொல்லக் கூடாது!  

பிடித்த ஐந்து விஷயங்கள்: நான் எது பண்ணாலும் அது சரியாத்தான் இருக்கும்னு நம்புற அப்பா.
நான் வளர்க்கும் தோட்டத்துச் செடிகள்...
டான்ஸ்...
அன்பு காட்டும் மனிதர்கள்...
என் தன்னம்பிக்கை!

ங்களூரில் பிறந்த சஞ்சிதா ஷெட்டி 'சூது கவ்வும்’ படத்தின் டெர்ரர் கேங் லீடருக்கு ஜோடி. படிச்சது பி.காம். பிடிச்சது சினிமா!

செல்லப் பெயர்: சஞ்சு, சாஞ், சஞ்சி!

பிறந்த நாள்: 7 ஏப்ரல் 1989.

கேரக்டர்: ஏதாவது வாலுத்தனம் பண்ணிட்டே இருப்பேன்!  

மொபைல் ரிங்டோன்: எப்பவும் சைலன்ட் மோட்தான். அட்லீஸ்ட் அதாவது அமைதியா இருக்கட்டுமே!  

பயம்: இருட்டில் மட்டும் பேய் பயம்!

ப்ளஸ்: என் மைனஸ் என்னன்னு தெரிஞ்சிருக்கிறது. மைனஸ் என்னன்னு கேட்கிறீங்களா, ஹை... அஸ்கு புஸ்கு!    

ஃபேவரைட் டிரெஸ்: ஜீன்ஸ், டி-ஷர்ட். சிம்பிள் பொண்ணுப்பா!

முதல் முத்தம்: ஐயோ... ஆள விடுங்க!

லாலல்லா தேவதைகள்!

'வல்லினம்’ நாயகி மிருதுளா இரண்டாம் ஆண்டு
லா படிக்கும் லாலல்லா!  

செல்லப் பெயர்: வீட்ல அம்மு. வெளியே மிருது.

பிறந்த நாள்: 6.12.1992.  

சென்டிமென்ட்: சின்னதா ஒரு நடராஜர் சிலை எப்பவும் வெச்சிருப்பேன்.

ட்ரீம் பாய்: 20 வயசுதானே ஆகுது. அப்புறம் யோசிக்கலாம்!

ரோல் மாடல்: அப்போ ஸ்ரீதேவி... இப்போ காஜல் அகர்வால். பட், இப்போ எனக்குப் போட்டியும் காஜல்தான்!

லாலல்லா தேவதைகள்!

கெட்ட பழக்கம்: ரொம்பக் கோபம் வரும்!

ஃபேவரைட் டிரெஸ்: புடைவை. யோசிச்சிருக்கவே மாட்டீங்கள்ல!  

பொழுதுபோக்கு: பெயின்டிங் வரைவேன். நானே ஒரு பெயின்டிங்தானே!

முதல் சம்பளம்: 500 ரூபாய். டான்ஸ் பெர்ஃபார் மன்ஸுக்காக வாங்கினது... இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு.

பிடிச்ச கேரக்டர்: 'பருத்திவீரன்’ முத்தழகு. ஒரு படத்துலயாவது நானும் அப்படி நடிக்கணும்!

'உதயம் என்.எச்.4’-ல் சித்தார்த்துடன் டூயட் பாடும் அஷ்ரிதா ஷெட்டி, மும்பைப் பொண்ணு.

செல்லப் பெயர்: அஷ்ரித்

பிறந்த நாள்: ஜூலை 16. வருஷம் மட்டும் சொல்ல மாட்டேனே!

பிடிச்சது: டான்ஸ்... டான்ஸ்... டான்ஸ்!

கேரக்டர்: ஷாப்பிங்... சாட்டிங்... ஈட்டிங்!

ரோல் மாடல்: அப்போ சிம்ரன்... இப்போ அனுஷ்கா.

ஃபேவரைட் ஹீரோ: சான்ஸே இல்ல... தனுஷ்!

லாலல்லா தேவதைகள்!

உடனடி லட்சியம்: சீக்கிரம் தமிழ்ல பேசக் கத்துக்கணும்!  

ப்ளஸ்: எதையும் சீக்கிரம் கத்துப்பேன்!

மைனஸ்: எதைப் பத்தியும் சீக்கிரமா முடிவெடுக்க மாட்டேன்!

ஃபேவரைட் கடவுள்: அனுமன்.

முதல் சம்பளம்: ரெண்டு லட்சம்... ஒரு மாசத்துக்கு இல்லை.   வருஷத்துக்கு!