Published:Updated:

''ஆமா... நான் அமைதியாயிட்டேன்!''

இயக்குநர் சேரன்க.நாகப்பன்

##~##

ல வருடங்களுக்குப் பிறகு 'இயக்குநர்’ சேரனைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு! 

''ஹாஹாஹா... ஆமாங்க! 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ இதுதான் இப்போ நான் இயக்கும் படத்தின் டைட்டில். இயக்குநர் சேரனின் சிறப்பான படைப்பா இருக்கும். நடிகர் சேரனுக்கு இந்தப் படத்தில் எந்த வேலையும் இல்லை!''- அதிர அதிரச் சிரிக்கிறார் சேரன்.

'' 'பொக்கிஷம்’ பட இயக்கத்துக்குப் பிறகு, நான்கு வருட இடைவெளி ஏன்?''  

''நான் நடிக்கப் போயிருந்தேன். 'யுத்தம் செய்’, 'முரண்’, 'சென்னையில் ஒரு நாள்’, 'மூன்று பேர் மூன்று காதல்’ படங்களில் நடிச்சேன். அந்த நாலு படங்களில் நடிச்சதால், 'மாயக்கண்ணாடி’, 'பொக்கிஷம்’ படங்கள் உண்டாக்கிய கடனை அடைச்சேன். இப்போ எனக்குள் மறுபடியும் அந்த இயக்குநர் வந்து உக்காந்துட்டான். 'பாண்டவர் பூமி’க்கு அப்புறம் இயக்குநர் சேரனா மட்டும் என்னை இந்தப் படத்தில் பார்க்கலாம். 'பாரதி கண்ணம்மா’ படம் பண்ணும்போது இருந்த அதே வெறி, வேகம், துடிப்போட வர்றேன். 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ நிச்சயம் உங்களை ஈர்க்கும்!''

''ஆமா... நான் அமைதியாயிட்டேன்!''

''முழுக்கவே நட்பு சம்பந்தப்பட்ட கதையா?''

''நட்பும் அதைத் தாண்டி பல விஷயங்களும் இருக்கும். 'ஆட்டோகிராஃப்’ பார்த்ததும், 'அட... நம்ம லைஃப் மாதிரி இருக்கே’னு எப்படி நினச்சுப் பார்த்தோமோ, 'தவமாய் தவமிருந்து’ பார்த்தப்போ, 'என் அப்பா ஞாபகம் வந்துட்டாருங்க’னு எப்படிச் சொல்லிக்கிட்டோமோ, அதே மாதிரி இந்த ஜே.கே-வைப் பார்த்ததும், 'இதுதான் நான். இந்த இடத்துலதான் நான் இருக்கேன்’னு ஒவ்வொருத்தரும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்குவாங்க. அது போக, படத்துல சின்ன ஆச்சர்யமும் வெச்சிருக்கேன். சர்வானந்த், நித்யா மேனன் ரெண்டு பேரும் இப்போதைய தலைமுறையைப் படத்தில் பிரதிபலிப்பாங்க. 'பாரதி கண்ணம்மா’ பட காமெடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதே மாதிரி இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி இருக்கும். முழுக்கவேபொழுது போக்குப் படமா இருக்கும். தியேட்ட ரில் ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுவீங்க!''  

'' 'பொற்காலம்’, 'பாண்டவர் பூமி’, 'தவமாய் தவமிருந்து’னு படங்கள் பண்ணிட்டு, இப்போ பொழுதுபோக்குப் படம் பக்கம் வந்துட்டீங்களே?''

''ஆமா... நான் அமைதியாயிட்டேன்!''

''இப்போ எல்லாருக்கும் அதுதானே பிடிக்குது! அதீதக் கருத்து சொல்ற, உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சிகள் இருக்கும் படங்கள் என்ன தான் பாராட்டைக் குவிச்சாலும் ரசிகர்கள் ஏத்துக்கத் தயாரா இல்லை. 'பொற்காலம்’, 'பாரதி கண்ணம்மா’, 'பாண்டவர் பூமி’, 'தவமாய் தவமிருந்து’ படங்களை இப்போ பண்ண முடியாது. படத்தோட அவுட்லுக்கே வித்தியாசமா இருக்கணும். பார்வையாளர்களைப் பரவசப்படுத்தணும். அதான் இசைக்கு ஜி.வி.பிரகாஷ்... பாடல்களுக்கு முத்துக்குமார், யுகபாரதி, கார்க்கினு புது டீமோட கை கோத்திருக்கேன். இந்தக் கதை ஜாலியான கதைதான். அதே சமயம் ரசிகனின் மனசுக்குள்ள, 'நாம ஏன் இப்படி இருக்கக் கூடாது’னு யோசிக்கவைக்கும்!''

''முன்னாடி எந்தப் பிரச்னைக்கும் முந்திக்கிட்டு வந்து கருத்து சொல்வீங்க. இப்போ சைலன்ட் ஆகிட்டீங்களே... ஏன்?''

சிரிக்கிறார்... ''நான் பதுங்கிப் பாயுற புலி இல்லை. சொல்லப்போனா, பதுங்கிப் பாயப்போறதும் இல்லை.

''ஆமா... நான் அமைதியாயிட்டேன்!''

என் வேலை எதுவோ, அதை மட்டும் பண்றேன். முன்னாடி படம் ஜெயிச்சதும் கூட்டம் கூடும். அப்போ நாம என்ன பேசினாலும் சரின்னு நினைக்கிற மனநிலையில் இருந்திருக்கேன். அதனால் என் பேச்சு சரியாகவே இருந்தாலும்கூட முந்திக்கிட்டுப் பேசிடுவேன். அப்படிப் பேசினதால் என்னாச்சுன்னு யோசிச்சா, காயங்கள்தான் மிச்சம்! 'எதைப் பத்தியும் பேச நீ யாரு?’னு என்னை நானே கேட்டுக் கிட்டேன். நாம பேசினதைவெச்சு சமூகத்துல மாற்றங்கள் நடக்கலை. அப்புறம் எதுக்குப் பேசிட்டே இருக்கணும்னு தோணுச்சு. நம்ம கருத்துக்கள் உண்மையா பிரதிபலிக்க வேண்டிய மீடியா சினிமா. அதன் மூலம் மட்டும் நல்ல விஷயங்கள் பண்ணுவோம்னு முடிவெடுத்து அமைதியாயிட்டேன். அரசியல் செய்யணும்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. அப்படி எதிர்பார்ப்பு இருந்திருந்தா, நிச்சயம் மேடைகளைக் கைப்பற்றி இருக்கலாம். அது இல்லை என் வேலை!''

''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''

''நண்பர்கள் 100 பேர் சேர்ந்துட்டா, ஒரு படம் பண்ணலாம். தனியா படம் பண்ணும்போது ஒரு கோடி நஷ்டம்னா ஒருத்தருக்கே பெரிய இழப்பு. 100 பேர் சேர்ந்தா, பெரிய இழப்பு வராது. 'காதலில் சொதப்புவது எப்படி?’, 'அட்டகத்தி’, 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்கள்லாம் மிரட்டி எடுத்துருச்சு. இந்தப் புது இளைஞர்களை நான் சினிமாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்கிறேன். சினிமா மேல் இப்போ இருக்கும் பிம்பம், பிரமை இன்னும் 10 வருஷங்கள்ல அழிஞ்சிடும். ஆனா, சினிமா அழியாது. கோவில்பட்டி, மதுரை, கோயம்புத்தூர்னு படம் எடுத்து, அங்கேயே சில தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணிக்குவாங்க. அந்த எதிர்கால விருட்சத்துக்கு முதல் விதையைப் போட்டு இருக்கும் இந்த இளைஞர்களுக்கு என் சல்யூட்!''